தினமும் வெறும் வயிற்றில் பூண்டுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.
பூண்டு சமையலுக்கு பயன்படுத்தும் முக்கியமான பொருள். பருப்பு, காய்கறிகள், இறைச்சி வகைகளில் இது சேர்க்கப்படுகிறது. சமைக்கும் உணவிற்கு கூடுதல் சுவை மற்றும் நறுமணத்தை பூண்டு கொடுக்கும். பூண்டு சமையலுக்கு சுவையை கொடுப்பது மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். ஏனெனில் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
இத்தகைய சூழ்நிலையில், பூண்டுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். பொதுவாக பூண்டு, வெல்லம் இரண்டிலுமே ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே, இவை உடலில் பல்வேறு உடல் பிரச்சினைகளை சரி செய்யும். இப்போது இந்த பதிவில் பூண்டு மற்றும் வெல்லம் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
வெல்லம் மற்றும் பூண்டு சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :
சர்க்கரை நோய் :
பூண்டு சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். அதுபோல வெல்லத்தில் கிளைசெமிக் குறையீடு குறைவாக உள்ளன. எனவே, இவை இரண்டையும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
எடை இழப்புக்கு உதவும்..
பூண்டு வெல்லம் இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் உடலில் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும். மேலும் கலோரிகள் வேகமாக எரிக்கப்படும். இதனால் எடை குறையும். எனவே எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பூண்டு மற்றும் வெல்லத்தை சாப்பிடுங்கள்.
இதய ஆரோக்கியம் :
தினமும் வெறும் வயிற்றில் வெல்லம் மற்றும் பூண்டு இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான நோய்களின் அபாயம் குறையும்.
செரிமான ஆரோக்கியம் :
வெறும் வயிற்றில் பூண்டு, வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயு, அஜீரணம், மலச்சிக்கல், வீக்கம் போன்ற வயது தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :
வெல்லம் மற்றும் பூண்டு இரண்டிலும் வைட்டமின்கள் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. எனவே, இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இருமலுக்கு நல்லது :
இருமலிலிருந்து உடனடி நிவாரணம் பெற பூண்டை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள்.
எப்படி சாப்பிடனும்?
தினமும் காலை வெறும் வயிற்றில் 2 பூண்டு பற்களுடன் சிறிதளவு வெல்லத் துண்டை சேர்த்து சாப்பிட்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.


