MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாக வளரவே டிரம்ப் விரும்புகிறார்: ஜே.டி. வான்ஸ்

இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாக வளரவே டிரம்ப் விரும்புகிறார்: ஜே.டி. வான்ஸ்

அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் இந்தியா-அமெரிக்கா உறவைப் பாராட்டி, வர்த்தக உடன்படிக்கைக்கான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த உடன்படிக்கை இருநாட்டுத் தலைவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு வழிவகுக்கும் என்றும், இந்தியாவுடனான நட்புறவு தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

2 Min read
Author : SG Balan
| Updated : Apr 22 2025, 04:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
JD Vance in India

JD Vance in India

ஜே.டி. வான்ஸ் பாராட்டு:

​​இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வளர்ந்து வரும் உறவை அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் பாராட்டியுள்ளார். அதிபர் டிரம்ப் அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றாக வளர்ச்சியடைந்து வெற்றிபெற வேண்டும் என்று விரும்புகிறார் எனவுர் அவர் கூறினார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய வான்ஸ், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான தொடர்பில் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார். இந்தியா போன்ற உலகளாவிய நட்பு நாடுகளுடன் இணைந்து எதிர்காலத்தைத் திட்டமிடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

23
JD Vance and Usha Vance

JD Vance and Usha Vance

தொலைநோக்குப் பார்வைகள்:

வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கான விதிமுறைகளை இரு நாடுகளும் இறுதி செய்துள்ளதாக வான்ஸ் அறிவித்தார். இந்த வர்த்தக உடன்படிக்கை அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை அடைவதற்கான ஒரு முக்கிய படியாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இறுதி வர்த்தக ஒப்பந்தத்திற்கு தெளிவான வரைபடத்தை வழங்குகிறது என்றும் கூறினார்.

இந்தியாவுடனான நட்புறவு ஆழமான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும் என்றார். "இந்தியாவில் அமெரிக்க முதலீடுகளையும் அமெரிக்காவில் இந்திய முதலீடுகளையும் அதிகமாகக் காண்போம்" என்று வான்ஸ் கூறினார். இரு நாடுகளுக்கும் வெற்றிகரமான ஒப்பந்தம் இறுதிசெய்யப்படும் என்றும் வான்ஸ் தெரிவித்தார்.

33
JD Vance with PM Modi

JD Vance with PM Modi

கறாராகப் பேசும் மோடி:

பிரதமர் மோடி கறாராகப் பேசக்கூடியவர் என்று குறிப்பிட்ட வான்ஸ், அமெரிக்கா அவரை மதிக்க இதுவும் ஒரு காரணம் என்று கூறினார். உலகளாவிய வர்த்தகம் குறித்து, அதிபர் டிரம்பின் நடவடிக்கைகளை அவர் ஆதரித்தார். டிரம்பின் நடவடிக்கைகள் வர்த்தகப் போர் அல்ல, மாறாக அனைவருக்கும் பயனளிக்கும் மறுசீரமைக்கப்பட்ட அமைப்பு, குறிப்பாக இந்தியா போன்ற நெருங்கிய நண்பர்களுக்கு பயனளிப்பதாக அவர் கூறினார்.

இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்தையும் வான்ஸ் பாராட்டினார், அதன் பண்டைய கட்டிடக்கலையையும் தொலைநோக்கு மனப்பான்மையால் வியப்படைந்ததாகக் கூறினார். QUAD உச்சிமாநாட்டை இந்தியா நடத்தவது பொருத்தமானது என்று அவர் வரவேற்பு தெரிவித்தார். இந்தியாவின் அணுசக்தி பொறுப்புச் சட்டத்தில் மாற்றங்களை ஆதரித்தார். அமெரிக்கா இந்தியாவை ஒரு சமமான பங்காளியாகப் பார்க்கிறது என்றும் வான்ஸ் கூறினார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
அமெரிக்கா-இந்தியா வர்த்தகம்
கட்டண உயர்வு
வர்த்தகம்
டொனால்ட் டிரம்ப்
நரேந்திர மோடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
Recommended image2
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
Recommended image3
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved