MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எப்போது? வெளியான அறிவிப்பு! காலியிடங்கள் எத்தனை?

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எப்போது? வெளியான அறிவிப்பு! காலியிடங்கள் எத்தனை?

வி.ஏ.ஒ., இளநிலை உதவியாளர் உட்பட 3,935 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 25 2025, 11:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Tamil Nadu Public Service Commission

Tamil Nadu Public Service Commission

TNPSC Group 4 Notification 2025 Released: தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரே தேர்வாக நடத்தப்பட்டு நேர்காணல் எதுவும் இல்லாமல் தேர்வாகும் அரசு பணி என்பதால், இந்த தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான குரூப்-4 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

24
TNPSC Group 4

TNPSC Group 4

குரூப்-4  தேர்வு அறிவிப்பு

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- 3,935 பணி இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-4  தேர்வு ஜூலை 12ம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை நடைபெறுகிறது. குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று முதல் மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

34
TNPSC Group 4 Exam Date

TNPSC Group 4 Exam Date

திருத்தம் செய்ய கால அவகாசம்

விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள மே 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுக்கு 10ம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

44
TNPSC Group 4 Notification 2025

TNPSC Group 4 Notification 2025

தேர்வர்கள் அதிர்ச்சி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் அதிகளவில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் வெறும் 3,935 காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே அறிவிப்பு வெளியாகியுள்ளதால் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டி.என்.பி.எஸ்.சி.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு
தேர்வு

Latest Videos
Recommended Stories
Recommended image1
பிப்ரவரி 19ம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை.! இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Recommended image2
எகிறும் எதிர்பார்ப்புகள்.. அதிரும் அறிவிப்புகள்..? இன்று தாக்கலாகிறது இடைக்கால பட்ஜெட்
Recommended image3
மதுபிரியர்களுக்கு பேரிடி.. தமிழகம் முழுவதும் பிப்ரவரி 18 முதல் டாஸ்மாக் மூடல்.. காரணம் இதுதான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved