- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கிரிஷ் நமக்கு வேண்டாம்... மீனாவின் முடிவால் ஷாக் ஆன முத்து - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா திருப்பம்
கிரிஷ் நமக்கு வேண்டாம்... மீனாவின் முடிவால் ஷாக் ஆன முத்து - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா திருப்பம்
சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷை தத்தெடுக்கும் முடிவில் முத்து இருக்க, அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் மீனா. இதையடுத்து என்னென்ன ட்விஸ்ட் நடந்தது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கிரிஷ் வீட்டில் இருப்பது பிடிக்காத விஜயா, அவனை எப்படியாவது துரத்த வேண்டும் என முடிவெடுத்த பிளானெல்லாம் சொதப்பிவிட, இறுதியாக தன்னுடைய தோழி பார்வதியிடம் சொல்லி, அவனை தத்தெடுக்க சொல்கிறார். அவரும் இதுதொடர்பாக பேச விஜயாவின் வீட்டுக்கு வர, அப்போது அங்கிருந்த முத்து மற்றும் மீனா இருவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கிரிஷை தத்துக்கொடுக்கும் முடிவை எடுக்க தங்களுக்கு உரிமை இல்லை என்றும், அது அவரின் பாட்டி தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.
கிரிஷை தத்தெடுக்க முடிவெடுத்த முத்து
பின்னர் மீனாவிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என அழைத்து செல்கிறார் முத்து. இருவரும் கிளம்பி ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கு செல்கிறார்கள். அங்கு சென்றதும், கிரிஷை இங்க வந்து சேர்க்கப் போறீங்களா அதற்கு நான் ஒத்துக்க மாட்டேன் என சண்டை போடுகிறார். அதெல்லாம் இல்லை என சொல்லி, மீனாவை உள்ளே அழைத்து செல்லும் முத்து, தான் கிரிஷை தத்தெடுக்க இருப்பது பற்றியும், அதற்காக என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் அங்கு இருக்கும் பெண் ஒருவரிடம் விசாரிக்கிறார். இதையெல்லாம் கேட்ட மீனா அதிர்ச்சி அடைகிறார்.
முத்துவுக்கு முட்டுக்கட்டை போடும் மீனா
பின்னர் முத்துவை வெளியே வரச் சொல்லி பேசும் மீனா, யாரைக் கேட்டு கிரிஷை தத்தெடுக்க முடிவெடுத்தீங்க என கேட்க, அதற்கு முத்து, கிரிஷ் நம்மகூட தான் இருக்கான், அவனோட பாட்டியும் ஊரில் கஷ்டப்படுறாங்க. அவனை நம்மளோட பிள்ளையா தத்தெடுத்து வளர்க்கலாம் என சொல்ல, எங்கிட்ட கேட்காம நீங்களா ஒரு முடிவை எடுப்பீங்களா என கோபத்துடன் மீனா கேட்கிறார். முன்னாடியே நம்ம இதைப்பத்தி பேசிருக்கோமே... இப்போ உனக்கு அதில் விருப்பமில்லையா என முத்து கேட்க, ஆமா என சொல்லும் மீனா, அது என்னைக்குமே நடக்காது. எல்லாம் ஒரு காரணமா தான் சொல்றேன் என கூறுகிறார் மீனா.
மனோஜின் செயலால் ரோகிணி அதிர்ச்சி
அதற்கு முத்து, என்ன காரணம் என கேட்க, நேரம் வரும்போது அதை நான் சொல்கிறேன். இப்போ இந்த முடிவை விட்றுங்க என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் மீனா. பின்னர் கோவிலுக்கு சென்று சாமியிடம் அழுது புலம்புகிறார். மறுபுறம் மனோஜ் தன்னுடைய ஆபிஸ் பி.ஏ ஜீவாவிடம் கிரிஷை மும்பையில் இருக்கும் தன்னுடைய சொந்தக்காரருக்கு தத்துக்கொடுக்க பேசிவிட்டதாகவும், அவரும் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறுகிறார். இதையெல்லாம் ரோகிணி அருகில் இருந்தே கேட்டுக்கொண்டிருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனிவரும் எபிசோடில் பார்க்கலாம்.

