நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ காந்தி வயது மூப்பு காரணமாக விலக இருப்பதால், அடுத்த பாஜக வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நகரமன்ற தலைவராக இருந்த மீனாதேவ், சதீஷ் ராஜா உள்ளிட்டோர் வேட்பாளர் போட்டியில் தீவிரமாக உள்ளனர்.
பாரதிய ஜனதாக கட்சியின் தமிழக கோட்டையாக விளங்கும் நாகர்கோவிலில் மீண்டும் பாஜக கொடி பட்டொளி வீசி பறக்க அனைத்து முயற்சிகளை பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வசிக்கும் இந்த பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாஜகவின் சிட்டிங் எம்எல்ஏவாக இருப்பவர் மூத்த தலைவரும், ஆர்எஸ்எஸ் பிரமுகருமான எம்.ஆர்.காந்தி வயது மூப்பின் காரணமாக தேர்தல் அரசியலில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சில புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் நகரமன்ற தலைவராக இருந்த மீனாதேவ் உள்ளிட்ட பல பிரமுகர்கள் சீட்டு வாங்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று கன்னியாகுமரியை சேர்ந்த சதீஷ் ராஜா என்பவர் பாஜக மாநில வர்த்தக பிரிவு தலைவராக இருக்கக்கூடிய இவரும் களத்தில் குதித்துள்ளார்.

சதீஷ் ராஜாவின் பின்னணி
கன்னியாகுமரி மாவட்டம், தெற்கு தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் ராஜா. சாதாரண குடும்ப சூழலில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே சமூக சேவை மற்றும் மக்கள் பணியில் ஆர்வம் கொண்டவராக வளர்ந்தார். 2014ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, அடிப்படை தொண்டராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். ஆரம்ப காலத்தில் வீடு வீடாக சென்று கட்சியின் கொள்கைகளை விளக்குவது, உள்ளூர் பிரச்சனைகளில் நேரடியாக களமிறங்குவது, மக்களின் தேவைகளை தலைமைக்கு கொண்டு செல்வது போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர்.
குடும்ப பின்னணி
திருமணமான சதீஷ் ராஜாவின் மனைவி டாக்டர் ஸ்ரீதேவி (MBBS). குடும்பத்தின் முழு ஆதரவும் அவரது அரசியல் பயணத்திற்கு வலுவான தூணாக உள்ளது.
எதிர்கால அரசியல் இலக்கு
மக்கள் நலன், வணிக வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சமூக ஒற்றுமை, மாநில பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை மையமாக வைத்து தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். தமிழக அரசியலில் மக்கள் நம்பிக்கை கொண்ட, வலுவான தலைவராக உருவாக வேண்டும் என்பதே அவரது நீண்டகால இலக்காக உள்ளது. இவருக்கு 2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இம்முறை தமிழகம் வந்த பிரதமரை சதீஷ் ராஜா சந்தித்ததை அடுத்து நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பெயர் பட்டியலில் இவர் பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


