உத்தரகாண்ட்டில் உள்ள பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம் என்று அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம் வாசிக்க வேண்டும் என்று அந்த மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த முயற்சி, மாணவர்களை இந்திய கலாச்சாரம், தார்மீக விழுமியங்கள் மற்றும் வாழ்க்கைத் தத்துவத்துடன் இணைத்து, அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நோக்கம் கொண்டது என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்

இது தொடர்பாக வெளியிட்ட புஷ்கர் சிங் தாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "நமது அரசு, மாநிலத்தின் பள்ளிகளில் கீதையின் ஸ்லோகங்களை பாராயணம் செய்வதை கட்டாயமாக்கியுள்ளது. இந்த முயற்சி, மாணவர்களை இந்திய கலாச்சாரம், தார்மீக விழுமியங்கள் மற்றும் வாழ்க்கைத் தத்துவத்துடன் இணைப்பதன் மூலம் அவர்களின் பன்முக வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது" என்று கூறினார்.

கலாசார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது

மேலும் முதல்வர் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில், அல்மோரா மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டார்மல் சூரியன் கோவிலை முன்னிலைப்படுத்தினார். சூரிய தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில், கத்யூரி காலத்தின் சிறந்த கட்டிடக்கலை மற்றும் ஆழ்ந்த பக்திக்கு ஒரு சான்றாகும்.

இந்த கோவில் உத்தரகாண்டின் புகழ்பெற்ற வரலாறு மற்றும் துடிப்பான கலாசார பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது என்று முதல்வர் தாமி அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்த பழங்கால பாரம்பரிய தளத்தை பார்வையிட வருமாறு முதல்வர் தாமி அழைப்பு விடுத்தார்.

சமூக ஒற்றுமையை பாதுகாக்க உறுதி

உத்தரகாண்டை சேர்ந்த மக்கள் மாநிலத்திற்கு வெளியே வசித்தாலும், அதன் நாட்டுப்புற கலாச்சாரம், மரபுகள் மற்றும் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம் என்று புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். உத்தரகாண்டின் கலாச்சார மற்றும் சமூக ஒற்றுமையை பாதுகாக்க மாநில அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்று முதல்வர் உறுதிப்படுத்தினார்.