MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • 4 சிம்கள், 75GB டேட்டா: ரூ.449 மட்டுமே.. இந்த பிளான் தெரிஞ்சா மற்ற ரீசார்ஜ் வேண்டாம்

4 சிம்கள், 75GB டேட்டா: ரூ.449 மட்டுமே.. இந்த பிளான் தெரிஞ்சா மற்ற ரீசார்ஜ் வேண்டாம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.449-ல் புதிய குடும்பத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் 1 மெயின் சிம் உடன் மேலும் 3 குடும்ப / ஆட்-ஆன் சிம்களை சேர்த்து மொத்தம் 4 சிம்களை பயன்படுத்தலாம். இந்த திட்டம் பற்றி முழுமையாக இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

2 Min read
Author : Raghupati R
Published : Feb 08 2026, 08:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஜியோ ரூ.449 பிளான்
Image Credit : Google

ஜியோ ரூ.449 பிளான்

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்காக குறைந்த செலவில் அதிக நன்மைகள் தரும் புதிய போஸ்ட்பெய்ட் குடும்பத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ குடும்பத் திட்டம் (JioPlus Family Plan) என்ற இந்த திட்டத்தில், ரூ.500-க்கும் குறைவான மாத கட்டணத்தில் (ரூ.449 + GST) ஒரே நேரத்தில் 4 சிம் கார்டுகளை பயன்படுத்த முடியும். ஒரு மெயின் சிம்முடன், மேலும் 3 குடும்பங்கள் / ஆட்-ஆன் சிம்களை சேர்க்கலாம் என்பதால், முழு குடும்பத்திற்கும் இது ஒரு சிக்கனமான தீர்வாக பார்க்கப்படுகிறது.

25
ஜியோ 4 சிம் திட்டம்
Image Credit : Google

ஜியோ 4 சிம் திட்டம்

இந்த JioPlus குடும்பத் திட்டத்தின் முக்கிய அம்சமாக, மொத்தம் 75 ஜிபி பகிரக்கூடிய டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். 75 ஜிபி டேட்டா முடிந்த பிறகு, கூடுதல் டேட்டாவுக்கு ஒரு ஜிபிக்கு ரூ.10 என்ற கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், அனைத்து சிம்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியும் வழங்கப்படுகிறது.

Related Articles

Related image1
தங்கம் ஏன் பிங்க் பேப்பரில் சுற்றிக் கொடுக்கப்படுகிறது தெரியுமா? அடேங்கப்பா.!!
Related image2
பிப்ரவரி 15க்கு முன் இந்த வேலையை முடிங்க.. இல்லைனா கட்டணம் கட்டணும்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்களே அலெர்ட்
35
ஜியோ அன்லிமிடெட் கால்
Image Credit : ANI

ஜியோ அன்லிமிடெட் கால்

இந்த திட்டத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு கூடுதல் உறுப்பினருக்கும் மாதத்திற்கு ரூ.150 செலுத்த வேண்டும். அதே நேரத்தில், ஒவ்வொரு ஆட்-ஆன் சிம்முக்கும் தனியாக 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதனால், தனித்தனியாக ரீசார்ஜ் செய்வதைவிட, குடும்பத்திற்கே ஒரே பில்லில் செலவு குறைவாக நிர்வகிக்க முடிகிறது.

45
ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள்
Image Credit : ANI

ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள்

கூடுதல் நன்மைகளாக, JioTV, JioCinema மற்றும் JioCloud போன்ற OTT சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. 5ஜி வசதி உள்ள கைபேசி வைத்திருப்பவர்கள், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா அனுபவிக்கலாம். மேலும், சில பயனர்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் டிவி சந்தா, ஜியோ ஈஐ கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் ஜியோ ஹோம் சேவையின் இலவச சோதனை இணைப்பு போன்ற கூடுதல் சலுகைகள் கிடைக்கின்றன.

55
ஜியோபிளஸ் போஸ்ட்பெய்ட்
Image Credit : Pinterest

ஜியோபிளஸ் போஸ்ட்பெய்ட்

இந்த ஜியோபிளஸ் (JioPlus) குடும்பத் திட்டத்தை MyJio ஆப் மூலமாகவோ அல்லது அருகிலுள்ள ஜியோ ஸ்டோரில் நேரடியாக சென்று எளிதாக ஆக்டிவேட் செய்யலாம். குறைந்த கட்டணம், அதிக டேட்டா, பல சிம்கள், OTT சலுகைகள் என அனைத்தையும் ஒரே திட்டத்தில் இணைத்துள்ளதால், இந்த புதிய ரீசார்ஜ் திட்டம் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜியோ
மறுஊட்டத் திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
"ஜியோ vs ஏர்டெல் vs விஐ: 1.5GB டேட்டா, 84 நாட்கள் பலன்கள் - வாரி வழங்கும் நிறுவனம் எது?"
Recommended image2
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. KYC விதிகளில் பெரிய மாற்றம்? சைபர் மோசடியை தடுக்க கிடுக்கிப்பிடி!
Recommended image3
சம்பள உயர்வுன்னு ஆசைப்பட்டு செக் பண்ணாதீங்க.. அக்கவுண்ட் காலியாகிடும்! அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்!
Related Stories
Recommended image1
தங்கம் ஏன் பிங்க் பேப்பரில் சுற்றிக் கொடுக்கப்படுகிறது தெரியுமா? அடேங்கப்பா.!!
Recommended image2
பிப்ரவரி 15க்கு முன் இந்த வேலையை முடிங்க.. இல்லைனா கட்டணம் கட்டணும்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்களே அலெர்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved