- Home
- Cinema
- தொலைக்காட்சி
- வாய்கூசாமல் பொய் சொன்ன ரோகிணி... உண்மை என நம்பி உச்சிகுளிர்ந்த விஜயா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
வாய்கூசாமல் பொய் சொன்ன ரோகிணி... உண்மை என நம்பி உச்சிகுளிர்ந்த விஜயா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா மூலம் வந்த மிகப்பெரிய ஆர்டரை தான் பிடித்ததாக கூறி ரோகிணி வாய்கூசாமல் பொய் சொல்லி இருக்கிறார். அதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா, ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு பூ கொடுக்க சென்றபோது, அங்கு சாப்பிட வந்திருந்த ஒரு பெண்ணிடம், மீனா பூ பிசினஸ் செய்வதை பற்றி கூறுகிறார் ஸ்ருதி. மேலும் அவரின் பழ பொக்கே பற்றியும் சொன்னதால், இம்பிரஸ் ஆன அந்த பெண், தான் ஒரு பில்டர் என்றும், தற்போது 250க்கும் மேற்பட்ட வீடுகள் அடங்கிய ஒரு அப்பார்ட்மெண்டை கட்டி இருப்பதாகவும், அதற்காக பூ சப்ளை செய்ய உங்களுக்கு ஆர்டர் வாங்கித் தருகிறேன் என்றும் கூறுகிறார். அதேபோல் அந்த வீடுகளை ஹோம் அப்ளையன்ஸ் உடன் தாங்கள் கொடுக்க உள்ளது பற்றி அந்த லேடி சொல்ல, தன்னுடைய மைத்துனர் அந்த கடை தான் வைத்திருக்கிறார். அவருக்கு அந்த ஆர்டரை கொடுக்குமாறு மீனா கேட்க, அந்த பெண்ணும் விசிடிங் கார்டு கொடுத்து தன்னை வந்து பார்க்க சொல்கிறார்.
மீனாவுக்கு கிடைத்த ஆர்டர்
இதையடுத்து வீட்டிற்கு வந்து முத்துவிடம் தனக்கு கிடைத்த மிகப்பெரிய பூ ஆர்டர் பற்று சொல்கிறார் மீனா. இதைக்கேட்டு சந்தோஷம் அடைந்த முத்து, தானும் ஒரு கார் வாங்கி அந்த அபார்ட்மெண்ட் வாசலில் ஒரு டிரைவர் போட்டு நிறுத்தினால், அங்கு இருப்பவர்கள் அதை பயன்படுத்துவார்கள் என ஐடியா கொடுக்கிறார். பின்னர் முத்துவுக்கு சவாரி வந்ததால், அவர் கிளம்பி செல்ல, அங்கு தனியாக இருந்த மீனாவிடம் பேச வரும் ரோகிணி, தனக்கு கிடைத்த ஆர்டர் பற்றி சொல்ல, அதற்கு அவரும் வாழ்த்து சொல்கிறார். பின்னர் அந்த ஹோம் அப்ளையன்ஸ் மேட்டரையும் ரோகிணியிடம் சொல்கிறார் மீனா.
மீனாவிடம் டீல் பேசிய ரோகிணி
இதைக் கேட்டு குஷியான ரோகிணி, மீனாவுக்கு நன்றி தெரிவித்ததோடு, ஒரு வேண்டுகோளையும் வைக்கிறார். இந்த மிகப்பெரிய ஆர்டரை பற்றி வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளும் ரோகிணி, அதை தான் கஷ்டப்பட்டு வாங்கியதுபோல் விஜயாவிடம் சொல்ல இருப்பதாக சொல்ல அதற்கு மீனாவும் சம்மதம் தெரிவிக்கிறார். பின்னர் அந்த பில்டரை சந்தித்து ஆர்டரை உறுதி செய்த கையோடு மனோஜை பார்க்க செல்கிறார் ரோகிணி. அப்போது இந்த மிகப்பெரிய ஆர்டர் கிடைத்த விஷயத்தை சொன்னதும், மனோஜ் செம குஷியாகிறார். பின்னர் இருவரும் வீட்டுக்கு வருகிறார்கள்.
வாயடைத்துப் போன விஜயா
வீட்டுக்கு வந்ததும் விஜயாவிடம் ஒரு சேலையை கொடுத்து, தங்களுக்கு மிகப்பெரிய ஆர்டர் கிடைத்திருக்கும் விஷயத்தை சொல்கிறார் மனோஜ். மேலும் அந்த ஆர்டரை தானே கஷ்டப்பட்டு வாங்கியதாக கூறி ரோகிணி ஒரு கதை சொல்கிறார். இதைப்பார்த்த ஸ்ருதி, எப்படி வாய்கூசாம பொய் சொல்றாங்க பாருங்க மீனா என சொல்ல, அதற்கு அவர் விடுங்க என கூறுகிறார். இந்த ஆர்டர் மூலம் 40 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என மனோஜ் சொல்ல, அதைக்கேட்டு வாயடைத்துப் போகிறார் விஜயா. மறுபுறம் ரோகிணி இந்த ஆர்டரை பயன்படுத்தி மனோஜிடம் இருந்து தனக்கு தேவைப்படும் 2 லட்சத்தை வாங்கி ஸ்ருதியின் அம்மா சுதாவுக்கு கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

