கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினியை திமுக அரசு கொடுக்கக்கூடிய நோக்கம் 2026 தேர்தல் வரவிருக்கிறது. அவர்கள் வாக்களிப்பவர்களாக இருக்கிறார்கள். ஆகவே, மடிக்கணினி வழங்கும் திட்டத்தை திமுக அரசு, கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் செயல்படுத்தி வருகிறது
தேர்தலை நோக்கமாகக் கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினிகளை வழங்காமல் 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு திமுக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக மாணவர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் 2021 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து அதிமுக சார்பில் பல்வேறு முன்னெடுத்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. பள்ளியில் படிக்கக்கூடிய 11, 12வது வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் தொடங்கப்பட்டது. 2019 வரை 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டிருந்தது.

2021 இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மடிக்கணினி வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மீண்டும் விரைவில் மடிக்கண்டிகளை மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது திமுக அரசு. ஆனால், அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் எந்த எதிர்ப்பும் இல்லை. அதை வழங்கிக் கொள்ளலாம். ஆனால், கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவது போல் பள்ளியில் படிக்கும் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏன் வழங்கவில்லை என்கிற கோரிக்கையை ஆர்ப்பாட்டத்தில் முன் வைத்துள்ளனர்.
பாரபட்சம் இன்றி 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். எளிய மக்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினியை திமுக அரசு கொடுக்கக்கூடிய நோக்கம் 2026 தேர்தல் வரவிருக்கிறது. அவர்கள் வாக்களிப்பவர்களாக இருக்கிறார்கள். அதனை மனதில் வைத்துக் கொண்டுதான் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை திமுக அரசு, கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் செயல்படுத்தி வருகிறது’’ எனவும் இந்த போராட்டத்தில் குற்றம்சாட்டியுள்ளனர்.

