MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • 9 மாருதி கார்கள் மீது பம்பர் தள்ளுபடி.. புதிய கார் வாங்க இதுதான் சரியான நேரம்.!

9 மாருதி கார்கள் மீது பம்பர் தள்ளுபடி.. புதிய கார் வாங்க இதுதான் சரியான நேரம்.!

மாருதி சுசுகி தனது அரேனா ஷோரூம் மாடல்களுக்கு 2025 டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. புதிய கார் வாங்க அல்லது பழைய காரை மாற்ற இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

1 Min read
Author : Raghupati R
Published : Dec 05 2025, 09:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மாருதி சுசுகி தள்ளுபடி
Image Credit : Google

மாருதி சுசுகி தள்ளுபடி

2025 முடிவுக்கு முன்னர் கார் பிரியர்களுக்கான நல்ல செய்தியை மாருதி சுசுகி வெளியிட்டுள்ளது. அதன் அரேனா ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும் 9 மாதங்களுக்கு டிசம்பர் மாத சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கார் வாங்கவோ அல்லது பழைய காரை மாற்றிக்கொள்ளவோ ​​இது மிகச்சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஆனால் தள்ளுபடியின் அளவு ஷோரூம் இருப்பு மற்றும் நகரத்தைப் பொறுத்து மாறக்கூடும் என்பதால், அருகிலுள்ள அரேனா டீலரைச் சந்தித்து துல்லியமான விவரத்தை அறிந்துகொள்வது நல்லது.

25
அதிகபட்ச சலுகைகள்
Image Credit : Maruti Suzuki

அதிகபட்ச சலுகைகள்

மாருதி சுசுகியின் மிகப் பிரபலமான ஹாட்ச்பேக் Wagon R–க்கு டிசம்பரில் அதிகபட்சமாக ரூ.58,100 வரை நன்மை வழங்கப்படுகிறது. பணத் தள்ளுபடி, மாற்று/ஸ்க்ராப் போனஸ், மற்றும் கூடுதல் சலுகைகள் இதில் அடங்கும். மலிவு விலை, நல்ல மைலேஜ், குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவையால் Wagon R ஏற்கனவே குடும்ப வாடிக்கையாளர்களின் விருப்பமாக உள்ளது.

Related Articles

Related image1
ரூ.15,000-க்கும் மேல் சேமிப்பு.. பஜாஜ் பல்சர் ஹாட்ரிக் ஆஃபர்.. முழு தள்ளுபடி விவரம் இதோ
Related image2
ரூ.1.76 லட்சம் தள்ளுபடியில் ஹோண்டா எலிவேட்.. இந்த ஆண்டின் மிகப்பெரிய தள்ளுபடி.!
35
சிறப்பு தள்ளுபடி
Image Credit : social media

சிறப்பு தள்ளுபடி

Maruti Swift–n பெட்ரோல் மற்றும் பிற மாடல்கள் வாங்குபவர்களுக்கு ரூ.55,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோன்று Alto K10 மற்றும் S-Presso ஆகிய ஆரம்ப நிலை மாடல்களுக்கு ரூ.52,500 வரை நன்மை கிடைக்கிறது. குறைந்த விலை மற்றும் நடைமுறைக்கு ஏற்ற வடிவமைப்பு காரணமாக இந்த இரண்டு கார்களும் எளிதில் வாங்கக்கூடியதாக உள்ளது.

45
விலை குறைப்பு
Image Credit : maruti suzuki

விலை குறைப்பு

Eeco மற்றும் Celerio மாடல்களை டிசம்பரில் வாங்குபவர்களுக்கு ரூ.52,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. சிறிய SUV வகைகளில் பிரபலமான Brezza–க்கு ரூ.40,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் பணத் தள்ளுபடி மற்றும் ஸ்க்ராப் போனஸ் ஆகியவை அடங்கும்.

55
டிசம்பர் கார் ஆஃபர்
Image Credit : Google

டிசம்பர் கார் ஆஃபர்

அதிகம் விற்கப்படும் செடான் Dzire வாங்குபவர்களுக்கு ரூ.12,500 வரை டீலர் நிலை தள்ளுபடி கிடைக்கிறது. சமீபத்தில் இந்த மாடல் இந்திய NCAP பரிசோதனையில் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பெண் பெற்றது என்பது முக்கிய அம்சம் ஆகும். மற்றொரு பிரபலமான குடும்ப MPV Ertiga–க்கு ரூ.10,000 வரை பணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த மாதலுக்கு நல்ல தேவை தொடர்ந்து உள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மாருதி சுசூகி
மாருதி கார்
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
லைசன்ஸ், ஆர்டிஓ தேவையில்லை.. குறைந்த விலையில் கிடைக்கும் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
Recommended image2
சென்னை முதல் மதுரை வரை நான்ஸ்டாப் பயணம்.. 593 கிமீ ரேஞ்ச்.. டாடா பஞ்ச் கார் கலக்குது
Recommended image3
ரூ.1 லட்சம் தள்ளுபடி... இப்படி ஒரு பைக் ஆஃபர் பார்த்ததே இல்லை.. ஆர்டர்கள் குவியுது.!
Related Stories
Recommended image1
ரூ.15,000-க்கும் மேல் சேமிப்பு.. பஜாஜ் பல்சர் ஹாட்ரிக் ஆஃபர்.. முழு தள்ளுபடி விவரம் இதோ
Recommended image2
ரூ.1.76 லட்சம் தள்ளுபடியில் ஹோண்டா எலிவேட்.. இந்த ஆண்டின் மிகப்பெரிய தள்ளுபடி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved