- Home
- Tamil Nadu News
- பள்ளிகள் இன்று திறப்பு.! முதல் நாளே மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
பள்ளிகள் இன்று திறப்பு.! முதல் நாளே மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. முதல் நாளில் பாடங்கள் எதுவும் நடத்தப்படாது, புத்தகங்களும் சீருடைகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை
பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இதனையடுத்து கோடை விடுமுறையாக சுமார் 40 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இதன் காரணமாக மாணவர்கள் பெற்றோருடன் சுற்றுலாவிற்கு தாத்தா, பாட்டி வீட்டிற்கும் பயணம் செய்தனர்.
இந்த நிலையில் வெயிலின் தாக்கம் ஜூன் மாதம் மேலும் அதிகரிக்க கூடும்,பள்ளிகள் திறப்பு மேலும் ஒரு வாரம் வரை தள்ளிப்போகும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய காரணத்தால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்தது,
பள்ளிகள் இன்று திறப்பு
இதனால் திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் வெளியூரில் இருந்த மாணவ, மாணவிகள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். ரயில் மற்றும் பேருந்துகளில் கூட்டமானது நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்டவுள்ளதையடுத்து மாணவர்கள் தங்களது நண்பர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்ப்பதற்காக ஆசையாக புறப்பட்டு சென்றனர். அதே நேரம் ஒரு சில மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல அடம்பிடித்து வீட்டிலேயே அழுது அடம்பிடித்து வருகிறார்கள்.
சீருடை, பாட புத்தகங்கள்
இந்த சூழ்நிலையில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு பள்ளிகல்வித்துறை குஷியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி, இன்று முதல் நாள் எந்த வித பாடமும் நடத்தப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவர்களுக்கு இன்று காலை பாட வேளைகள் தொடங்கியதும் பாட புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படவுள்ளது. இதனால் மாணவர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்தநிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் ஒசூர் அருகே 93 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு ரூபாய்ப்பு முடி திருத்தம் செய்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு முடி திருத்தம்
தேன்கனிக்கோட்டை பகுதியில் அதிக அளவிலான மலைவாழ் மக்களும், ஏழை எளிய மாணவர்கள் உள்ளதை அறிந்த மூர்த்தி கடந்த ஆண்டு முதல் தன்னால் முடிந்த உதவியை குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு செய்திட நினைத்த அவர் தனது சலூன் கடையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கடந்தாண்டு 30 பேருக்கு இலவசமாக முடி திருத்தியதாகவும்
இந்தாண்டு அரசுப்பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு கட்டிங் செய்ய கட்டணம் ஒரு ரூபாய் மட்டுமே என அறிவிப்பு வெளியிட்டு முடி திருத்தினார். நேற்று காலை 8 மணி முதல் இரவு 7 மணிவரை 93 மாணவர்களுக்கு முடி திருத்தியவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

