12 நிமிடத்தில் சார்ஜ்.. 650 கிமீ ரேஞ்ச்.. இந்த காருக்கு ஒட்டுமொத்த இந்தியாவே வெயிட்டிங்
நிசான் நிறுவனம் சீன சந்தைக்காக தனது புதிய பிரீமியம் எஸ்யூவி மாடலான NX8-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன வடிவமைப்பு, இரட்டை இன்ஃபோடெயின்மென்ட் ஸ்க்ரீன்கள் மற்றும் அதிவேக சார்ஜிங் போன்ற அம்சங்கள் இதை ஒரு எதிர்கால எஸ்யூவியாக நிலைநிறுத்துகின்றன.

நிசான் புதிய கார்
சீன கார் சந்தையில் மீண்டும் பெரிய கவனத்தை ஈர்க்கும் வகையில், ஜப்பானிய நிறுவனம் நிசான் தனது புதிய பிரீமியம் எஸ்யூவி மாடலான நிசான் NX8-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல் குறிப்பாக சீன சந்தைக்காக குறிப்பிடப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் புதிய “N Series” வரிசையில் இடம்பெறும் முக்கிய எஸ்யூவி ஆகும். இதற்கு முன் N6 மற்றும் N7 மாடல்களும் அறிமுகமாகியுள்ளன. BEV (முழு மின்சாரம்) மற்றும் EREV (எக்ஸ்டெண்டட் ரேஞ்ச்) என இரண்டு பவர்ட்ரெயின் ஆப்ஷன்களுடன் வரும் இந்த கார், நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ரேஞ்ச் எவ்வளவு?
இந்த எஸ்யூவி-வின் முக்கிய ஹைலைட் அதன் ரேஞ்ச் தான். EREV மாடலில், 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் மின்மோட்டார் இணைந்து செயல்படுகிறது. இதன் மூலம், முழு சார்ஜில் மட்டும் மின்சாரத்தில் 310 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும். மேலும், பெட்ரோல் மூலம் மொத்தமாக 1,450 கிலோமீட்டர் வரை செல்லலாம் என்று நிறுவனம் தெரிவிக்கிறது. இதனால், நீண்ட பயணங்களில் சார்ஜ் கவலை குறையும். அளவுகள் மற்றும் வடிவமைப்பைப் பார்க்கும்போது, NX8 கார் 4,870 மிமீ நீளம், 1,920 மிமீ அகலம் மற்றும் 1,680 மிமீ உயரம் கொண்டதாக உள்ளது.
அசத்தல் அம்சங்கள்
2,917 மிமீ வீல்பேஸ் இருப்பதால், உள்ளக இட வசதி அதிகமாக இருக்கும். வடிவமைப்பில் நிசான்-ன் புதிய V-Motion ஸ்டைல் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் குலோஸ் கிரில், முழு அகல DRL மற்றும் ஸ்ப்ளிட் ஹெட்லெம்ப் அமைப்பு காணப்படுகிறது. பின்புறத்தில் OLED டெய்ல் லைட்ஸ், ஃபிளாஷ் டோர் ஹாண்டில்கள் போன்ற அம்சங்கள் கார் தோற்றத்தை மாற்றுகின்றன. மிகவும் லக்சுரி மற்றும் டெக்னாலஜி நிறைந்ததாக உள்ளது. இரண்டு பெரிய 15.6 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்க்ரீன்கள் மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.
650 கிமீ வரை ரேஞ்ச்
இந்த அமைப்பு Qualcomm Snapdragon 8295P சிப்செட்டால் இயக்கப்படுகிறது, அதனால் செயல்திறன் மென்மையாக இருக்கும். பாதுகாப்பு அம்சங்களிலும் இந்த கார் முன்னிலையில் உள்ளது. ADAS போன்ற முன்னேற்றமான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. பவர் மற்றும் செயல்திறனில், BEV மாடல் இரண்டு மோட்டார் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. 215 kW மற்றும் 250 kW சக்தி அளவுகள் வழங்கப்படுகின்றன. 81 kWh பேட்டரி மூலம் கிடைக்கும் 650 கிமீ வரை ரேஞ்ச். மேலும், 463 kW அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி காரணமாக, வெறும் 12 நிமிடங்களில் 10% முதல் 80% வரை சார்ஜ் செய்ய முடியும். இந்த அம்சங்கள் அனைத்தும் சேர்ந்து, NX8-ஐ எதிர்கால எஸ்யூவி மாடல்களின் முன்னோடியாக மாறுகின்றன.

