MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TNPSC Group 4 Exam: தமிழில் கடினமான கேள்விகள்! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மறு தேர்வா?

TNPSC Group 4 Exam: தமிழில் கடினமான கேள்விகள்! டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மறு தேர்வா?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தமிழ்மொழி வினாக்கள் மிகக்கடினமாக இருந்ததால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சீமான் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 16 2025, 01:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு
Image Credit : ANI

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

அரசுப் பணியாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடுகளை செய்வதற்காகவே தொகுதி-4 தேர்வில் பாடத்திட்டத்திற்கு அப்பாலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு, தமிழ்மொழி வினாக்கள் மிகக்கடினமானதாக வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி - 4 (GROUP4) தேர்வு வினாத்தாளில் தமிழ்மொழி குறித்த பெரும்பாலான கேள்விகள் தேர்வு பாடத்திட்டத்திற்கு அப்பால், மிகக்கடினமான கேள்விகளாக இடம்பெற்றதால் தேர்வர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து அலட்சியமாகச் செயல்பட்டு தேர்வர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவது வன்மையான கண்டனத்திற்குரியது.

24
மனவுளைச்சலில் தேர்வர்கள்
Image Credit : ANI

மனவுளைச்சலில் தேர்வர்கள்

தமிழ்நாடு அரசில் 3,395 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தொகுதி-4 தேர்வினை ஏறத்தாழ 11 லட்சம் 50 ஆயிரம் தேர்வர்கள் எழுதியுள்ள நிலையில், வினாத்தாளில் ஆங்கிலமொழிப் பகுதி வினாக்கள் எளிதாகவும், தமிழ்மொழிப்பகுதி வினாக்கள் மிகக்கடினமானவும் இருந்ததால் தேர்வர்கள் பெரும் மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக தமிழ்மொழிப் பகுதியில் பண்டைய ஓலைச்சுவடிகளில் இருந்தெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூடத் தேர்ச்சி அடைய முடியாத அளவிற்கு கடினமான வினாக்கள் தமிழ்மொழி பகுதியில் இடம்பெற்றுள்ள நிலையில், ஆங்கிலப் பகுதி வினாக்கள் எளிதானதாக இடம்பெற்றுள்ளது தேர்வின் சமநிலையை முற்றாகச் சீர்குலைத்துள்ளது. இதனால் அரசு வேலை கனவோடு இராப்பகலாகக் கண்துஞ்சாது படித்து, கடின உழைப்பினை செலுத்திய தமிழிளம் தலைமுறை பிள்ளைகளின் எதிர்காலம் இருளாகி, மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Related Articles

Related image1
TVK Aadav Arjuna: திமுககாரங்க எனக்கு ஸ்கெட்ச் போட்டுட்டாங்க! அலறிய ஆதவ் அர்ஜுனா! பரபரப்பு புகார்! நடந்தது என்ன?
Related image2
TNPSC EXAM : டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாரா.! தேர்வர்களுக்கு எதிர்பாரா வெளியான சூப்பர் அறிவிப்பு
34
இதுதான் தமிழ் மொழிக்கு அளிக்கும் முக்கியத்துவமா?
Image Credit : X/Seeman

இதுதான் தமிழ் மொழிக்கு அளிக்கும் முக்கியத்துவமா?

இதுதான் திராவிட மாடல் திமுக அரசு, தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கும் முறையா? இதுதான் தமிழ் மொழிக்கு அளிக்கும் முக்கியத்துவமா? இதன் மூலம் தமிழ்வழியில் பயின்ற தேர்வர்களைப் போட்டியிலிருந்தே வெளியேற்றும் சூழ்ச்சி வெட்டவெளிச்சமாகியுள்ளது. அரசுப் பணியாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடுகளை செய்வதற்காகவே தொகுதி-4 தேர்வில் பாடத்திட்டத்திற்கு அப்பாலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு, தமிழ்மொழி வினாக்கள் மிகக்கடினமானதாக வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

44
குரூப்-4 தேர்வினை ரத்து செய்ய வேண்டும்
Image Credit : ANI

குரூப்-4 தேர்வினை ரத்து செய்ய வேண்டும்

ஆகவே, தொகுதி-4 (GROUP-4) தேர்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு தமிழ்நாடு அரசே பொறுப்பேற்று, தேர்வின் சமநிலை மற்றும் நடுநிலைத்தன்மையைக் காக்கும் பொருட்டு, நடந்து முடிந்த தொகுதி-4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, விரைவில் மறுதேர்வு நடத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். மேலும், எதிர்காலத்தில் எந்தவொரு அரசுப்பணியாளர் தேர்விலும் இதுபோன்ற குளறுபடிகள் மீண்டும் ஏற்படா வண்ணம் மிகக்கவனமாகச் செயலாற்ற வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தைக் கேட்டுக்கொள்கிறேன் என சீமான் கூறியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டி.என்.பி.எஸ்.சி.
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
சீமான்
தேர்வு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
TVK Aadav Arjuna: திமுககாரங்க எனக்கு ஸ்கெட்ச் போட்டுட்டாங்க! அலறிய ஆதவ் அர்ஜுனா! பரபரப்பு புகார்! நடந்தது என்ன?
Recommended image2
TNPSC EXAM : டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாரா.! தேர்வர்களுக்கு எதிர்பாரா வெளியான சூப்பர் அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved