MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • அன்பில் மகேஷ் நல்லா நடிப்பாரு இது தெரியுமா? அவர் நடிச்ச சூப்பர் சீரியல் பெயர் தெரியுமா??

அன்பில் மகேஷ் நல்லா நடிப்பாரு இது தெரியுமா? அவர் நடிச்ச சூப்பர் சீரியல் பெயர் தெரியுமா??

தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசியலுக்கு வரும் முன் சின்னத்திரை சீரியலில் நடித்திருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Oct 01 2025, 01:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anbil Mahesh Acted in Serial
Image Credit : X

Anbil Mahesh Acted in Serial

அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இவர் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நெருங்கிய நண்பரான அன்பில் மகேஷ், இவர் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சியில் உள்ள திருவெறும்பூர் தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார். இதையடுத்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அதேதொகுதியில் வென்ற அன்பில் மகேஷுக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

24
ட்ரோல் செய்யப்படும் அன்பில் மகேஷ்
Image Credit : Asianet News

ட்ரோல் செய்யப்படும் அன்பில் மகேஷ்

திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கவனம் ஈர்த்த அமைச்சர் அன்பில் மகேஷ், சமீபகாலமாக ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறார். இதற்கு முக்கிய காரணம், கரூரில் நடந்த சம்பவம் தான். கடந்த வாரம் கரூரில் விஜய் கலந்துகொண்ட தவெக பரப்புரை கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் மூச்சுத் திணறி பலி ஆனார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Related Articles

Related image1
சொந்த தந்தையையே கொச்சைப்படுத்தியவர்.. அன்புமணிக்கு சுடச்சுட பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்! என்ன நடந்தது?
Related image2
கதறி அழுத அன்பில் மகேஷ்..!கண்ணீர் விட்ட செந்தில் பாலாஜி.. உலுக்கும் வீடியோ
34
வைரலான வீடியோ
Image Credit : Social Media

வைரலான வீடியோ

கரூரில் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்ததும், அமைச்சர் அன்பில் மகேஷை உடனடியாக ஸ்பாட்டுக்கு செல்ல அறிவுறுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதையடுத்து கரூர் சென்ற அன்பில் மகேஷ், அங்கு மருத்துவமனை வாசலில் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அதுகுறித்த வீடியோ காட்சியும் வெளியாகி வைரலானது. அதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் நடிப்பதாக விமர்சித்தார்கள். அன்புணி ராமதாஸ் கூட அன்பில் மகேஷுக்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம் என கிண்டலடித்து இருந்தார்.

44
சீரியலில் நடித்துள்ள அன்பில் மகேஷ்
Image Credit : Google

சீரியலில் நடித்துள்ள அன்பில் மகேஷ்

இப்படி அன்பில் மகேஷ் நடிக்கிறார் என பலரும் கூறி வரும் நிலையில், அவர் அரசியலுக்கு வரும் முன் நடிகராக ஒரு சீரியலில் நடித்த தகவல் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் நடித்த சீரியலின் பெயர் அகல்யா. கடந்த 2004-ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான இந்த சீரியல் அப்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியலாக இருந்தது. அந்த சீரியலில் நல்ல முத்து என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அன்பில் மகேஷ். அந்த சீரியலில் அவர் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது நெட்டிசன்கள் மீண்டும் வைரலாக்கி வருகிறார்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரோகிணியை தூக்க ஸ்கெட்ச் போட்ட சத்யா - கௌதம்! மருமகள் சீரியலில் அதிரடி திருப்பம்.. மாட்டிக்கொள்வாரா ரோகிணி? இன்றைய பரபரப்பு எபிசோட்!
Recommended image2
Chellame Chellame: பாக்கியலட்சுமியின் அதிரடி வேட்டை! விஜி-யின் ரகசிய பிளான்.. உண்மையை உடைப்பாரா பாக்கியா?
Recommended image3
அர்ஜுன் எடுத்த விபரீத முடிவு! தடுத்து நிறுத்திய சத்யா.. டைவர்ஸ் கொடுக்க அர்ஜுன் போட்ட பகீர் நிபந்தனை! குழப்பத்தில் சத்யா!
Related Stories
Recommended image1
சொந்த தந்தையையே கொச்சைப்படுத்தியவர்.. அன்புமணிக்கு சுடச்சுட பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்! என்ன நடந்தது?
Recommended image2
கதறி அழுத அன்பில் மகேஷ்..!கண்ணீர் விட்ட செந்தில் பாலாஜி.. உலுக்கும் வீடியோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved