- Home
- உடல்நலம்
- Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!
Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!
வேகமாக உடல் எடையை குறைக்க புரதம் நிறைந்த இந்த காலை உணவுகளை சாப்பிடுங்கள். ஒரே வாரத்தில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

High Protein Breakfast For Weight Loss
உடல் எடையை குறைக்க கஷ்டப்பட்டு டயட் இருந்தும் எடையை குறைக்க முடியாமல் பலரும் அவதிப்படுகிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் செய்யும் ஒரு தவறுதான். அதாவது உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கலோரிகள் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக காலை உணவு சாப்பிடுவதைத் தவிர்த்து விடுவார்கள். ஆனால் வேகமாக எடை இழப்புக்கு ஹெல்தியான காலை உணவு தான் ரொம்பவே முக்கியம். இப்படி நீங்களும் உடல் எடையை வேகமாக குறைக்க நினைத்தால் புரதம் நிறைந்த இந்த காலை உணவுகளை சாப்பிடுங்கள். அவை என்னென்ன என்று இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
புரதம் ஏன் முக்கியம்?
புரதம் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து அதிக கலோரிகளில் எரிக்க பெரிதும் உதவுகிறது. மேலும் உடல் எடை மற்றும் கொழுப்பை குறைப்பதற்கு மட்டுமல்ல, தொங்கும் தசைகளை இறுக்கமாக்குவதற்காகவும், தசை வளர்ச்சியை அதிகரிக்கவும் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுதவிர, உடலுக்கு தேவையான ஆற்றலையும் இது வழங்குகிறது. எனவே காலை இரவு மற்றும் சிற்றுண்டி ஆகிய நேரங்களில் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது உடல் எடை குறைப்பில் வியக்கத்தக்க மாற்றங்கள் நடக்கும்.
காலை உணவு ஏன் முக்கியம்?
ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு காலை உணவு ரொம்பவே முக்கியம். இரவு முழுவதும் வயிறு காலியாக இருக்கும். காலையில் எடுக்கும் உணவுதான் குடலுக்கு ஊட்டச்சத்தை வழங்கும். மேலும் அதுதான் உங்களது வளர்சிதை மாற்றத்திற்கு பெரிதும் உதவி செய்யும். எனவே உங்களது காலை உணவில் புரதம் மற்றும் நல்ல கொழுப்பு சத்து அதிகமாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.
சிவப்பு அவலும் முளைகட்டிய பயிரும்...
ஊற வைத்த சிவப்பு அவலுடன் முளைக்கட்டிய பயிர் வகைகள், நறுக்கிய வெள்ளரிக்காய், வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை கலந்து சாலட்டாக சாப்பிடுங்கள். இது வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவும். இதில் இருக்கும் நார்ச்சத்து ஜீரண சக்தியை அதிகரிக்க உதவும். இதில் கலோரிகள் குறைவாக உள்ளதால் இது எடையை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
ஓட்ஸ்..
உடல் எடையை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவது நல்லது. ஆனால் ரோல்டுகட் ஓட்ஸ் சாப்பிடுவது ரொம்பவே நல்லது. உங்களுக்கு பிடித்த பழங்கள், நட்ஸ்கள் மற்றும் விதைகளை சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு இரட்டிப்பான நன்மைகளை வழங்கும்.
யோகர்ட்..
இது மிக சிறந்த காலை உணவாகும். இதில் புரதம் மட்டுமல்ல இதில் இருக்கும் ப்ரோ பயாடிக் உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இது குடல் இயக்கத்தை மேம்படுத்தவும், நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது இதனால் வளர்ச்சிதை மாற்றம் ஏற்படும் மற்றும் ஜீரண சக்தி அதிகரிக்கும். இதற்கு ஒரு கிண்ணம் யோகர்ட்டுடன் ஊற வைத்த சியா விதைகள், உங்களுக்கு பிடித்த நட்ஸ்கள் மற்றும் விதைகளை சேர்த்து சாப்பிடுங்கள்.

