MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • செல்வநாயகியிடம் உண்மையை உடைத்த சஞ்சய்; சத்யாவின் வாழ்க்கை கேள்விக்குறியா?ஆடுகளம் சீரியல் அதிரடி மூவ்மெண்ட்ஸ்!

செல்வநாயகியிடம் உண்மையை உடைத்த சஞ்சய்; சத்யாவின் வாழ்க்கை கேள்விக்குறியா?ஆடுகளம் சீரியல் அதிரடி மூவ்மெண்ட்ஸ்!

ஆடுகளம் சீரியலில் சஞ்சய் செல்வநாயகிடம் சத்யா பற்றிய உண்மையை உடைக்கிறான்.பயம் மற்றும் பதட்டத்தில் இருக்கும் சத்யா என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 18 2026, 08:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சத்யா மீது வேண்டா வெறுப்பாக இருக்கும் தேவி:
Image Credit : Sun TV You Tube

சத்யா மீது வேண்டா வெறுப்பாக இருக்கும் தேவி:

ஆடுகளம் சீரியலில் இன்றைய எபிசோடில் தேவியிடம் சென்று அக்கா எனக்கு ஒரு காபி போட்டு தாயென்று சத்யா கேட்க நீ எப்படி இந்த வீட்டுக்கு மருமகளோ அதே மாதிரி தான் நானும் இந்த வீட்டுக்கு மருமகன் உனக்கு தேவை என்பதை நீயே செஞ்சுக்கோ என்று தன் தங்கையை கடுமையாக பேசுகிறார். சத்யா அதை கேட்டு மனம் உருகி போகிறார். நான் சந்தோஷமா இருக்கிறது யாருக்குமே புடிக்கல. உனக்கும் புடிக்கல என்று தேவி சொல்ல நீ சந்தோஷமா இருக்கிறதா என் கனவு, ஏன் அக்கா இப்படி எல்லாம் பேசுற என்று சத்யா கூறுகிறார். 

25
Aadukalam Serial Sanjay Reveals Truth to Selvanayagi Sathya scared
Image Credit : Sun TV You Tube

Aadukalam Serial Sanjay Reveals Truth to Selvanayagi Sathya scared

அதுக்காகத்தான் நான் இவ்வளவு பாடுபட்டேன் என்று சொல்கிறார் அப்போ திரும்பி பாடுபட்டு அதை நாசமாக்கிடாத என்கிறார் தேவி. உன்ன பார்த்தாலே எனக்கு கோபம் பொங்குது என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அடுப்பில் இருக்கும் பால் பொங்கி விடுகிறது. அய்யய்யோ பால் பொங்கிருச்சு எல்லாம் வீணா ஆயிடுச்சு. என்று எடுத்து பாத்திரத்தை போடும்போது உன் முகத்தை பார்க்கும் போது எனக்கு எரிச்சலா வருது. கொஞ்ச நேரம் சந்தோஷமா இருந்தா சில பேருடைய கண்ணு உருத்துது என்று சத்யாவை கடுமையாக பேசுகிறார் தேவி. நம்ம நிம்மதியா வாழ விட மாட்டாங்க ஒதுங்கிப் போக மாட்டாங்க என்று சத்யாவை மறைமுகமாக பேசுகிறார் தேவி. எப்ப தான் இந்த தொலை எல்லாம் தீருமோ நிம்மதியா காபி கூட போட விட மாட்டேங்கிறாங்க சீ... என்று சொல்லிவிட்டு போகிறார் தேவி. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சத்யா மனம் உடைந்து அழுது கொண்டே அர்ஜுனுக்கு காபி எடுத்து கொண்டு மாடிக்கு செல்கிறார்.

35
சத்யாவின் போட்டோவை தூக்கி எறிந்த அர்ஜுன்:
Image Credit : Sun TV You Tube

சத்யாவின் போட்டோவை தூக்கி எறிந்த அர்ஜுன்:

அர்ஜுனுக்கு காபி கொண்டு போகிறார் சத்யா. காலையில் எழுந்து பார்க்கும் பொழுது அருகில் சத்யாவும் அர்ஜுனும் எடுத்துக்கொண்ட போட்டோஇருக்கிறது.அதை கண்டு கடும் கோபம் கொண்ட அர்ஜுன் நான் எவ்வளவு தடவை இதை தூக்கி போட்டாலும் திரும்பி யார் இங்கவைக்கிறது. என்று கையில் போட்டோவை எடுத்துக்கொண்டு இன்னைக்கு காலையில இவன் மூஞ்சில தான் நான் முழிச்சேன். இன்னைக்கு என்ன நடக்க போகுதோ என்று சொல்லிக் கொண்டே அந்த போட்டோவை தூக்கி எரிகிறார் அர்ஜுன். அப்பொழுது சத்யா கையில் காபியுடன் வர தூக்கி எறிந்த போட்டோ அவரது காலில் படுகிறது. மிகவும் வருத்தத்துடன் அந்த போட்டோவை எடுத்து பார்க்கிறார் அதனை பார்த்த அர்ஜுன் வேகம் வேகமாக எழுந்து குளிக்க செல்கிறார். வருத்தத்துடன் வருகிறார் சத்யா. அந்த கையில் காபியை வைத்துக் கொண்டே நின்று கொண்டிருக்கிறார்.

45
எதிர்பார்க்காமல் வரும் சஞ்சய்:
Image Credit : Sun TV You Tube

எதிர்பார்க்காமல் வரும் சஞ்சய்:

கையில் காபியை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கும் சத்தியா திடீரென்று அந்த காபியை வாங்குகிறார் சஞ்சய் யார் என்று பார்க்கும்போது சஞ்சய் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இது இதுக்கெல்லாம் காரணம் நீ தானே என்று அவரிடம் சண்டை போட்டு அவரை ஓங்கி கன்னத்தில் ஒரு அறை விடுகிறார் அதை பார்த்து விடுகிறார் அர்ஜுன். நான் உண்மைய சொல்லலனு அடிக்கிறா என்று அர்ஜுனிடம் சொல்கிறார். பிறகு கோவத்துடன் சஞ்சய் செல்கிறான்

55
செல்வநாயகியிடம் சொல்லும் சஞ்சய்:
Image Credit : Sun TV You Tube

செல்வநாயகியிடம் சொல்லும் சஞ்சய்:

சத்யா அடித்த கோபத்தில் சத்யா யார் என்றும் நளனுக்கு என்ன வேணும் என்றும் உண்மையை சொல்ல முற்படுகிறார் சஞ்சய். சத்யாவிடம் செல்வநாயகி கேட்கிறார் உனக்கும் நளனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கும்போது சத்யா அதிர்ச்சிஅடைகிறாள்.சஞ்சய் அடித்த கோபத்தில் உண்மையை சொல்லிவிட்டானா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே இந்த எபிசோடு முடிவடைகிறது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
வீட்டோட மாப்பிள்ளை மயில்வாகனத்தை மட்டந்தட்டி அவமானப்படுத்திய சந்திரகலா; கார்த்திகை தீபம் ரணகளம்!
Recommended image2
பாரிஜாதம் சீரியலில் இருந்து திடீரென விலகிய ஹீரோ... காரணம் என்ன தெரியுமா?
Recommended image3
அம்மா தொல்லை இனி இல்லை... மீனாவால் தப்பித்த தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved