- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ரேவதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கார்த்திக்; சந்திரகலா ஷாக், சாமுண்டீஸ்வரி ஹேப்பி; கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!
ரேவதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கார்த்திக்; சந்திரகலா ஷாக், சாமுண்டீஸ்வரி ஹேப்பி; கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!
ரேவதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைத்து கார்த்திக் எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆனால், சாமுண்டீஸ்வரி மட்டும் ரொம்பவே ஹேப்பி.

Zee Tamil Serial Karthigai Deepam
கார்த்திகை தீபம் சீரியலில் 1069ஆவது எபிசோடில் புதிய டுவிஸ்ட்டாக கார்த்திக் மற்றும் ரேவதிக்கு விவாகரத்து வாங்கி கொடுத்து விட வேண்டும் என்ற முடிவோடு சந்திரகலா இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் சந்திரகலா தான். ஏற்கனவே கார்த்திக் உடனான திருமண உறவை பஞ்சாயத்து மூலமாக காசு வெட்டி போட்டு முறித்துவிட்டார் சாமுண்டீஸ்வரி. இதற்கு சந்திரகலா தான் காரணம். ஒரு உண்மையை மறைத்ததால் தன்னை ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்ததாக கூறி கார்த்திக்கை வீட்டை விட்டு துரத்திவிட்டார்.
Karthik and Revathi
அதன் பிறகு ஒவ்வொரு விஷயமாக சந்திரகலா அவரை ஏத்திவிட அவரை சொல்லை வேத வாக்காக கொண்டு சாமுண்டீஸ்வரி ஆட ஆரம்பித்தார். அதன் முதல் நடவடிக்கையாக கார்த்திக் மற்றும் ரேவதி இடையிலான திருமண உறவை முறித்துவிட்டார். கார்த்திக்கை பிரிந்த சோகத்தில் இருந்த ரேவதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
Karthigai Deepam Today episode highlights
இனி கோர்ட் மூலமாக கார்த்திக் மற்றும் ரேவதிக்கு இடையில் விவாகரத்து வாங்கி தர முடிவு செய்துள்ளார். இதை பற்றி கார்த்திக்கிற்கு தெரிந்தும் அவர் அமைதியாகவே இருக்கிறார். இப்போது கார்த்திக் ஒரு முடிவு எடுத்துள்ளார். அதாவது, ரேவதிக்காக்த்தான் நான் வீட்டைவிட்டு வந்தேன். எனக்காக அவள் விஷம் குடிக்கும் அளவிற்கு சென்றுள்ளார். இனியும் நான் பொறுமையாக இருக்க கூடாது என்றார். இதற்கிடையில் சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வழக்கறிஞர் வந்துள்ளார். அவர், கார்த்திக் மற்றும் ரேவதிக்கு இடையில் நட்ந்த திருமணத்தை சட்டப்படி ரத்து செய்து அவருக்கு விவாகரத்து வாங்கி தர போகிறேன்.
Karthigai Deepam Today episode
அதற்காகத்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். எல்லோருமே எடுத்துச் சொல்லியும் சாமுண்டீஸ்வரி கேட்பதாக இல்லை. நான் சொல்வதை யாரும் கேட்கவில்லை என்றால் இனி வேறுஒரு சாமுண்டீஸ்வரியை பார்ப்பீர்கள் என்றார். அதற்குள்ளாக கார்த்திக் ரேவதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைத்தார். இது சந்திரகலாவிற்கு மட்டுமின்றி சாமுண்டீஸ்வரி, ரேவதி உள்பட எல்லோருக்குமே ஷாக்.
Karthik Sends Divorce Notice
அப்போது ரேவதியிடம் கையெழுத்து வாங்கி அதனை கார்த்திக்கிற்கு அனுப்பலாம் என்று பார்த்தால் அவன் ரேவதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறான்.பதிலுக்கு நாமும் அனுப்ப வேண்டும் என்று சாமுண்டீஸ்வரி சொல்ல, ரேவதி கையெழுத்து போட்டு விவாகரத்து நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளார். ஆதலால் அவரது அம்மா சொன்ன இட்த்திலெல்லாம் கையெழுத்திட்டார். இதைப் பார்த்து எல்லோருக்குமே ஷாக். ஆனால், சாமுண்டீஸ்வரி ஹேப்பி. சந்திரகலா கூட அதிர்ச்சி அடைந்தார். நாளை காலை 10 மணிக்கு கோர்ட்டுக்கு வர வேண்டும் என்று வக்கீல் சொல்ல ரேவதியும் சரி என்று சொல்லிவிட்டு தனது ரூமிற்கு சென்றுவிட்டார்.
Karthigai Deepam serial update
இப்படியொரு சீன் நடக்க இருக்கும் நிலையில் தான் கார்த்திகை தீபம் சீரியலின் புரோமோவை படக்குழுவினர் கடைசி வரை வெளியிடவில்லை. சந்திரகலாவிற்கு ஒரு சந்தேகம் வந்த்து. எப்படி அவன் சரியான நேரத்தில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறான். இதில் ஏதோ உள்குத்து இருக்கு. கூட்டி கழிச்சு பார்த்தால் இது எல்லாம் அவனோட வேலையா தெரியுது. ஏனென்றால் ரேவதியும் எதுவும் சொல்லாமல் கையெழுத்து போட்டிருக்கிறார் என்றார். அதோடு கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடு முடிந்த்து. இனி 1070ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.