ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டி தொடங்கும் நேரம்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி கிரிக்கெட்டின் தாயகமான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11 முதல் 15 வரை நடைபெற உள்ளது. 2021–2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதே வேளையில் தென்னாப்பிரிக்கா அணி இப்போது முதன் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
இதுவரை ஐசிசி பெரிய தொடர்களை வெல்லாத தென்னாப்பிரிக்கா அணி இதிலாவது மகுடம் சூடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரு அணிகளிலும் தரம்வாய்ந்த வீரர்கள் உள்ளதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை எந்த டிவி, ஓடிடியில் பார்க்கலாம். போட்டி தொடங்கும் நேரம் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
இந்தியாவில் WTC இறுதிப் போட்டியை எந்த டிவியில் பார்க்கலாம்?
இந்தியாவில் WTC இறுதிப் போட்டியை நீங்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் தமிழ் இந்தி, ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளில் பார்க்கலாம்.
இந்தியாவில் WTC இறுதிப் போட்டியை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
WTC இறுதிப் போட்டியை ஜியோஹாட்ஸ்டார் JioHotstar ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்.
தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா WTC இறுதிப் போட்டி தொடங்கும் நேரம் என்ன?
WTC இறுதிப் போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும்.
WTC இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள்:
ஆஸ்திரேலிய அணி: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் கிரீன், பியூ வெப்ஸ்டர், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட், நாதன் லயன் மற்றும் மாட் குஹ்னெமன். ரிசர்வ் வீரர்: பிரெண்டன் டாகெட்.
தென்னாப்பிரிக்கா அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஜோர்ஜி, ரியான் ரிக்கல்டன், எய்டன் மார்க்ரம், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, கேசவ் மகாராஜ், டான் பீட்டர்சன் மற்றும் சேனுரான் முத்துசாமி.


