பாகிஸ்தானிய பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா சைஃபுல்லா கசூரி மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது மசூத் அசார் ஆகியோர் பெண் ஜிஹாதிகளுக்காக பஹாவல்பூரில் மதக் கூட்டங்களை ஏற்பாடு செய்கின்றனர். இந்திய பாதுகாப்பு அமைப்புகள் உஷார் நிலையில் உள்ளன. 

பாகிஸ்தானிய பயங்கரவாத அமைப்புகளான லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகியவை மதக் கூட்டம் என்ற போர்வையில் பஹாவல்பூரில் ஒரு ரகசியக் கூட்டத்தை நடத்தின. இந்தக் கூட்டத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத பெண் ஜிஹாதிகளும் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இந்த பயங்கரவாத அமைப்புகள் மீண்டும் இந்தியாவிற்கு எதிராக ஒரு பெரிய சதித்திட்டத்தை தீட்டி வருவதாகத் தகவ வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைப்புகள் உஷார் நிலையில் உள்ளன. மேலும் எல்லையில் உயர் எச்சரிக்கையை விடுத்துள்ளன.

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி இன்று பாகிஸ்தானின் பஹாவல்பூரில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்டார் எனத் தெரிய வந்துள்ளது. அங்கு சாய்ஃபுல்லா கசூரி, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சந்தித்ததும் தெரிய வந்துள்ளது. பஹாவல்பூர் மசூத் அசாரின் கோட்டையாகக் கருதப்படுகிறது. கசூரி அடிக்கடி பஹாவல்பூரில் மசூத் அசாரை சந்திப்பதாகக் கூறப்படுகிறது. பஹால்காம் தாக்குதலுக்கு முன்பே, கசூரி மசூத் அசாரை சந்தித்து முழு விஷயத்தையும் அவருக்கு விளக்கினார்.

கசூரி, அசாருக்கு இடையிலான இந்த சந்திப்பு இந்தியாவுக்கு எதிரான ஒரு புதிய பயங்கரவாத சதியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று பாதுகாப்பு நிறுவனங்கள் அஞ்சுகின்றன. இன்று பஹாவல்பூரில் கசூரி கலந்து கொண்ட கூட்டத்திற்கு "சீரத்-இ-நபி மற்றும் சாஹிஹ் புகாரி" எனப் பெயரிட்டுள்ளனர். இந்த மதக் கூட்டம் பஹாவல்பூர், அகமதுபூர் கிழக்கு, தௌஹீத் சௌக், ஜாமியா உம் அப்துல் அஜீஸில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பெண் ஜிஹாதிகளும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது எதிர்கால பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர்களின் பங்கை வெளிப்படுத்தி உள்ளது.

பயங்கரவாத உயர்மட்ட தளபதிகள் சைஃபுல்லா கசூரி மற்றும் மசூத் அசார் இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து இந்திய பாதுகாப்பு அமைப்புகள் விழிப்புடன் உள்ளன. இந்த இரண்டு பயங்கரவாதிகளும் சந்திக்கும் போதெல்லாம், அவர்கள் இந்தியாவுக்கு எதிராக ஒருவித சதித்திட்டத்தை தீட்டுவார்கள் என பாதுகாப்பு அமைப்புகள் நம்புகின்றன. எனவே, இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு சதித்திட்டத்தையும் சரியான நேரத்தில் முறியடிக்க பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் எல்லையில் தங்கள் படைகளை நிறுத்தியுள்ளனர்.