MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • எழும்பூர் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!

எழும்பூர் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள் காரணமாக, பல எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உழவன், அனந்தபுரி, சேது உள்ளிட்ட முக்கிய ரயில்கள் டிசம்பர் 14-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Dec 05 2025, 11:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : our own

நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுமக்கள் தொலைதூர பயணங்களுக்கு குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம், அத்தியாவசிய வசதிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பேருந்தை விட ரயில் பயணத்தை அதிகளவு விரும்புகின்றனர். இதனால் நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் ரயில் சேவையால் பயனடைந்து வருகின்றனர்.

25
Image Credit : our own

இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அவ்வப்போது தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள், மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட காரணங்களுக்காக முக்கிய வழித்தடங்களில் அவ்வப்போது ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் ஏற்கனவே, தாம்பரம், கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் மேலும் 10 நாட்கள் அதாவது இன்று முதல் வருகிற 14-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
அரையாண்டு தேர்வு விடுமுறையில் எதிர்பாராத ட்விஸ்ட்! குஷியில் துள்ளிக்குதித்து கொண்டாடும் பள்ளி மாணவர்கள்
Related image2
இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்
35
Image Credit : our own

இதுகுறித்​து தெற்கு ரயில்வே வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பு: தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில், கொல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், ராமேசுவரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் சேது எக்ஸ்பிரஸ் ரயில், ராமேசுவரத்தில் இருந்து எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் டிசம்பர் 14-ம் தேதி வரையில் தாம்பரம் வரை இயக்கப்படும்.

45
Image Credit : our own

* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.

* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.42 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.

* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும்.

* எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும்.

55
Image Credit : our own

* சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும்.

* குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத் – திருச்​சி வாரம் தோறும் வியாழக்கிழமை இயக்கப்படும் ரயில் டிசம்பர் 11-ம் தேதி அன்று காட்​பாடி, வேலூர், விழுப்​புரம் என மாற்​றுப் பாதை​யில் செல்வ​தால் எழும்​பூர், தாம்​பரம், செங்​கல்​பட்​டுக்கு செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரயில்
தென்னக இரயில்வே
தமிழ்நாடு
சென்னை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
அரையாண்டு தேர்வு விடுமுறையில் எதிர்பாராத ட்விஸ்ட்! குஷியில் துள்ளிக்குதித்து கொண்டாடும் பள்ளி மாணவர்கள்
Recommended image2
இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved