MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அரையாண்டு தேர்வு விடுமுறையில் எதிர்பாராத ட்விஸ்ட்! குஷியில் துள்ளிக்குதித்து கொண்டாடும் பள்ளி மாணவர்கள்

அரையாண்டு தேர்வு விடுமுறையில் எதிர்பாராத ட்விஸ்ட்! குஷியில் துள்ளிக்குதித்து கொண்டாடும் பள்ளி மாணவர்கள்

பள்ளிக்கல்வித்துறை 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. டிசம்பரில் தேர்வுகள் முடிவடைந்த பிறகு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உட்பட 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

1 Min read
Author : vinoth kumar
Published : Dec 05 2025, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காலாண்டு விடுமுறை
Image Credit : our own

காலாண்டு விடுமுறை

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18 முதல் 26ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெற்றது. பின்னர் காலாண்டு தேர்வு விடுமுறை செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை அதாவது மொத்தம் 9 நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளிகள் நடைபெற்று வருகிறது.

24
அரையாண்டு தேர்வு
Image Credit : our own

அரையாண்டு தேர்வு

இந்நிலையில் அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது. அதில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரையிலும், 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கு டிசம்பர் 10-ம் தேதி தேர்வுகள் தொடங்கி 23-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.

Related Articles

Related image1
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழை பிச்சு உதற போகுதாம்! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Related image2
இனி மாதம் தோறும் கட்டாயம்! ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு!
34
அரையாண்டு தேர்வு நேரம்
Image Credit : our own

அரையாண்டு தேர்வு நேரம்

6ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், 7ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும், 8ம் வகுப்புக்கு 10 மணி முதல் 12.30 மணி வரையிலும், 9ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரையிலும், 10ம் வகுப்புக்கு காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், 11ம் வகுப்புக்கு பிற்பகல் 1.45 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், 12ம் வகுப்புக்கு காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெற உள்ளது.

44
அரையாண்டு தேர்வு விடுமுறை
Image Credit : our own

அரையாண்டு தேர்வு விடுமுறை

டிசம்பர் 24ம் தேதி புதன் கிழமை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை வருகிறது. முதலில் அரையாண்டு தேர்வு விடுமுறை 8 நாட்கள் மட்டுமே என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது 12 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்டவைகள் அடங்கும். அரையாண்டு தேர்வு விடுமுறை 12 நாட்கள் என்பதால் பள்ளி மாணவர்கள் குஷியில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
பள்ளிக் கல்வித் துறை
விடுமுறை
பள்ளிகள் விடுமுறை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழை பிச்சு உதற போகுதாம்! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Recommended image2
இனி மாதம் தோறும் கட்டாயம்! ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved