MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • பிப்ரவரி 15க்கு முன் இந்த வேலையை முடிங்க.. இல்லைனா கட்டணம் கட்டணும்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்களே அலெர்ட்

பிப்ரவரி 15க்கு முன் இந்த வேலையை முடிங்க.. இல்லைனா கட்டணம் கட்டணும்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்களே அலெர்ட்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) பிப்ரவரி 15 முதல் குறிப்பிட்ட பண பரிமாற்றங்களுக்கு புதிய சேவை கட்டணங்களை அறிமுகப்படுத்துகிறது. பிப்ரவரி 15க்கு முன் செய்து முடித்தால் கூடுதல் செலவை தவிர்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Feb 08 2026, 06:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பிப்ரவரி 15 முதல் புதிய கட்டணங்கள்
Image Credit : Google

பிப்ரவரி 15 முதல் புதிய கட்டணங்கள்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டண விதிமுறைகள் வரும் பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வரும் என்று எஸ்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது. உடனடி பண பரிமாற்றத்திற்கு பயன்படும் ஐஎம்பிஎஸ் சேவையில், இதுவரை ஆன்லைனில் இலவசமாக வழங்கப்படும் சில வசதிகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

25
எஸ்பிஐ புதிய விதிகள்
Image Credit : stockPhoto

எஸ்பிஐ புதிய விதிகள்

குறிப்பாக அவசர பண பரிமாற்றங்களுக்கும், UPI வரம்பை மீறும் நேரங்களிலும் ஐஎம்பிஎஸ் அதிகம் பயன்படுத்தப்படுவதால், இந்த மாற்றம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுவரை நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் யோனோ ஆப் வழியாக மேற்கொள்ளப்படும் சில ஐஎம்பிஎஸ் பரிமாற்றங்கள் கட்டணமின்றி இருந்தன. ஆனால், டிஜிட்டல் சேவைகளுக்கான தொழில்நுட்ப செலவுகள் அதிகரித்து வருவதால், பெரிய தொகை பரிமாற்றங்களுக்கு குறைந்த அளவில் சேவை கட்டணம் விதிக்க எஸ்பிஐ முடிவு செய்துள்ளது.

Related Articles

Related image1
10, 15 வருஷம் காத்திருக்க வேண்டாம்.. வெறும் 1095 நாட்களில் பம்பர் தொகையை அள்ளி கொடுக்கும் வங்கிகள்
Related image2
தங்கம் ஏன் பிங்க் பேப்பரில் சுற்றிக் கொடுக்கப்படுகிறது தெரியுமா? அடேங்கப்பா.!!
35
எஸ்பிஐ ஆன்லைன் பண பரிமாற்றம்
Image Credit : Bloomberg.com

எஸ்பிஐ ஆன்லைன் பண பரிமாற்றம்

இதன் மூலம் டிஜிட்டல் கட்டமைப்பை மேம்படுத்தவும், வருமானத்தை உயர்த்தவும் வங்கி திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின்படி, ரூ.25,000 வரை ஐஎம்பிஎஸ் பரிமாற்றங்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. இது சாதாரண வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியான செய்தி. ரூ.25,001 முதல் ரூ.1 லட்சம் வரை பரிமாற்றங்களுக்கு ரூ.2 + ஜிஎஸ்டி, ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை ரூ.6 + ஜிஎஸ்டி, மேலும் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ரூ.10 + ஜிஎஸ்டி சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.

45
எஸ்பிஐ பண பரிமாற்ற கட்டணம்
Image Credit : Getty

எஸ்பிஐ பண பரிமாற்ற கட்டணம்

அதே நேரத்தில், வங்கி கிளைக்கு நேரில் சென்று ஐஎம்பிஎஸ் பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பழைய கட்டணங்களே தொடரும். அனுப்பும் தொகைக்கு ஏற்ப ரூ.2 முதல் ரூ.20 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. மேலும், சில சிறப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த புதிய கட்டணங்கள் பொருந்தாது.

55
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்
Image Credit : Getty

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள்

பாதுகாப்புத் துறை, மத்திய அரசு, ரயில்வே, காவல்துறை ஊழியர்களின் சம்பளக் கணக்குகள், ஷௌர்யா ஃபாமிலிஷன் மற்றும் எஸ்பிஐ ரிஷ்தே கணக்குகள் வைத்திருப்பவர்கள், வழக்கம் போல ஐஎம்பிஎஸ் சேவையை இலவசமாகப் பெறலாம். எனவே, அதிக தொகை பரிமாற்றம் செய்ய நினைப்பவர்கள், பிப்ரவரி 15க்கு முன் பண பரிமாற்றங்களை முடித்தால் கூடுதல் செலவை தவிர்க்கலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாரத ஸ்டேட் வங்கி
வங்கி
வங்கிக் கணக்கு
தனிநபர் நிதி
SBI அறிவிப்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.2 லட்சம் முதலீடு போதும்.! மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம்.! Small Business Ideas in Tamil
Recommended image2
பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. ரயில் டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி.. எப்படி பெறுவது? முழு விவரம்!
Recommended image3
IRCTC : ஸ்லீப்பர் டிக்கெட்டில் ஏசி கோச்சில் பயணம் செய்ய வேண்டுமா? புக்கிங் போது இந்த ஒரு ஆப்ஷனை மட்டும் கிளிக் செய்யுங்க.!
Related Stories
Recommended image1
10, 15 வருஷம் காத்திருக்க வேண்டாம்.. வெறும் 1095 நாட்களில் பம்பர் தொகையை அள்ளி கொடுக்கும் வங்கிகள்
Recommended image2
தங்கம் ஏன் பிங்க் பேப்பரில் சுற்றிக் கொடுக்கப்படுகிறது தெரியுமா? அடேங்கப்பா.!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved