- Home
- Cinema
- தொலைக்காட்சி
- எனக்கே விபூதி அடிக்க பாக்குறியா... வசமா சிக்கிய ஜனனியிடம் கறார் காட்டிய குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
எனக்கே விபூதி அடிக்க பாக்குறியா... வசமா சிக்கிய ஜனனியிடம் கறார் காட்டிய குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியிடம் வீடியோ இல்லாததை கிட்டத்தட்ட கண்டுபிடித்த ஆதி குணசேகரன், அவரிடம் தன் பாணியில் விசாரணை நடத்தி இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனிடம் வீடியோவை ஒப்படைக்க 10 நாட்கள் டைம் கேட்ட ஜனனிக்கு 15 நாள் டைம் கொடுத்திருந்தார் குணசேகரன். இதையடுத்து அந்த வீடியோ ஆதாரத்தை வைத்திருந்த அஸ்வின், சக்திக்கு போன் போட்டு தன்னை ஒரு கும்பல் துரத்தி வருவதாகவும், போன் போட்டு அழைக்க, அவரைக் காப்பாற்ற சென்ற ஜனனி மற்றும் சக்தி, அவரிடம் இருந்து வீடியோ ஆதாரத்தை வாங்க இருந்த நேரத்தில், அஸ்வினை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற ஒரு மர்ம நபர், அந்த வீடியோ ஆதாரத்தை எடுத்துக் கொண்டு பைக்கில் எஸ்கேப் ஆகிவிட்டார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
இவரும் ஆதி குணசேகரனின் ஆளா?
அஸ்வினின் மரணம் தொடர்பாக ஜனனி மற்றும் சக்தியிடம் விசாரித்த போலீஸ் அதிகாரி, நீங்க ஏன் அங்க போனீங்க என கேட்க, அதற்கு, அவர்கள் அவனிடம் எங்களுடைய பொருள் ஒன்று இருந்தது அதை வாங்க சென்றோம் என்று கூறிக் கொண்டிருக்க, அது என்ன பொருள் அந்த போலீஸ் கேட்கும்போது அங்கு வரும் கொற்றவை, அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு என சொல்லி அவரை அனுப்பிவிடுகிறார். இந்த ஆளை பார்த்தால் ஏதோ சரியில்லாதது மாதிரியே தெரியுது என கொற்றவை சந்தேகப்படுகிறார். அவர் சந்தேகப்பட்டது படி, அந்த போலீஸ்காரர் ஆதி குணசேகரனின் ஆள் தான்.
ஜனனியின் தில்லுமுல்லு வேலைக்கு வேட்டு
அந்த போலீஸ் காரருக்கு போன் போட்டு பேசும் ஆதி குணசேகரன், எனக்கு தெரியவேண்டியதெல்லாம், அந்த ஜனனிக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம், அவன் இவகிட்ட ஏதாவது கொடுத்தானா என கேட்க, அவன் இவர்களிடம் எதுவும் கொடுக்கவில்லை என அந்த போலீஸ்காரர் போட்டு உடைக்க, அப்போ தன் சம்பந்தப்பட்ட எதுவும் அவர்களிடம் இல்லை என்பதை புரிந்து கொண்ட ஆதி குணசேகரன், வீட்டுக்கு வந்த ஜனனியை தனியாக அழைத்து பேசுகிறார். அப்போது உன்கிட்ட அந்த வீடியோ இல்லை என்பது எனக்கு தெரியும் என சொல்ல, அதற்கு ஜனனி, அந்த வீடியோ எங்ககிட்ட தான் இருக்கு என பதிலடி கொடுக்கிறார்.
ஜனனியிடம் விசாரணை நடத்திய குணசேகரன்
அப்போ அந்த வீடியோவை நீ பாத்தியா என ஆதி குணசேகரன் கேட்க, ஜனனியும் பார்த்தேன் என கூறுகிறார். சரி அதுல என்ன இருக்குனு சொல்லு பார்ப்போம் என சொல்கிறார். உடனே நீங்க ஈஸ்வரி அக்காவை தாக்கியதற்கான ஆதாரங்கள் அனைத்தும் அந்த வீடியோவில் இருப்பதாக சொல்லி மழுப்புகிறார் ஜனனி. இதனால் ஜனனியிடம் அந்த வீடியோ ஆதாரம் இல்லை என்பது குணசேகரனுக்கு கிட்டத்தட்ட தெரிந்துவிடுகிறது. இதனால் ஜனனியை ஆதி குணசேகரன் விரைவில் வீட்டை விட்டு வெளியேற்றுவார் என தெரிகிறது. அடுத்து என்னென்ன ட்விஸ்டெல்லாம் காத்திருக்கு என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

