MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ரூ.3,962 இஎம்ஐ போதும்.. அதிக மைலேஜ் தரும் ஹோண்டா பைக்கை வாங்கலாம்.. விலை இவ்வளவு தானா

ரூ.3,962 இஎம்ஐ போதும்.. அதிக மைலேஜ் தரும் ஹோண்டா பைக்கை வாங்கலாம்.. விலை இவ்வளவு தானா

இந்தியாவின் பிரபலமான 125cc கம்யூட்டர் பைக்கான ஹோண்டா ஷைன், அதன் நம்பகமான என்ஜின் மற்றும் மென்மையான பயண அனுபவத்திற்காக அறியப்படுகிறது. வெவ்வேறு கால அவகாசங்களுக்கான மாதத் தவணை (EMI) கணக்கீடுகளை இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Apr 18 2026, 09:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஹோண்டா ஷைன் பைக்
Image Credit : Google

ஹோண்டா ஷைன் பைக்

இந்திய இருசக்கர வாகன சந்தையில் “டெய்லி கம்யூட்டர்” பைக்குகள் எப்போதும் ஹாட் கேடகரியாகவே இருந்து வருகின்றன. முன்பு 100–110cc பைக்குகள் அதிகமாக விற்பனையாகினாலும், தற்போது 125cc செக்மென்ட் அதற்குப் பதிலாக முன்னிலையில் உள்ளது. இந்த பிரிவில் மக்கள் அதிகம் விரும்பும் மாடல்களில் ஒன்றாக Honda Shine 125 திகழ்கிறது. என்ஜின், நம்பகமான செயல்திறன் மற்றும் மென்மையான வசதியான ரைடு ஆகியவை இதன் முக்கிய பலங்கள். தற்போது இது டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.81,502 முதல் ரூ.85,862 வரை உள்ளது. சமீபத்தில் லிமிடெட் எடிஷனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

25
ஹோண்டா ஷைன்
Image Credit : Google

ஹோண்டா ஷைன்

இந்த பைக்கில் 123.94cc கொள்ளளவு கொண்ட சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் வருகிறது. இந்த என்ஜின் 7,500 rpm-ல் 10.6 bhp பவரையும், 6,000 rpm-l 11 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. நகரப் போக்குவரத்து சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு டியூன் செய்யப்பட்டிருப்பதால், நல்ல மைலேஜ் மற்றும் சீரான பயணம் கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related Articles

Related image1
வெயில் காலத்தில் பைக், கார் டேங்கை ஃபுல் செய்யலாமா? செய்யக்கூடாதா?
Related image2
Royal Enfield EV: வெறும் 2 மணிநேரத்தில் ஃபுல் சார்ஜ்! மிரட்ட வரும் ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக்!
35
ஹோண்டா ஷைன் இஎம்ஐ
Image Credit : Google

ஹோண்டா ஷைன் இஎம்ஐ

இந்த பைக்கை இஎம்ஐ மூலம் வாங்க விரும்புவோருக்கு மாத தவணை எவ்வளவு வரும் என்பது முக்கியமான கேள்வியாக இருக்கும். உதாரணமாக, டிஸ்க் வேரியண்ட் விலை ரூ.85,862 எனக் கொண்டு, 100% லோன் எடுத்ததாக வைத்துக் கொள்ளலாம். வட்டி விகிதம் 9.5% என எடுத்துக்கொண்டால், நீங்கள் தேர்வு செய்யும் கால அவகாசத்தைப் பொறுத்து இஎம்ஐ மாறும். 12 மாத காலத்திற்கு லோன் எடுத்தால், மாதம் சுமார் ரூ.7,548 இஎம்ஐ செலுத்த வேண்டி வரும். இதன் மொத்த வட்டி சுமார் ரூ.4,717 ஆகும்.

45
குறைந்த இஎம்ஐ
Image Credit : Google

குறைந்த இஎம்ஐ

அதே நேரத்தில், 24 மாத கால அவகாசத்தை தேர்வு செய்தால், மாத இஎம்ஐ குறைந்தது ரூ.3,962 ஆக இருக்கும். ஆனால் இங்கு நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த வட்டி தொகை அதிகரித்து சுமார் ரூ.9,219 ஆகும். இதனால், குறைந்த இஎம்ஐ வேண்டுமா அல்லது குறைந்த வட்டி செலவா என்பது உங்கள் தேர்வாகும். நீண்ட கால லோன் எடுத்தால் மாதச்சுமை குறையும், ஆனால் மொத்த செலவு அதிகரிப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

55
இந்திய குடும்பங்களுக்கு ஏற்ற தேர்வு
Image Credit : Google

இந்திய குடும்பங்களுக்கு ஏற்ற தேர்வு

மேலும், இங்கே கூறப்பட்ட இஎம்ஐ கணக்கீடு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. நீங்கள் செலுத்தும் டவுன் பேமெண்ட், வட்டி விகிதம், வங்கி நிபந்தனைகள் போன்றவற்றின் அடிப்படையில் உண்மையான இஎம்ஐ மாறுபடலாம். எனவே, வாங்கும் முன் அருகிலுள்ள ஹோண்டா ஷோரூமில் சென்று தற்போதைய ஃபைனான்ஸ் ஆஃபர்களை சரிபார்ப்பது நல்லது. அதிக டவுன் பேமெண்ட் கொடுத்தால் வட்டி சுமை குறையும். குறுகிய கால லோன் தேர்வு செய்தால் மொத்த செலவும் குறையும். சிறிய குடும்பங்களுக்கு நம்பகமான மற்றும் கம்ஃபர்டபிள் பைக் தேவைப்படுபவர்களுக்கு இந்த மாடல் ஒரு நல்ல தேர்வாக உள்ளது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஹோண்டா பைக்
ஹோண்டா ஷைன்
பைக்குகள்
ஆட்டோ

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஹூண்டாய் ஹைப்ரிட் SUV-கள்: டாடாவுக்கு போட்டியாக வரும் 3 புதிய மாடல்கள்!
Recommended image2
12 நிமிடத்தில் சார்ஜ்.. 650 கிமீ ரேஞ்ச்.. இந்த காருக்கு ஒட்டுமொத்த இந்தியாவே வெயிட்டிங்
Recommended image3
ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் டாப் 10 டாடா கார்கள்: மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் முழு விவரம்!
Related Stories
Recommended image1
வெயில் காலத்தில் பைக், கார் டேங்கை ஃபுல் செய்யலாமா? செய்யக்கூடாதா?
Recommended image2
Royal Enfield EV: வெறும் 2 மணிநேரத்தில் ஃபுல் சார்ஜ்! மிரட்ட வரும் ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved