- Home
- Astrology
- Ketu Peyarchi: 2026-ல் ராசியை மாற்றும் கேது.! செல்வ செழிப்பை பெறப்போகும் ராசிகள்.! அதிர்ஷ்டம் கொட்டப்போகுது.!
Ketu Peyarchi: 2026-ல் ராசியை மாற்றும் கேது.! செல்வ செழிப்பை பெறப்போகும் ராசிகள்.! அதிர்ஷ்டம் கொட்டப்போகுது.!
Ketu Peyarchi 2026 Rasi Palangal: 2026 ஆம் ஆண்டு கேது பகவான் தனது ராசியை மாற்றுகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் மிகுந்த பலன்களை அடைய உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Ketu Peyarchi 2026 Rasi Palangal
ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களும் தங்கள் நிலையை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கின்றன. கிரகங்களின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் என்பது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் கேது பகவான் 2026 ஆம் ஆண்டு தனது ராசியை மாற்றப் போகிறார். 18 மாதங்களுக்கு ஒரு முறை ராசியை மாற்றும் அவர் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழைய இருக்கிறார்.
ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது ஆகிய இரு கிரகங்களும் நிழல் கிரகமாக அறியப்படுகின்றன. இந்த இரண்டு கிரகங்களும் எப்போதும் வக்கிர (பின்னோக்கிய) இயக்கத்திலேயே நகரும். கேது பகவான் ‘மோட்ச காரகன்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் ஆன்மீக உறவுகள், துறவு, ஆராய்ச்சி மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளுடன் தொடர்புடையவர்.
கேது பகவான் ஒரு ராசியில் 3,6,11 ஆம் வீடுகளில் சஞ்சரிக்கும் பொழுது சிறப்பான நன்மைகளை வழங்குவார் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. 2026-ல் நடக்க உள்ள கேது பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
2026 ஆம் ஆண்டு நடக்கும் கேதுவின் சஞ்சாரம் கடக ராசியின் மூன்றாவது வீடான தைரிய ஸ்தானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக கடக ராசிக்காரர்களுக்கு தைரியம், வெற்றி, முன்னேற்றம் கிடைக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகி, முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத அளவிற்கு வருமானம் அதிகரிக்கும். உபரி வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். எண்ணிய காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். சகோதரர் வழி மூலம் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்கு கேதுவின் சஞ்சாரம் 11 வது வீடான லாப ஸ்தானத்தில் நடைபெறுகிறது. இதன் காரணமாக துலாம் ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வேலையில் எதிர்பாராத வளர்ச்சி முன்னேற்றத்தை அனுபவிக்க இருக்கின்றனர். புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். வேலையில்லாமல் இருந்து வருபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண பேச்சு வார்த்தை கைகூடும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வங்கி இருப்பு உயரும். அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சி கூடும்.
கும்பம்
கும்ப ராசியின் ஏழாவது வீட்டில் கேது பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். எனவே கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் புதிய வாய்ப்புகளை தேடித்தரும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். மேற்கொள்ளும் பயணங்கள் அனைத்தும் வெற்றியைத் தரும். தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்கள் அதிக லாபத்தைப் பெறுவார்கள். புதிய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகள் மற்றும் ஆதரவு கிடைக்கக்கூடும்.

