MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • பிக் பாஸ் வீட்டு தலைக்கு காத்திருக்கும் ராஜ மரியாதை... கேப்டன்சி டாஸ்க் ஜெயிச்சா இவ்வளவு சலுகைகளா?

பிக் பாஸ் வீட்டு தலைக்கு காத்திருக்கும் ராஜ மரியாதை... கேப்டன்சி டாஸ்க் ஜெயிச்சா இவ்வளவு சலுகைகளா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் கேப்டன்சி டாஸ்க் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், அதில் ஜெயிப்பவர்களுக்கு சகல வசதிகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 08 2025, 03:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Benefits for Bigg Boss Captain
Image Credit : youtube/jiohotstartamil

Benefits for Bigg Boss Captain

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் கடந்த வாரம் தொடங்கியது. இந்த சீசனில் ஏராளமான புது முகங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர். வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வாரத்திற்கு பின்னர் தான் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை ஆரம்பிக்கும். ஆனால் இந்த சீசன் ஆரம்பமான முதல் நாளில் இருந்தே சண்டையும் தொடங்கிவிட்டது. இதில் பெரும்பாலும் திவாகர், விஜே பார்வதி, ரம்யா ஜோ, சுபிக்‌ஷா ஆகியோர் தான் சண்டைபோட்ட வண்ணம் உள்ளனர். மற்ற சீசன்களைக் காட்டிலும் இந்த சீசனில் மிஸ் ஆவது காமெடி தான். அதில் யாருமே கவனம் செலுத்துவதில்லை.

24
பிக் பாஸ் கேப்டன்
Image Credit : youtube/jiohotstartamil

பிக் பாஸ் கேப்டன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைப்படி வார வாரம் ஒருவர் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார். அவரின் தலைமையில் தான் அந்த வாரம் முழுக்க வீட்டின் செயல்பாடுகள் இருக்கும். யார்... யார் எந்தெந்த அணியில் இருக்க வேண்டும் என்பதை கேப்டன் தான் தீர்மானிப்பார். அதேபோல் வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை சரிவர பெற்றுத் தரும் பொறுப்பும் கேப்டனுக்கு உண்டு. அதுமட்டுமின்றி கேப்டனாக தேர்வு செய்யப்படும் நபரை அந்த வாரத்திற்கான நாமினேஷனில் யாரும் நாமினேட் செய்ய முடியாது.

Related Articles

Related image1
மோசமான அசைவை காட்டும் பிக் பாஸ் ரம்யா ஜோ..! சாக்கடையாக மாறிப் போன விஜய் டிவி ஷோ.. கழுவி ஊற்றும் மக்கள்
Related image2
தர்பூசணி திவாகரை அடிக்க பாய்ந்த ரம்யா ஜோ... கலவர பூமியாக மாறிய பிக் பாஸ் வீடு
34
வீட்டு தல
Image Credit : youtube/jiohotstartamil

வீட்டு தல

கேப்டன் இந்த முறை வீட்டு தல-யாக மாறி இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் போட்டியின் அடிப்படையில் அதில் யார் வெற்றிபெறுகிறார்களோ அவர்கள் வீட்டு தல ஆக முடியும். அந்த வீட்டு தல நாமினேஷனில் இருந்து தப்பிப்பது மட்டுமின்றி அடுத்த வாரத்திற்கான கேப்டன்ஸி டாஸ்கில் நேரடியாக போட்டியிட முடியும் என்கிற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ஒரு வகையில் பார்த்தால் இது பைனலுக்கு முன்னேறும் ஒரு எக்ஸ்பிரஸ் வே, ஒவ்வொரு வாரமும் கேப்டன்ஸி டாஸ்கில் வெற்றி பெற்றால் அந்த நபர் நாமினேஷனில் சிக்காமல் பைனலுக்கே செல்ல முடியும்.

44
கேப்டனுக்கு தனி ரூம்
Image Credit : youtube/jiohotstartamil

கேப்டனுக்கு தனி ரூம்

அதுமட்டுமின்றி, இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில், இந்த முறை கேப்டனுக்கு என தனி ரூம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு அவருக்கு சகல வசதியும் கிடைக்குமாம். இதனால் கேப்டனாகும் நபர்கள் ஒரு வாரம் ராஜ வாழ்க்கை வாழ வாய்ப்பு இருக்கிறது. முதல் வாரத்திற்கான கேப்டன்ஸி டாஸ்க் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று யார் முதல் வீட்டு தலை ஆகப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் சீசன் 9

Latest Videos
Recommended Stories
Recommended image1
எதிர்நீச்சல் 2: ஆதி குணசேகரனின் ஆட்டம் க்ளோஸ்? ஜனனியின் மாஸ் ரீ-என்ட்ரி! நிலைகுலைந்து போன ஏ.ஜி!
Recommended image2
"பாரதி கண்ணம்மா" புகழ், ரோஷினிக்கு ரகசிய திருமணம்.! மணமகன் யார் தெரியுமா?
Recommended image3
Ayyanar Thunai: உயிருக்கே ஆபத்து! கூரையை பிரித்து வீட்டிற்குள் குதித்த சோழன் - சிக்கப் போவது யார்?
Related Stories
Recommended image1
மோசமான அசைவை காட்டும் பிக் பாஸ் ரம்யா ஜோ..! சாக்கடையாக மாறிப் போன விஜய் டிவி ஷோ.. கழுவி ஊற்றும் மக்கள்
Recommended image2
தர்பூசணி திவாகரை அடிக்க பாய்ந்த ரம்யா ஜோ... கலவர பூமியாக மாறிய பிக் பாஸ் வீடு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved