- Home
- Cinema
- நான் தவிர்த்த நூல் ஒன்று உள்ளது... அது ‘பூணூல்’..! ஐயங்கார் வீட்டில் பிறந்த கமலின் சமத்துவம்
நான் தவிர்த்த நூல் ஒன்று உள்ளது... அது ‘பூணூல்’..! ஐயங்கார் வீட்டில் பிறந்த கமலின் சமத்துவம்
ஒரு தமிழனின் சரித்திரத்தை தமிழ் படமாக எடுக்கும் போது தெலுங்கராக சித்தரித்தின் உள் நோக்கம் என்ன? நாயுடு சாதியை தூக்கி பிடித்தால் விஜய நகர கூஜா சினிமா... ஓட்டுக்காக பூணூல் இல்லா அரசியல்... இவ்வளவுதான் கமலின் சமத்துவம்

புரியும் மொழியில் புரியாத வகையில் பேசும் கமல்
புரியும் மொழியில் புரியாத வகையில் பேசத் தெரிந்து கொண்ட நடிகர் கமல் ஹாசன். மக்களிடம் ஓட்டு கேட்டு, கிடைக்காத போது சீட்டுக்காக வளைய தெரிந்து கொண்ட அரசியல்வாதி கமல் ஹாசன். அவரின் குலவேஷமும், மொழி வேஷமும், மதவேஷமும் அப்படித்தான்...
கமல்ஹாசன் கதை, திரைக்கதை வசனம் எழுதி, தயாரித்து நடித்த படம், விஸ்வரூபம். சிறுபான்மையினர் மீதான தன் பாசத்தை வெளிக்காட்டும் விதமாக, விஸ்வரூபம் என்ற வார்த்தையை, உருது எழுத்து வடிவில் வெளியிட்ட மொழி பற்றாளர் கமல்ஹாசன். அதேநேரம், தங்களுக்கு எதிரான படம் என்று கூறி, படத்தை வெளியிட இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, 'இப்படம் வெளியாகவில்லை என்றால், இந்நாட்டை விட்டு வெளியேறி விடுவேன்' என்று சூளுரைத்த போதே மக்களுக்கு புரிந்துவிட்டது, இவருக்கு வாயில், 'வாஸ்து' சரியில்லை என்பது!
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கியவர், 'ஊழலுக்கு எதிராக பயணிக்க விரும்புவோர் என்னுடன் வரலாம். இல்லையென்றால் வாசல் கதவு திறந்திருக்கு; இப்போதே சென்று விடலாம்' என்றபோது, தமிழக மக்களுக்கு அவர் இரட்டை வேடத்தில் நடித்த இந்தியன் படம் தான் நினைவுக்கு வந்தது. அப்படத்தில், லஞ்சம் வாங்குவோரை தீர்த்து கட்டும், 'இந்தியன் தாத்தா' என்ற சுதந்திர போராட்ட தியாகி வேடத்திலும், காரியம் சாதிக்க எவருடைய காலையையும் பிடிக்கத் தயங்காத குணம் கொண்ட அவர் மகன் சந்துரு என, இரு வேடங்களில் நடித்திருப்பார் கமல்ஹாசன் .
முறைவாசல் தெளிக்கும் சந்துரு
இந்தியன் தாத்தா கதாபாத்திரம்போல், ஊழல் குடும்ப அரசியலுக்கு எதிராக டார்ச் லைட் அடித்து, புரியாத மொழியில் கமல் பேசவே, 'அட ஊழலுக்கு எதிராக என்னவோ செய்யப் போகிறார்... இவரால், தமிழகத்தில் நல்லாட்சி மலர்ந்து விடும்' என்று நம்பியவர்கள் பலர். ஆனால், சட்டமன்றத் தேர்தலில் தோற்று, சீட்டுக்காவும், நோட்டுக்காவும் திமுக,வின் காலடியில் விழுந்த பின்தான் புரிந்தது... அவர் இந்தியன் தாத்தாவே அல்ல... பிரேக் இன்ஸ்பெக்டர் வேலைக்காக, சம்பந்தப்பட அதிகாரியின் வீட்டில் முறைவாசல் தெளிக்கும் சந்துரு கேரக்டர் என்பது...
இந்தியன் படத்தில் அதிகாரியின் வீட்டு வாசலை கூட்டி பெருக்கி தெளித்தார். இப்போது அறிவாலயத்தில் முறைவாசல் தெளித்துக் கொண்டுள்ளார்... ஒரு ராஜ்ய சபா சீட்டுக்காக. கடைசியில், தேரை இழுத்து தெருவில் விட்டது போல் ஆகிவிட்டது இவரை நம்பி அரசியலுக்கு வந்த பல லட்சம் பேரின் நிலை! ஐயங்கார் வீட்டில் பிறந்த கமலின் சமத்துவத்திலும் முரண்பாடுகள். சாஸ்திரம் பேசுகிற பிராமணரை நம்பலாம். ஆனால், நாத்திகம் பேசுகிற பார்ப்பானை நம்ப கூடாது என்கிற அளவில் இருக்கிறது கமலின் சமத்துவம்.
நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது கமல்ஹாசன் ஐயா? என்று கேட்டார் அவரது ரசிகர் ஒருவர்.
அதற்கு, ‘‘நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், ‘பூணூல்’ அதனாலேயே அதை தவிர்த்தேன்’’ என்றார் கமல்ஹாசன். படித்த நூலைப் பற்றிக் கேட்டால் சம்பந்தமே இல்லாமல் தவிர்த்த நூலை கோர்த்து விட்டிருக்கிறார் ‘பிரம்மஹத்தி தோஷம் சூழும்’ என்று வசனம் பேசி நடித்த கமல்ஹாசன்.
ஐயங்கார் கமல்ஹாசனின் முற்போக்கு ஆச்சரியம்..!
கமல்ஹாசன் ஒரு ஸ்ரீவைஷ்ணவ ஐயங்கார் (தமிழ் பிராமணர்) குடும்பத்தில் பரமக்குடியில் பிறந்தவர். அவரது தந்தை டி. ஸ்ரீனிவாச ஐயங்கார், தாயார் ராஜலட்சுமி. இவரது சொந்த தாய் மாமா ராமர் கோயிலை மீட்டெடுத்த பிரபல வழக்கறிஞர் பராசரன். மிகுந்த ஆச்சாரமான குடும்பம். கமல் ஐயர் அல்ல ஐயங்கார். ஐயர்களை விட பல மடங்கு ஆச்சாரம், தீட்டு, பூஜை, புனஸ்காரம் என முழு ஆச்சாரட்தோடு இருப்பவர்கள் ஐயங்காரர்கள். அய்யர்களையே சூத்ராள் எனச் சொல்லி ஒதுக்கி வைப்பார்கள் ஐயங்காரர்கள். ஐயர்கள் ஓரளவுக்கு சகஜமாக பழகுவார்கள். ஆனால், ஐயங்கார்கள் அதிக ஆச்சார, அனுஷ்டானங்களை கடைபிடிப்பவர்கள். அந்தக் குலத்தில் பிறந்த கமல்ஹாசன் இவ்வளவு முற்போக்காக இருப்பது ஆச்சரியம்.
பாரம்பரியமாக ஐயங்கார் சமூகம் மரபுவழி, சடங்குகள் நிறைந்த பிராமண சமூகம் என்றாலும், கமல்ஹாசன் தனது வாழ்க்கையில் பகுத்தறிவுவாதி, நாத்திகர், சமத்துவம், சமூகநீதி, ஜாதி-மத பாகுபாடுகளுக்கு எதிரான சமூகநீதி காவலர் பட்டத்தை
‘பூணூபவர்’. ‘ஐயங்கார் வீட்டில் பிறந்த கமலின் சமத்துவம்’ என்பது கல்லை பாலாய் திரிப்பது. படித்த நூலைப் பற்றிக் கேட்டால் சம்பந்தமே இல்லாமல் தவிர்த்த நூலை சொல்லி, பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டை பாக்குக்கு விலை சொல்கிறார்.
‘‘அவர் என்னதான் சொல்லிக் கொண்டாலும் பிறப்பால் நீங்கள் பிராமணரே.. பூணூல் ஞானத்தின் அடையாளம். அன்பின் பண்பின் சின்னம். அதை நீங்கள் தவிர்த்தது ஆச்சரியம் அளிக்கவில்லை. அணிந்திருந்தால்தான் சங்கடம். அவர் முன்பு ஒருமுறை பேசும்போது, மதம் உள்ளாடை போன்று. அதை பற்றி வெளியே பேச தேவையில்லை என்றார்.
இடத்திற்கு ஏற்ப வர்ணத்தை மாற்றி...
சாதி பரவாயில்லையா அய்யா? அது மேலாடை போல் பேசலாமா அய்யா? பூணூல் உள்ளவரை உங்களால் தமிழன் முதுகில் ஏறி பயணிக்க முடியாது. அதை அறிந்து வழக்கம் போல அடையாளத்தை ஒழித்து, இடத்திற்கு ஏற்ப வர்ணத்தை மாற்றி, தமிழன் முதுகில் ஏறி லட்சியத்தை நிறைவேற்றி வருகின்றீர்கள். ஒரு யூத இனத்தை சேர்ந்தவர், இதை செய்வதில் என்ன ஆச்சரியம் இருக்கபோகிறது. பிக் பாஸ் வீட்டுக்கு பக்ரீத் பிரியாணி அனுப்பியவர், பிள்ளையார் சதுர்த்தி தினத்தில் கொழுக்கட்டை அனுப்புவாரா?
பூணூல் என்பது பிராமணர்களின் ஒரு கலாச்சார அடையாளம். அதனை ஏன் கேவலமாக நினைக்கிறீர்கள்? உங்களை விட தீவிரமாக சாதியை எதிர்த்த பாரதி கூட பூணூலை அகற்றவில்லையே? தமிழர்கள் பிராமணர்களின் மேலாதித்தைத் தான் எதிர்க்கிறார்களே தவிர, பிராமணர்களின் பூணூலை அல்ல!
வாணியை திருமண செய்தபோது பிராமண இந்து முறைப்படிதானே செய்தீர்கள். அதற்கு முன்பே, நான் பகுத்தறிவு கொள்கையால் ஈர்க்கப்பட்டவன் என சிலாகித்துக் கொண்டீர்களே.. ‘சாதி மீது எனக்கு ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை என்றும், எனது குழந்தைகளுக்கு சாதி அடையாளத்தை வழங்கியதில்லை’ என்றும் நீங்கள் கூறினீர்கள். உங்கள் மகள் ஸ்ருதி ஹாசனோ ‘நான் ஐயங்கார் சமூகத்தைச் சேர்ந்தவர்’ என்று மார்தட்டிக் கொண்டாரே. திராவிடக் கட்சித் தலைவர்களை விட, தன்னை ஒரு தீவிர திராவிடராக நிரூபிக்க முயற்சிக்கும் கமல்ஹாசனின் பார்ப்பனர் எதிர்ப்பு ஆச்சரியப்படுவதற்கில்லை.
இவ்வளவுதான் கமலின் சமத்துவம்
ஜெயலலிதாவை, திமுகவினர் பாப்பாத்தி என்று சட்ட சபையிலேயே வசைபாடினார்கள். அவர் உங்களைப் போல அஞ்சி நடுங்கவில்லை. ஆமாம், என்று துணிந்து சொன்னார். ஆனால், சாதி உணர்வில்லாமல் அனைவருக்காகவும் பாடுபட்டார். நான்கு முறை முதல்வரானார்.நடுங்கும் உங்களால் கட்சி ஆரம்பித்தும் வார்டு தேர்தலில் கூட ஜெயிக்க முடியவில்லை. வரதராச முதலியார் சரித்திரத்தை ஏன் வேலு நாயக்கரை நாயகனாக மாற்றி சித்தரித்தீர்கள்? ஒரு தமிழனின் சரித்திரத்தை தமிழ் படமாக எடுக்கும் போது தெலுங்கராக சித்தரித்தின் உள் நோக்கம் என்ன? நாயுடு சாதியை தூக்கி பிடித்தால் விஜய நகர கூஜா சினிமா... ஓட்டுக்காக பூணூல் இல்லா அரசியல்... இவ்வளவுதான் கமலின் சமத்துவம்’’ என்கிறார்கள் விமர்ச்கர்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
