- Home
- Cinema
- தொலைக்காட்சி
- திறப்பு விழாவிற்கு போகாதீங்க; ரேணுகாவை எச்சரிக்கும் ஞானம் - எதிர்நீச்சல் தொடர்கிறது டுவிஸ்ட்!
திறப்பு விழாவிற்கு போகாதீங்க; ரேணுகாவை எச்சரிக்கும் ஞானம் - எதிர்நீச்சல் தொடர்கிறது டுவிஸ்ட்!
ஞானம் யாருக்கும் தெரியாமல் ரேணுகாவுக்கு போன் செய்து எச்சரிக்கை மூலம் கடை திருப்பி விழாவிற்கு போக வேண்டாம் என்று எச்சரிக்கை படுத்துகிறார் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

எதிர்நீச்சல்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தற்போது ஜனனி ரேணுகா மற்றும் நந்தினி மூவரும் இக்கட்டான சூழலில் இருந்து வருகிறார்கள். தற்போது தமிழ் சோறு என்னும் பிசினஸை தொடங்கியுள்ள ஜனனி அதனை தடுக்கும் குணசேகரன் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்.
Sun Tv Serial
நேற்றய எபிசோடில் விசாலாட்சியும் அவரது மருமகளும் சந்தோசமாக பேசி சிரிக்கின்றனர். தனது பிசினஸுக்கு வாழ்த்துக்கள் கூறி சந்தோசமாக இருக்கிறார் விசாலாட்சி மற்றும் அவரது மருமகள். ஜனனி காலையில் எழுந்து வரும் பொழுது தர்ஷினி மற்றும் பார்கவி இருவரும் தமிழ் சோறு என்னும் பிசினஸை தொடங்கியுள்ளது இணையத்தில் அப்லோடு செய்துள்ளனர்.
Gunasekaran
அதற்கு வரும் கமண்ட் சிலை படித்துக் கொண்டிருக்கிறார் தர்ஷினி மற்றும் பார்கவி. பாசிட்டிவ் கமெண்ட்ஸால் மகிழ்ச்சி அடைந்த ஜனனி: எழுந்தவுடன் மகிழ்ச்சியாக வருகிறார் ஜனனி இன்று தமிழ் சோறு திறப்பு விழாவிற்கு உற்சாகத்துடன் இருக்கும் ஜனனி காலையில் மிக சந்தோஷமாகவும் ஆர்வமாகவும் இருக்கிறார். பார்கவி மற்றும் தர்ஷினி இருவரும் அமர்ந்திருக்க இந்த லேப்டாப் வச்சு என்ன பண்றீங்க என்று கேட்கிறார். அதற்கு தர்ஷினி நம்ம தமிழ் சோறு பிசினஸை இணையத்தில் அப்லோட் செய்தேன் சித்தி. அதற்கு பாஸ்ட் கமெண்ட்ஸ் மட்டும் தான் வருது இங்க பாருங்க இன்று சந்தோஷமாக ஜனனியிடம் காட்டுகிறார் தர்ஷினி. அதனைப் பார்த்து சந்தோஷப்பட்டார் ஜெனனி. ஜனனியின் முகத்தில் சந்தோசம் பிரதிபலிக்கிறது அது நன்றாகவே தெரிகிறது என்று கிண்டலாக கூறுகிறார் விசாலாட்சி.
Ethirneechal Thodargiradhu Serial Today
விசாலாட்சி அமர்ந்திருக்க குட் மார்னிங் அத்தை என்று பின் மூலமாக வந்தேன் கூறுகிறார் ஜனனி. சந்தோசமாக இருப்பதைக் கண்ட விசாலாட்சியும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஞானம் ரேணுகாவை எச்சரிக்கைப் படுத்துகிறார்: ஞானம் தனது அண்ணன் குணசேகருக்கும், தம்பி கதிரவனுக்கும் தெரியாமல் தன் மனைவியான ரேணுகாவிற்கு போன் செய்து தமிழ் சோறு திறப்பு விழாவுக்கு போக வேண்டாம் என்று எச்சரிக்கை படுத்துகிறார் என் என்று ரேணுகா கேட்க போக கூடாது என்று சொல்லி போனை கட் செய்கிறார். போன் செய்துவிட்ட பிறகு ஸ்விட்ச் ஆஃப் பண்ணி போனை வைக்கிறார்.
Renuga and Jananani
ஏன் என்று தெரியாமல் குழம்பி நிற்கிறார் ரேணுகா. என்னமோ நடக்கப் போகிறது என்பதற்கு முன்னெச்சரிக்கையாக நானும் ரேணுகாவிடம் அறிவிற்கு என்னதான் நடக்கப் போகிறது என்று தெரியவில்லை என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக உள்ளது.
சந்தேகப்படும் ஜனனி: நந்தினி இடம் டீ கேட்ட ஜனனி திடீரென்று ஓடி வந்து வெளியே சுற்றி மற்றும் பார்க்கிறார். யாரோ இருப்பது போல் அவருக்கு உணர்ந்திருக்கிறது அதனால் வந்து வெளியே ஃபுல்லா சுற்றி முற்றி பார்க்கிறார். எனக்கு ஏதோ சந்தேகம் வந்துவிட்டது என்னதான் நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.