MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆலகால விஷத்தைக் கக்கும் நஞ்சுப் பாம்பு மல்லை சத்யா: வைகோ ஆவேசம்

ஆலகால விஷத்தைக் கக்கும் நஞ்சுப் பாம்பு மல்லை சத்யா: வைகோ ஆவேசம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தன் மகன் துரை வைகோ மீது ரூ.250 கோடி சொத்து குற்றச்சாட்டு வைத்த மல்லை சத்யாவை 'ஆலகால விஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பு' என விமர்சித்துள்ளார். அவர் சொல்வது 'ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்' என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.

1 Min read
Author : SG Balan
Published : Nov 17 2025, 06:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஆலகால விஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பு
Image Credit : Google

ஆலகால விஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு ரூ.250 கோடிக்கு சொத்து உள்ளதாகக் கூறி, சமீபத்தில் குற்றச்சாட்டு வைத்த மல்லை சத்யாவுக்கு, வைகோ கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

தனியார் செய்தி சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மல்லை சத்யாவை "ஆலகால விஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பு" என்று ஆவேசமாக விமர்சித்துள்ளார்.

23
ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்
Image Credit : facebook/ mallai sathya

ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்

வைகோ தனது நேர்மையைப் பற்றிப் பேசுகையில், "எனது நேர்மையை உலகு அறியும். என் அரசியல் விரோதிகள்கூட சொல்லத் துணியாத குற்றச்சாட்டு இது. மல்லை சத்யாவின் குற்றச்சாட்டு ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். அபாண்டமான குற்றச்சாட்டு" என்று வைகோ கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும், மல்லை சத்யா கூறும் பொய்களுக்கு முன்னால் கோயபல்ஸ்கூட கடுகு போல சிறுத்துப் போய்விடுவான் என்றும் அவர் காட்டமாகக் கூறினார்.

Related Articles

Related image1
வைகோவின் மதுபான ஆலை..! செங்கல்பட்டில் ரூ.250 கோடி சொத்து..! பகீர் கிளப்பும் மல்லை சத்யா..!
Related image2
இசிஆரில் அரண்மனை போன்ற வீடு கட்டிய வைகோ..! ரகசிய புதுமனை புகுவிழா.. மல்லை சத்யா பகீர்
33
மல்லை சத்யாவின் குற்றச்சாட்டு
Image Credit : Google

மல்லை சத்யாவின் குற்றச்சாட்டு

மல்லை சத்யா வைகோ குடும்பத்தின் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் ரூ.250 கோடிக்கு வைகோ குடும்பத்துக்குச் சொத்து இருக்கிறது என்றும் ரூ.5 கோடி மதிப்பில் மிகப்பெரிய நட்சத்திர விடுதியை பல ஆண்டுகளுக்கு முன்னர் வைகோ வாங்கினார் என்றும் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 கிரவுண்டில் மிகப்பெரிய அரண்மனை போன்ற வீட்டை வைகோ கட்டியுள்ளார். அந்த அரண்மனை போன்ற வீடு குறித்த செய்தி வெளியே வரக்கூடாது என்பதற்காக ரகசியமாகப் புதுமனை புகு விழா நடத்தினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைகோவின் உறவினர் நடத்தும் மதுபான ஆலையால் வைகோ குடும்பத்திற்கு கோடிக்கணக்கில் வருமானம் வருவதாகவும் வைகோவின் உறவினர் மதுபான ஆலை நடத்தி வரும் நிலையில், மதுவிற்கு எதிராக வைகோ நடைபயணம் மேற்கொள்கிறார் என்றும் மல்லை சத்யா விமர்சித்துள்ளார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
வைகோ மதிமுக
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
இது பட்ஜெட் இல்லை.. மாபெரும் காது குத்தும் விழா..! திமுக அரசை பத்திரிகை அடித்து கலாய்த்த அதிமுக
Recommended image2
சட்டமன்றத்தில் காது குத்தும் விழா.. பட்ஜெட்டை கலாய்த்து அதிமுக விடுத்த அழைப்பிதழ்
Recommended image3
ரமலான் நோன்பு.! இஸ்லாமியர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு
Related Stories
Recommended image1
வைகோவின் மதுபான ஆலை..! செங்கல்பட்டில் ரூ.250 கோடி சொத்து..! பகீர் கிளப்பும் மல்லை சத்யா..!
Recommended image2
இசிஆரில் அரண்மனை போன்ற வீடு கட்டிய வைகோ..! ரகசிய புதுமனை புகுவிழா.. மல்லை சத்யா பகீர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved