- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஆடுகளம் சீரியல் சத்யா ஒரு எபிசோடிற்கு இவ்வளவு சம்பளம் வாங்குறாரா? டெல்னா டேவிஸின் சீக்ரெட் சொத்து விவரம் இதோ!
ஆடுகளம் சீரியல் சத்யா ஒரு எபிசோடிற்கு இவ்வளவு சம்பளம் வாங்குறாரா? டெல்னா டேவிஸின் சீக்ரெட் சொத்து விவரம் இதோ!
Delna Davis Luxury Lifestyle and Net Worth : டாப் குக்கு டூப் குக்கு ரியாலிட்டி ஷோவின் மூலமாக பிரபலமான ஆடுகளம் சீரியல் நடிகை டெல்னா டேவிஸின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஆடுகளம் சீரியல் சத்யா
சன் டிவியில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மிகப் பிரபலமான சீரியலான ஆடுகளம் சீரியல் ஹீரோயினி டெல்னா டேவிஸ் ஆடுகளம் சீரியலுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்றும் அவருடைய சொத்து மதிப்புகளை பற்றியும் இதில் பார்க்கலாம்.
டெல்னா டேவிஸ் சம்பளம் மற்றும் நிகர சொத்து மதிப்பு
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகையான டெல்னா டேவிஸ் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கிறார்.இவர் பரதநாட்டிய கலைஞர். இவர் 2015-இல் 'யூ டூ புரூட்டஸ்' மூலம் அறிமுகமாகி, 'ஹேப்பி வெட்டிங்' மற்றும் 'குரங்கு பொம்மை' போன்ற படங்களில் நடித்துள்ளார்.
டெல்னா டேவிஸ் பிறந்த இடம்
கேரளாவின் திருச்சூரில் பிறந்தார் செப்டம்பர் 24, 1995 ஆம் ஆண்டு பிறந்துள்ளார் தற்போது இவருடைய வயது 31. சின்னத்திரை: சினிமாவில் இருந்து சின்னத்திரை ஆன சீரியல் மெகா தொடரில் நடித்து வருகிறார். அன்பே வா: முதல் முதலில் சின்னத்திரையில் இவர் நடித்த முதல் சீரியல் அன்பே வா ஹீரோயின் கதாபாத்திரத்தில் டெல்னா டேவிஸ் நடித்து வந்தார். ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தவர். இல்லத்தரசிகள் அனைவரும் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்தவர்.
அன்பேவா சீரியலின் சம்பளம்:
ஒரு நாளைக்கு 15,000 முதல் 30,000 வரை அல்லது அதற்கும் அதிகமாக சம்பளம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆடுகளம் சீரியல்: அன்பே வா முடிந்த பிறகு இரண்டாவதாக நடிக்கும் ஆடுகளம் சீரியல் இதில் இவர் ஹீரோயினியாக நடிக்கிறார். மீண்டும் இளத்தரசிகளின் மனதில் நீங்காத இ இடத்தை தக்க வைத்துக் கொள்கிறார். சம்பளம்: டெல்னா டேவிஸ் 'ஆடுகளம்' சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு 15,000 முதல் 20,000 வரை சம்பளம் பெறுவதாக தெரிவிக்கின்றன. இவர் இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கேரளாவில் இருக்கும் சொத்து மதிப்பு:
டெல்னா டேவிஸ் சொந்த ஊரான கேரளாவில் உள்ள திருச்சூரில் இவருக்கு அதிக அளவில் சொத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. பெரிய பங்களா வீடு மற்றும் நான்கு சொகுசு கார்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இல்லாமல் சென்னையில் இவர் பணிபுரிவதால் இவருக்கு என்று ஒரு தனி அபார்ட்மெண்ட் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.