- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சரியான ஃபிராடு குடும்பம்; வாடகை பாக்கி, கடன் பஞ்சாயத்து என பாண்டியனை அசிங்கப்படுத்திய முத்துவேல்!
சரியான ஃபிராடு குடும்பம்; வாடகை பாக்கி, கடன் பஞ்சாயத்து என பாண்டியனை அசிங்கப்படுத்திய முத்துவேல்!
Best Scene Of Pandian Stores 2 Serial : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 665ஆவது எபிசோடின் சிறந்த காட்சி எது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Muthuvel humiliates Pandian over Thangamayil's family,
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வாரம் முழுவதும் தங்கமயில் பற்றிய உண்மையை சரவணன் சொல்ல அதனால் என்ன பிரச்சனைகள் வந்தது என்று பார்த்தோம். இனி இந்த வாரம் ஊரார், அக்கம் பக்கத்தினர், தங்கமயில் குடும்பத்தின் ரிவெஞ்ச் என்ன என்பது பற்றியும், கோமதியின் அண்ணன்களால் வரும் பிரச்சனை பற்றியும் தான் காட்சிகள் இடம் பெற்று வருகிறது. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 665ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
Pandian Stores 2 today episode highlight,
மகன் சரவணனின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்ற மன வேதனையில் நிம்மதியில்லாமல் பாண்டியன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அம்மனிடமும் முறையிட்டார். அப்போது கோயிலில் வந்து பலரும்பலவிதமாக சரவணனை பற்றி பேசினர். இதில் அவர் ஒரு குடிகாரன் என்றும், மோசமானவர் என்றும் குறிப்பிட்டனர். ஆனால், பாண்டியன் எதுவும் பேசவில்லை.
என்றும் இல்லாத திருநாளாக முத்துவேலுவும் கோயிலுக்கு வந்தார். வந்தவர் சாமியை தரிசனம் செய்துவிட்டு சென்றிருக்கலாம். ஆனால், நேராக பாண்டியனிடம் வந்து, என்ன மகனோட வாழ்க்கை இப்படியாகிவிட்டது என்று சாமியிடம் புலம்ப வந்தாயா? ஒரு அரைமணி நேரம் விசாரித்தாலே போதும், அந்த குடும்பத்தை பற்றி கதை கதையாக சொல்கிறார்கள். நீ பொண்ணு எடுத்திருக்கிற, சரியாக விசாரிக்கமாட்டாயா?
Muthuvel calls Thangamayil family a fraud,
அவங்களுடைய குடும்பம் சரியான பிராடு குடும்பம், சொந்த வீடு கூட கிடையாது. வாடகை வீடு தான் வீட்டு வாடகை கூட ஒழுங்கா கொடுப்பது கூட கிடையாதாம். பல மாதங்களாக பாக்கி வேறு இருக்கிறதாம். இதில் கடன் வேறு நிறைய இருக்கிறதாம். வீட்டு வாசல் கதவை பூட்டிக்கொண்டு பின்புறமாக வந்து போறாங்க..
ஒருத்தன் கூட அந்த குடும்பத்தை பற்றி நல்லவிதமாக சொல்றது கிடையாது. ஒருநாள் இரவு உன்னுடைய சம்பந்தி என்னுடைய வீட்டிற்கு திருட வந்தான். அவன் உண்மையில் எங்களுடைய வீட்டிற்கு திருடத்தான் வந்திருக்கான். அவனை அப்போதே போலீஸ் ஸ்டேஷனில் பிடித்து கொடுத்திருந்தான் எந்த பிரச்சனையும் வந்திருக்காது. நாங்கள் தான் தவறு செய்துவிட்டோம்.
Thangamayil Secret Exposed,
இப்படியொரு குடும்பத்தில் பெண் எடுத்து என்ன ஆட்டம் போட்ட நீ, உனக்கு இது தேவைதான். பேசாமல் இன்னொரு வேலை செய்திருக்கலாம். அதாவது, உன்னுடைய மூத்த மகனை பணக்கார பெண்ணை இழுத்துட்டு வரச்சொல்லியிருக்கலாம். அப்படியே மாமனாரிடம் சொல்லி அரசு வேலையும் வாங்கியிருக்கலாம். உன்னுடைய மகன் வரைக்கும் எதுக்கு போகணும் நீயும் அதைத்தான் செய்த, பணக்கார பெண்ணை எப்படி இழுத்துட்டு போன. நான் உன்னை தலை குணிய வைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், யார் யாரோ உன்னை தலை குணிய வைக்கிறார்கள் என்று முத்துவேல் பேசினார்.
Thangamayil Family Fraud,
அதுமட்டுமின்றி தனது தம்பியோடு சேர்ந்து வேறு பாண்டியன் குடும்பத்தை பற்றி பேசினார். அதாவது, தங்கமயில் அம்மா பாக்கியம் இந்த பிரச்சனையை சும்மாவே விடமாட்டார். அவர் பிரச்சனை கொடுத்துக் கொண்டே இருப்பார். அப்படிப்பட்டவர் தான் அவர் என்றார். இது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சிறந்த காட்சியாக பார்க்கப்படுகிறது. அதே போன்று பழனிவேல் மூலமாகவும் கஷ்டத்தை அனுபவித்த பாண்டியனுக்கு இப்போது மகனின் வாழ்க்கை ஆறாத வடுவாக மாறிவிட்டது. இஹ்இனி அடுத்தடுத்த எபிசோடுகளில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.