- Home
- Astrology
- Budhan Peyarchi 2025: 100 ஆண்டுகள் கழித்து புதன் பகவான் உருவாக்கிய இரட்டை ராஜயோகங்கள்.! கொடி கட்டி பறக்கப்போகும் 5 ராசிகள்.!
Budhan Peyarchi 2025: 100 ஆண்டுகள் கழித்து புதன் பகவான் உருவாக்கிய இரட்டை ராஜயோகங்கள்.! கொடி கட்டி பறக்கப்போகும் 5 ராசிகள்.!
Budhan Peyarchi 2025 Rasi Palangal: டிசம்பர் 2025-ல் புதன் பகவான் சூரியன் மற்றும் சுக்கிரன் இருவருடன் இணைந்து இரண்டு ராஜயோகங்களை உருவாக்குகிறார். அது குறித்தும், அதனால் பலன் பெறும் ராசிகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

புதன் பெயர்ச்சி 2025
ஜோதிடத்தில் புதன் பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். அவர் புத்திசாலித்தனம், பேச்சுத் திறன், தகவல் தொடர்பு, வர்த்தகம், பகுத்தறிவு ஆகியவற்றை குறிக்கும் கிரகமாக விளங்கி வருகிறார். புதன் பகவான் டிசம்பர் 6ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழைந்திருக்கிறார். விருச்சிக ராசியில் ஏற்கனவே சூரியன் மற்றும் சுக்கிரன் இருவரும் சஞ்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதன் பகவான் சூரியனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகத்தையும், சுக்கிரனுடன் இணைந்து லட்சுமி நாராயண ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளார். இந்த ராஜயோகங்களால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு ஏழாவது வீட்டில் இந்த இரண்டு ராஜயோகங்களும் உருவாகிறது. ஏழாவது வீடு களத்திர ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இது கணவன் மனைவி கூட்டாளியை குறிக்கும் இடமாகவும் கருதப்படுகிறது. எனவே ரிஷப ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கை இனிமையாகும். புதிய கூட்டாண்மை மூலம் தொழிலில் பெரிய வளர்ச்சியைக் காண்பீர்கள். தடைப்பட்ட திருமண முயற்சிகள் கைகூடும். தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்
இந்த இரண்டு ராஜ யோகங்களும் விருச்சிக ராசியின் ஜென்ம ராசியில் உருவாகிறது. இதன் காரணமாக விருச்சிக ராசிக்காரர்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உயரும். ஆரோக்கியம் மேம்படும். துணிச்சலான முடிவுகளை எடுத்து வெற்றியைக் காண்பீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். தொழில் மற்றும் வணிகத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். சிறிய அளவில் தொழில் செய்து வருபவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான காலகட்டமாகும். திருமண வரன் தேடி வரும். தொழிலில் கூட்டாளிகள் மூலம் ஆதாயம் உண்டாகும்.
சிம்மம்
சிம்ம ராசியின் சுக ஸ்தானமான நான்காவது வீட்டில் இந்த இரண்டு ராஜ யோகங்களும் உருவாகிறது. எனவே இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் மேம்படும். இதுவரை வாட்டி வதைத்து வந்த உடல்நலக் கோளாறுகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகங்கள் உருவாகும். அனைத்து வகையான சுகங்களையும் அனுபவிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான புதிய கதவுகள் திறக்கப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பொறுப்புகள் அல்லது சம்பள உயர்வு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 10வது வீட்டில் இந்த இரண்டு ராஜயோகங்களும் உருவாகிறது. பத்தாவது வீடு கர்ம ஸ்தானம் அல்லது தொழில் ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக கும்ப ராசிக்காரர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம், பதவி உயர்வு கிடைக்கலாம். அதிருப்தியில் வேலை பார்த்து வருபவர்களுக்கு பணி மாறுதல் கிடைக்கலாம். குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய புதிய வேலைவாய்ப்புகள் தேடி வரும். சமூகத்தில் கௌரவம் உயரும். நிதி நிலைமை கணிசமாக மேம்படும். வங்கி இருப்பு உயரும். இதன் காரணமாக பொருளாதாரம் சீரடையும்.
மீனம்
மீன ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் இந்த இரண்டு ராஜயோகங்களும் உருவாகிறது. ஒன்பதாவது வீடு அதிர்ஷ்டம், தந்தை, உயர்கல்வி, ஆன்மீகம் ஆகியவற்றை குறிக்கும் இடமாகும். எனவே இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தந்தை மூலம் ஆதாயங்கள் உண்டாக்கலாம். உயர் கல்விக்கான முயற்சிகள் வெற்றிபெறும். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த கனவுகள் நிறைவேறத் தொடங்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

