MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • அறிவுக்கரசிக்கு ஆதி குணசேகரன் வைத்த ஆப்பு; இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது - எதிர்நீச்சல் தொடர்கிறது

அறிவுக்கரசிக்கு ஆதி குணசேகரன் வைத்த ஆப்பு; இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது - எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 28 2025, 11:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal Thodargiradhu Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Today Episode

சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான எதிர்நீச்சல் தொடர்கிறது, தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது. ஆதி குணசேகரன் தன்னுடைய தம்பிகளுடன் தர்ஷனின் திருமணத்திற்காக மண்டபம் புக் செய்ய கிளம்பிச் செல்கிறார்கள். அப்போது வெளியே ஒளிந்திருந்த ஜனனி, நந்தினி, தர்ஷினி மற்றும் ரேணுகா, பின்னர் வீட்டுக்குள் சென்று கேட்டை பூட்டு போட்டு பூட்டிவிட்டு, உள்ளே செல்கிறார்கள். அப்போது வீட்டின் கதவை அறிவுக்கரசி லாக் செய்திருப்பதை அறிந்ததும், தர்ஷினி, கயிறு கட்டி மாடி வழியாக ஏறி உள்ளே சென்று கதவை திறந்துவிடுகிறார். அனைவரும் சேர்ந்து அறிவுக்கரசி ரூமின் கதவை தட்டுகிறார்கள்.

24
ஆதாரத்தை அழிக்க முயலும் அறிவு
Image Credit : youtube/suntv

ஆதாரத்தை அழிக்க முயலும் அறிவு

ஆதாரம் அடங்கிய போன் கையில் இருந்ததால் வெடவெடத்துப் போகும் அறிவு, அதை தன் இடுப்பில் சொறுகிக்கொண்டு கதவை திறக்கிறார். முதலில் போனை எங்கே என சைலண்டாக கேட்கிறார்கள். அதற்கு அறிவு செவிசாய்க்காததால், அவரை இழுத்துப் போட்டு அடிக்கிறார் தர்ஷினி. பின்னர் கையை கட்டி, கழுத்தை நெறிக்கிறார்கள். இப்படி வீட்டில் அறிவுக்கரசியை அனைவரும் ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருக்கும் வேளையில், பணத்தை மறந்து வைத்துவிட்டதாக கூறி மீண்டும் வீட்டுக்கு வருகிறார் ஆதி குணசேகரன். அப்போது தன்னிடம் இருக்கும் செல்போனை எடுத்து ஜனனியிடம் கொடுப்பது போல் வந்து, அதை வெளியே தூக்கி எறிந்துவிடுகிறார் அறிவு.

Related Articles

Related image1
போனை அபேஸ் பண்ணிய ஜனனி; மாட்டிக்கொண்டு முழிக்கும் அறிவுக்கரசி..! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
Related image2
அறிவுக்கரசியை கதறக் கதற அடித்த தர்ஷினி; குணசேகரனிடம் சிக்கிய ஆதாரம்! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
34
ஆதி குணசேகரனுக்கு வந்த டவுட்
Image Credit : youtube/suntv

ஆதி குணசேகரனுக்கு வந்த டவுட்

அந்த போன் மீது கார் ஏறிவிடுகிறது. பின்னர் ஓடி வந்து அதை கையில் எடுக்கும் தர்ஷினி, போன் உடைந்துவிட்டதாக கூற, அருகில் இருக்கும் ஆதி குணசேகரன் வெடுக்கென அந்த போனை பிடுங்குகிறார். அதில் என்ன இருக்கு என கேட்க, ஜனனி அதில் ரகசியம் இருப்பதாக சொல்கிறார். பின்னர் செல்போன் ஹேக்கரான கரிகாலனின் நண்பன் ஒருவர் வருகிறார். அவர் வந்து அந்த போனில் உள்ள ஆதாரங்களை மீட்கும் வேலைகளில் இறங்குகிறார். இதற்கெல்லாம் அறிவுக்கரசி முட்டுக்கட்டை போட முயல்கிறார். இதனால் ஆதி குணசேகரனுக்கு அறிவுக்கரசி மீது சந்தேகம் அதிகரிக்கிறது.

44
அறிவுக்கரசிக்கு ஆப்பு
Image Credit : youtube/suntv

அறிவுக்கரசிக்கு ஆப்பு

போனை சரிபார்க்க எடுத்துச் சென்ற நிலையில், வீட்டைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க சிசிடிவி கேமரா மாட்ட முடிவு செய்கிறார் ஆதி குணசேகரன். இதற்காக ஆள் ஒருவரை வரவைத்து ஹாலில் ஒன்று, கேட்டில் ஒன்று, மாடியில் ஒன்று என சிசிடிவி மாட்டுவதற்கான இடத்தை சொல்கிறார். இதனால் இனி எந்த வித தில்லுமுல்லு வேலையும் செய்ய முடியாதே என ஷாக் ஆகிறார் அறிவுக்கரசி. இதன்பின் என்ன ஆனது? போனில் இருக்கும் ஆதாரம் ஆதி குணசேகரனிடம் சிக்கியதா? அறிவுக்கரசியின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சன் தொலைக்காட்சி
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
எல்லாம் முடிந்தது என நினைத்த அஞ்சலிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! சத்யா செய்த அந்த ரகசிய உதவி என்ன?! கெட்டிமேளம் அப்டேட்.!
Recommended image2
Singappenne : ஆனந்தி - அன்புவின் ஜாலி மொமெண்ட்ஸ்! கோகிலாவை அதிர வைத்த மாமனார் & மாமியார்.. கதையில் புதிய திருப்பம்!
Recommended image3
ரோகிணியை தூக்க ஸ்கெட்ச் போட்ட சத்யா - கௌதம்! மருமகள் சீரியலில் அதிரடி திருப்பம்.. மாட்டிக்கொள்வாரா ரோகிணி? இன்றைய பரபரப்பு எபிசோட்!
Related Stories
Recommended image1
போனை அபேஸ் பண்ணிய ஜனனி; மாட்டிக்கொண்டு முழிக்கும் அறிவுக்கரசி..! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
Recommended image2
அறிவுக்கரசியை கதறக் கதற அடித்த தர்ஷினி; குணசேகரனிடம் சிக்கிய ஆதாரம்! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved