- Home
- Astrology
- Astrology: 30 ஆண்டுகளுக்குப் பிறகு எழுச்சி பெறும் சனி பகவான்.! 2026-ல் நடக்கப் போகும் அதிசயம்.!
Astrology: 30 ஆண்டுகளுக்குப் பிறகு எழுச்சி பெறும் சனி பகவான்.! 2026-ல் நடக்கப் போகும் அதிசயம்.!
Shani Uday 2026: சனி பகவான் விரைவில் மீன ராசியில் உதயமாக இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மீன ராசியில் உதயமாகும் சனி பகவான்
ஜோதிடத்தில் ஒரு கிரகமானது சூரியனுக்கு மிக அருகில் வரும் பொழுது அஸ்தமன நிலையை அடையும். குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின்னர் அந்த கிரகம் மீண்டும் உதயமாகும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் மீன ராசியில் உதயமாக இருக்கிறார். மீன ராசி குரு பகவானுக்கு சொந்த ராசி என்பதால் சனி பகவானின் இந்த நிலை சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
சனி பகவானின் உதயம் மிதுன ராசிக்கு மிகவும் சாதகமாக இருக்கும். சனி பகவான் மிதுன ராசியின் பத்தாவது இடமான தொழில் ஸ்தானத்தில் உதயமாக இருக்கிறார். எனவே இந்த காலகட்டத்தில் உங்கள் வேலை மற்றும் வணிகத்தில் குறிப்பிட தகுந்த லாபத்தை அனுபவிப்பீர்கள். வேலை இல்லாதவர்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான வழிகள் திறக்கப்படும். உங்கள் கடின உழைப்பு பாராட்டப்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். வணிகம் செய்து வருபவர்கள் எதிர்பாராத லாபத்தைப் பெறுவீர்கள். முதலீடுகள் மூலமும் நல்ல வருமானம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் நான்காவது வீட்டில் சனி பகவான் உதயமாக இருக்கிறார். நான்காவது வீடு சுக ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த காலக்கட்டத்தில் தனுசு ராசி காரர்களுக்கு பொன், பொருள், வசதிகள் கிடைக்கும். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையில் புதிய உச்சங்களை தொடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நல்லிணக்கமும் அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் நற்பெயர் வளரும். ஆரோக்கியம் மேம்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் தேடி வரும்.
மகரம்
சனி பகவானின் உதயம் மகர ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். சனி பகவான் மூன்றாவது வீட்டில் உதயமாக இருக்கிறார். சனி பகவான் மகர ராசியின் அதிபதியாக விளங்குவதால், இந்த காலக்கட்டத்தில் உங்களின் ஆற்றல், தைரியம், வீரம் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றமும், திடீர் வாய்ப்புகளும் உருவாகும். முன்னேற்றப் பாதை கிடைக்கும். சொத்து தொடர்பான ஆதாயங்கள் கிடைக்கும். முதலீடுகள் உங்களுக்கு பலனளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உங்களின் புதிய திட்டங்கள் வேகமெடுக்கும். இலக்குகளை விரைவாக அடைவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

