MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வீட்டுக்கே வரவழைத்து கட்டிலில் சுபிதா! பார்க்க கூடாததை பார்த்த சித்தப்பா.. இறுதியில் அலறி கூச்சல்! நடந்தது என்ன?

வீட்டுக்கே வரவழைத்து கட்டிலில் சுபிதா! பார்க்க கூடாததை பார்த்த சித்தப்பா.. இறுதியில் அலறி கூச்சல்! நடந்தது என்ன?

Women Murder Case: கன்னியாகுமரியில் கள்ளக்காதலை கைவிட மறுத்த சுபிதா என்ற பெண், தன்னை கண்டித்த மாற்றுத்திறனாளி சித்தப்பாவை தாக்கியால் ஆத்திரத்தில் கொலை.

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 09 2026, 11:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 காதலித்து திருமணம்
Image Credit : Asianet News

காதலித்து திருமணம்

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே தலக்குளத்தை சேர்ந்தவர் அருண் பிரசாத் (34). இவர் கார்பெண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி சுபிதா (28). இவர்கள் இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தும்பவிளை பகுதியை சேர்ந்த அனீஸ் (30) என்பவருக்கும், சுபிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

24
கள்ளக்காதல்
Image Credit : Asianet News

கள்ளக்காதல்

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவர் அருண் பிரசாத்துக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். அப்படி இருந்த போதிலும் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார்.

Related Articles

Related image1
அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மனைவி! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்
Related image2
ஒரு கோடி ரூபாய் முதல் 40 லட்சம் வரை.. பண மழையில் அரசு ஊழியர்கள்! லிஸ்ட் போட்ட முதல்வர் ஸ்டாலின்!
34
மகளை கண்டித்த சித்தப்பா
Image Credit : our own

மகளை கண்டித்த சித்தப்பா

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டதை அடுத்து கோபித்துக் கொண்டு சுபிதா அதே பகுதியில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வந்தார். மேலும் நாகர்கோவிலில் உள்ள பிரபல ஜவுளி கடையில் வேலைக்கு சென்று வந்தார். தனது குழந்தைகள் தந்தையுடன் தங்கும் நேரத்தில் கள்ளக்காதலன் அனீஸை வீட்டுக்கே வரவழைத்து சுபிதா உல்லாசமாக இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இரவு முழுவதும் அனீசுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனை சுபிதாவின் சித்தப்பா ராஜேஷ் (45) கண்டித்துள்ளார்.

44
சுபிதா கொலை
Image Credit : ANI

சுபிதா கொலை

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது மட்டுமல்லாமல் மாற்று திறனாளியான சித்தப்பா ராஜேஷை கீழே தள்ளி தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் அரிவாளை எடுத்து சுபிதாவை சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுபிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இரணியல் போலீசார் ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
தமிழ்நாடு குற்றச் செய்திகள்
கொலை
பெண்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மனைவி! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்
Recommended image2
ஒரு கோடி ரூபாய் முதல் 40 லட்சம் வரை.. பண மழையில் அரசு ஊழியர்கள்! லிஸ்ட் போட்ட முதல்வர் ஸ்டாலின்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved