MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய சாட்ஜிபிடி அட்லஸ்.. ஓபன்ஏஐ போட்ட சரவெடி!

குரோமுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய சாட்ஜிபிடி அட்லஸ்.. ஓபன்ஏஐ போட்ட சரவெடி!

ஓபன்ஏஐ, 'சாட்ஜிபிடி அட்லஸ்' என்ற புதிய ஏஐ வெப் பிரவுசரை வெளியிட்டுள்ளது. இது கூகுள் குரோம் மற்றும் பெர்பிலெக்சிட்டியின் காமெட் பிரவுசருக்கு போட்டியாக, சாட்ஜிபிடி சேவையுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.

1 Min read
Author : Raghupati R
Published : Oct 22 2025, 10:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சாட்ஜிபிடி அட்லஸ்
Image Credit : Google

சாட்ஜிபிடி அட்லஸ்

ஓபன்ஏஐ புதிய ஏஐ வெப் பிரவுசர் ‘சாட்ஜிபிடி அட்லஸ்’ (ChatGPT Atlas) ஐ வெளியிட்டுள்ளது. இது கூகுள் குரோம் மற்றும் பெர்பிலெக்சிட்டியின் காமெட் பிரவுசரை நேரடியாக சவால் விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபலமான சாட்ஜிபிடி சேவையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட அட்லஸ், வலை பிரவுசர் மற்றும் ஏஐ உதவியாளராக புதிய அனுபவத்தை வழங்குகிறது. தற்போது, ​​மேக்ஓஎஸ் பயனர்கள் இதை பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளனர். மேலும் விரைவில் விண்டோஸ், ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பதிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24
ஓபன்ஏஐ புதிய ஏஐ வெப் பிரவுசர்
Image Credit : Getty

ஓபன்ஏஐ புதிய ஏஐ வெப் பிரவுசர்

இணைய பிரவுசர் சந்தையில் கூகுளின் குரோம் பிரவுசர் பெரும் ஆதிக்கம் கொண்டுள்ளது. சுமார் 60% சந்தைப் பங்கு குரோமிடம் உள்ளது. உலகளவில் 300 கோடிக்கும் மேலான பயனர்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர். ஆப்பிள் சாதனங்களில் பிரவுசர் சஃபாரி, மைக்ரோசாப்ட் எட்ஜ் மற்றும் மொஸில்லா ஃபயர்பாக்ஸ் ஆகியவை அடுத்த இடங்களில் உள்ளன.

Related Articles

Related image1
Apple CEO : மெர்சலாயிட்டேன்!.. இதான்யா தீபாவளி! ஆப்பிள் சிஇஓ டிம் குக் வெளியிட்ட போட்டோ வைரல்.!
Related image2
இந்தியர்களுக்கு குட் நியூஸ்.. அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களுக்கு இதுதான் தீபாவளி பரிசு!
34
அட்லஸ் vs குரோம்
Image Credit : Google

அட்லஸ் vs குரோம்

கூகுள் குரோமுக்கு வலுவான போட்டியை உருவாக்கும் நோக்கில், ஏஐ ஸ்டார்ட்-அப் நிறுவனம் பெர்பிலெக்சிட்டி ஜூலை 9, 2025 அன்று ‘காமெட்’ என்ற ஏஐ வெப் பிரவுசரை அறிமுகப்படுத்தியது. ஆகஸ்ட் மாதத்தில் காமெட் பிளஸ் சேவை தொடங்கப்பட்டது, ஆரம்பத்தில் மேக்ஸ் சந்தாதாரர்கள் மாதம் 200 டாலர் கட்டணத்தில் இதைப் பயன்படுத்துகின்றனர்.

44
இலவச எஐ பிரவுசர்
Image Credit : Getty

இலவச எஐ பிரவுசர்

அதனை தொடர்ந்து அக்டோபர் மாதத்தில், பெர்பிலெக்சிட்டி அனைத்து பயனர்களுக்கும் காமெட் பிரவுசரை இலவசமாக்கியது. இது இணைய தேடல்கள், மின்னஞ்சல் உருவாக்கம், டேப் ஒழுங்கமைப்பு மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் போன்ற வேலைகளில் தனிப்பட்ட உதவியாளராக செயல்படுகிறது. முழுமையாக இலவசமாக்கப்பட்டதால், காமெட் கூகுள் குரோமுக்கு வலுவான மற்றும் தனித்துவமான போட்டியாளராக திகழ்கிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சாட்ஜிபிடி
OpenAI
கூகிள்
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே ரீசார்ஜ்.. ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் கொண்டாட்டம்..! 240GB டேட்டா + Apple TV இலவசம்..!
Recommended image2
அடிமட்ட ரேட்டில் ஐபோன்.. மலிவு விலை ஐபோன் விரைவில் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?
Recommended image3
"இது பட்ஜெட் போனா இல்ல பிரீமியம் போனா? Lava Yuva Star 3-ன் மிரட்டலான Glass Back Design!"
Related Stories
Recommended image1
Apple CEO : மெர்சலாயிட்டேன்!.. இதான்யா தீபாவளி! ஆப்பிள் சிஇஓ டிம் குக் வெளியிட்ட போட்டோ வைரல்.!
Recommended image2
இந்தியர்களுக்கு குட் நியூஸ்.. அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களுக்கு இதுதான் தீபாவளி பரிசு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved