தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை எதிர்த்து ராமதாஸ் தரப்பு சிவில் கோர்ட்டிற்கு வரும் என அன்புமணி தரப்பு சொல்லி வந்தது. நாங்கள் ஏன் போகப் போகிறோம்? இப்போது தீர்ப்பு நகல் வந்திருக்கிறது.
‘‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும். தேர்தல் ஆணையத்தை அன்புமணி தரப்பு ஏமாற்றி இருக்கிறது’’ என ஆதாரத்தை காட்டி பாமக அருள் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘டெல்லி நீதிமன்றத்தில் நடந்த செய்திகள் குறித்து சிலர் தொடர்ந்து பொய்யான செய்திகளையே பரப்பி வருகிறார்கள். அது முழுக்க முழுக்க பொய். ஒன்னும் தெரியாதவனின் புளுகு ரெண்டு நாளில் தெரிந்து விடும். எவ்வளவு கெட்டிக்காரனாக இருந்தாலும் அவனது புளுகு 8 நாட்களில் தெரிந்துவிடும். பாலு என்கிற கெட்டிக்காரனின் புளுகு எட்டே நாளில் தெரிந்து விட்டது. அதை டெல்லி மாட்சிமை தங்கிய நீதி அரசர் மிகத் தெளிவாக தன்னுடைய தீர்ப்பில் சொல்லி இருக்கிறார். மிக அழகாக அந்த உண்மை வெளிவந்து விட்டது. பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் தான்தான் என்றும், ராமதாஸ் தரப்புக்கு சம்பந்தமில்லை என்றும் சொல்லி வந்தார் அன்புமணி.

ராமதாஸ் தரப்பு தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை எதிர்த்து ராமதாஸ் தரப்பு சிவில் கோர்ட்டிற்கு வரும். அதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என அன்புமணி தரப்பு சொல்லி வந்தது. நாங்கள் ஏன் போகப் போகிறோம்? இப்போது தீர்ப்பு நகல் வந்திருக்கிறது. கிட்டத்தட்ட 39 பாயிண்ட்கள். 34 பக்கம். ஒரு அற்புதமான, உண்மையான தீர்ப்பு வெளி வந்திருக்கிறது. இந்த தீர்ப்பு, இன்னும் நீதி சாகவில்லை என்பதை உறுதிப்படுத்தி உண்மையான ,உன்னதமான தீர்ப்பு. தீர்ப்பில் சாரம் 26 -ல் தெளிவாக சொல்லி இருக்கிறது. எந்த முடிவும் அதிகாரத்திற்கும், வரம்புக்கும் அப்பாற்பட்டது. யார் தலைமை என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லாததால் 9.9.2025 அன்றும் 27.11.2025 அன்றும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட கடிதம் செல்லத்தக்கது அல்ல.
அந்த கடிதத்தை வழங்கிய தேர்தல் ஆணையத்துக்கு உரிமை இல்லை என நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அந்த நீதிமன்றம் வழங்கிய கடிதங்கள் என்னவெவென்றால் இவர் தான் பாட்டாளி மக்கள் கட்சியிலே தலைவர் என்று அன்புமணியைக் குறிப்பிட்டு ராமதாஸ் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் கொடுத்திருக்கிறார்கள். டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இப்போது தேர்தல் ஆணையத்தை அன்புமணி தரப்பு எப்படி ஏமாற்றியுள்ளது என்பதற்கு இது ஒரு ஆதாரம். இது எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் கேட்டு கேட்டு பார்த்தோம். கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். பாமக கட்சியினுடைய பொதுக்குழு நடந்தது 28 மே மாதம் அன்றைக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக இருந்த அன்புமணி அவர்கள் அழைப்பு விடுக்கிறார். எதுக்கு அழைப்பு விடுகிறார்? பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு நடக்கிறது. நீங்கள் அனைவரும் வரவேண்டும் என தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கிறார்.
28ஆம் தேதி அந்த கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டம் நடந்து முடிந்த பிறகு, அந்த கூட்டத்தில் நடந்த நிகழ்வு பற்றி பத்திரிகை செய்திகள் வெளி வருகிறது. அதை வெளியிட்டவர் மருத்துவர் ராமதாஸ். அதில், வடிவில் ராமன், அன்புமணி தலைவராக கையெழுத்து போட்டுள்ளார். அதே கடிதத்தை ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதமாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக அன்புமணி அவர்களை தேர்ந்தெடுத்து விட்டோம் எ அனுப்பினார்’’ எனத் தெரிவித்துள்ளார்.

