- Home
- Astrology
- Budhan Peyarchi : சொந்த ராசிக்கு திரும்பிய புதன்.! இன்று முதல் 3 ராசிகளுக்கு நல்ல காலம் பொறக்கப் போகுது.!
Budhan Peyarchi : சொந்த ராசிக்கு திரும்பிய புதன்.! இன்று முதல் 3 ராசிகளுக்கு நல்ல காலம் பொறக்கப் போகுது.!
Budhan Peyarchi in Kanni Rasi: செப்டம்பர் 15 புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழைய இருப்பதால் பத்ர ராஜயோகம் உருவாக உள்ளது. இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் நல்ல நன்மைகளைப் பெற உள்ளனர்.

புதன் பெயர்ச்சி 2025
ஜோதிடத்தின்படி 9 கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அப்போது பிறகிரகங்களுடன் இணைந்து சில ராஜயோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் செப்டம்பர் 15 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழைய இருக்கிறார்.
இதன் காரணமாக பத்ர மகாபுருஷ யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் சில ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கவுள்ளது. இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிப்பதோடு, தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் உள்ளன. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்
புதன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் உருவாகும் பத்ர ராஜயோகம் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும், சாதகமாகவும் இருக்கும். புதன் உங்கள் ராசியின் ஒன்பதாவது வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக தொழிலில் பல நேர்மறையான மாற்றங்கள் நடக்க இருக்கிறது. புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும். சம்பள உயர்வு, வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம். நீங்கள் பணி தொடர்பாக வெளிநாட்டிற்கு பயணம் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலதிபர்கள் நிதி ரீதியாக வளமாக உணர்வீர்கள். மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாட்டு பயணம் செய்யும் கனவுகளும் நிறைவேறும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு பத்ர யோகம் அதிர்ஷ்டத்தை வழங்க உள்ளது. இந்த யோகம் உங்கள் ராசியின் பத்தாவது வீடான கர்ம பாவத்தில் உருவாகிறது. இதன் காரணமாக உங்களுக்கு செல்வம் அபரிமிதமாக அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் விலகி சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். புதிய வீடு, மனை, நிலம் வாங்கும் யோகம் உண்டு. புதிய வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும். நீங்கள் திட்டமிட்ட செயல்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்கள் பணம் எங்கேனும் சிக்கி இருந்தால் அவை கைக்கு வந்து சேரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் சமநிலையைப் பேணுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு பத்ர ராஜயோகத்தால் நல்ல காலம் தொடங்கவுள்ளது. புதன் உங்கள் ராசியிலிருந்து இரண்டாம் இடத்திற்கு சஞ்சரிக்க போகிறார். எனவே உங்களது பேச்சுத் திறன் அதிகரிக்கும். இதன் காரணமாக மக்கள் ஈர்க்கப்படுவார்கள். பேச்சு தொடர்பான போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். உங்கள் நிதி நிலை மேம்படும். சமூகத்தில் உங்களுக்கான சொந்த அடையாளத்தை உருவாக்குவீர்கள். சந்தைப்படுத்துதல், மார்க்கெட்டிங், பேச்சு, வங்கி மற்றும் ஊடகங்களுடன் தொடர்புடைய பணிகளில் இருப்பவர்களுக்கு இந்த காலக்கட்டம் மிகவும் சாதகமானதாக அமையும்.

