நட்சத்திர பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்த சுவாரசியமான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
நட்சத்திர பழம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பார்ப்பதற்கு நட்சத்திரம் போல இருப்பதால் இந்த பெயரை பெற்றது. இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட இந்த பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை நீண்ட காலமாக நம்மை ஆரோக்கியமாக வைக்க உதவும். இந்த பழம் வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாக கருதப்படுகிறது. இந்த பழத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே, இந்த நட்சத்திர பழத்தை சாப்பிட்டுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் காணலாம்.
நட்சத்திர பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் :
நட்சத்திர பழத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாகவும் உள்ளன. இது தவிர இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி, சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
நட்சத்திர பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் :
1. அலர்ஜி எதிர்ப்பு..
நட்சத்திர பழம் வைட்டமின் சியின் நல்ல மூலமாக கருதப்படுகிறது. இந்த பழம் உடலிலிருந்து நச்சுக்கள் வெளியேற்றும் மற்றும் சரும அலர்ஜி பிரச்சினையும் தடுக்க உதவுகிறது. அதுபோல குளிர்காலத்தில் தொற்று நோய்க்கு வழி எதிர்த்து போராட இது உதவுகிறது. எலும்புகள், தசைகளில் கொலாஜனை உருவாக்கவும், இரும்புச்சத்தை உறிஞ்சவும் வைட்டமின் சி மிகவும் அவசியம்.
2. இதய ஆரோக்கியத்திற்கு..
நட்சத்திர பழத்தில் பொட்டாசியம், சோடியம் உள்ளன அவை இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதில் கால்சியம் உள்ளதால் இது பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வருவதை தடுக்கும். நட்சத்திர பழமானது இரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயம் தொடர்பான நோய்கள் வராது.
3. இரத்த சர்க்கரை..
நட்சத்திர பழத்தில் இருக்கும் நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் உணவு சாப்பிட்ட பிறகு இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு உயர்வதை தடுக்கவும் செய்யும். எனவே சர்க்கரை நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் கூட இந்த பழத்தை தரளமாக சாப்பிடலாம். மேலும் இந்த பழத்தில் கொழுப்பு குறைவாக உள்ளதால் இது உடலில் கொழுப்பை அதிகரிக்காது.
4. ஜீரண சக்தி அதிகரிக்கும்..
நட்சத்திர பழமானது சிறந்த செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவியாக இருக்கிறது. இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும். இது தவிர வயிறு வீக்கம், வயிறு பிடிப்பு போன்ற வயிறு தொடர்பான சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.
5. உடல் எடையை கட்டுப்படுத்த..
நட்சத்திர பழமானது ஒரு சிறந்த சிற்றுண்டி ஆகும். இதனால் தேவையற்ற நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது தடுக்கப்பட்டும். இதனால் எடையும் போடாது. வளர்சிதை மாற்றத்தை விரிவாக செயல்படுத்தவும், கலோரிகளை விரைவாக எரிக்கவும் இந்த பழம் உதவுகிறது. இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காது. இதனால் உடல் எடையை கட்டுக்குள் இருக்கும்.
6. சரும மற்றும் கூந்தலுக்கு
நட்சத்திர பழத்தில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இந்த பழம் ஆரோக்கியமான முடி வளர்ச்சி மற்றும் பளபளப்பான சருமத்திற்கு உதவுகிறது.


