MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தவெகவுக்கு மட்டும் போலீஸ் நெருக்கடி! மக்களை சந்திக்க போறேன்! இனி நடப்பதை பாருங்க! இறங்கி அடிக்கும் விஜய்!

தவெகவுக்கு மட்டும் போலீஸ் நெருக்கடி! மக்களை சந்திக்க போறேன்! இனி நடப்பதை பாருங்க! இறங்கி அடிக்கும் விஜய்!

தவெகவுக்கு மட்டும் போலீஸ் நிபந்தனைகளை விதித்துள்ளதாக நடிகர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். தி.மு.க. அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டதாவும், தன்னுடைய மக்கள் சந்திப்பு வெற்றி பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Rayar r
Published : Sep 12 2025, 04:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மக்களை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்
Image Credit : TVK

மக்களை சந்திக்கும் தவெக தலைவர் விஜய்

முழு நேர அரசியலுக்கு தயாராகி வரும் தவெக தலைவர் விஜய், நாளை (செப்டம்பர் 13) முதல் மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளார். திருச்சியில் இருந்து தனது பிரசார பயணத்தை அவர் தொடங்க உள்ளார். இந்நிலையில், தவெக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், 'உங்க விஜய் நான் வாரேன். மக்களை சந்திக்க போகிறேன். வெற்றி உறுதி' என்று தெரிவித்துள்ளார்.

26
விளம்பர மாடல் திமுக அரசு
Image Credit : X/@mkstalin

விளம்பர மாடல் திமுக அரசு

இது தொடர்பாக தவெக தலைவர் விஜய், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். பொய்யான வாக்குறுதிகளைத் தந்து மக்களை ஏமாற்றி வரும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டனர். தங்களுக்கென்றே உண்மையான தோழமை மற்றும் பாரபட்சமற்றத் தன்மையுடன் கூடிய ஓர்அரசு அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

உங்க விஜய் நான் வாரேன்

மக்களின் மனமறிந்து அரசியல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகம், மக்களுக்காக மனசாட்சி உள்ள மக்களாட்சியை அமைக்கும் உன்னத லட்சிய நோக்குடன் களமாடி வருகிறது. 

மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: உங்க விஜய் நா வரேன்" என்கிற நமது பயணம்தான் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம் நாளை (13.09.2025) காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே தொடங்குகிறது.

Related Articles

Related image1
வாரத்தில் 1 நாள் மட்டும் சுற்றுப்பயணம், 6 நாள் ரெஸ்ட்..! 4 மாதத்தில் வெறும் 16 நாள் மட்டும் மக்களை சந்திக்கும் விஜய்
Related image2
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! ஆட்டத்தை ஆரம்பிக்கும் திமுக..? பிளான் 2.0 கையிலெடுத்த தவெக!
36
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வருகிறேன்
Image Credit : TVK

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வருகிறேன்

அடுத்தடுத்து, நமது மதுரை மாநாட்டில் சொன்னதுபோலவே. என் குடும்ப உறவுகளாகிய உங்களைச் சந்திக்க, உங்களுக்காகவே குரல் கொடுக்க உங்கள் விஜய், நம் கொள்கைத் தலைவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார். மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில், "மக்களிடம் செல்" என்ற பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் ஆணையை மானசீகமாக ஏற்று, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வருகிறேன்.

46
தவெகவுக்கு மட்டும் போலீஸ் நெருக்கடி
Image Credit : TVK

தவெகவுக்கு மட்டும் போலீஸ் நெருக்கடி

ஓர் அரசியல் கட்சியின் தலைவராக, நாம் ஜனநாயக முறையில் மக்களைச் சந்திக்க விழைகிறோம். இந்நிலையில், தமிழ்நாட்டு அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில், எந்த அரசியல் தலைவருக்கும் செய்யாத வகையில், மக்கள் சந்திப்பு சார்ந்த பாதுகாப்பு நிபந்தனைகளை நம் கழகத்தின் மீது மட்டும் காவல்துறை விதித்துள்ளது. 

இப்படி பாதுகாப்பு சார்ந்த தமது பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல், அரசியல் நிலைப்பாடுகளைக் கடந்து தார்மீகக் கடமையோடு நமது கழகத் தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதை இந்த அரசும் காவல்துறையை வழிநடத்தும் தமிழ்நாட்டு முதலமைச்சரும் உறுதி செய்ய வேண்டும்.

56
கண்ணியம், கட்டுப்பாடு முக்கியம்
Image Credit : Asianet News

கண்ணியம், கட்டுப்பாடு முக்கியம்

கழகத் தோழர்களாகிய நீங்களும் நமது பொது மக்கள் சந்திப்பிற்கு ஏதுவாக, அந்தந்த மாவட்டங்களில் பங்கு பெற்றும் சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டும், ஏற்கெனவே பொதுமக்களுக்கு இடையூறின்றி மக்கள் சந்திப்புகளை நடத்த நாம் தேர்ந்தெடுத்துள்ள நாட்களில் அவர்களைச் சந்திக்க ஏதுவாகப் பாதுகாவலர்கள். 

தன்னார்வலர்கள் மற்றும் காவல்துறைக்கு உறுதுணையாகக் காவல்துறை அளித்துள்ள வழிமுறைகளைக் கடமை. கண்ணியம் மற்றும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் பின்பற்றி. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

66
நல்லதே நடக்கும்; வெற்றி நிச்சயம்
Image Credit : Asianet News

நல்லதே நடக்கும்; வெற்றி நிச்சயம்

இறைவன் அருளால். இயற்கையின் துணையால் உங்கள் அனைவரின் பேரன்பால் நம்முடைய இந்த மக்கள் சந்திப்புப் பயணம் மகத்தான வெற்றி பெறும் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் 'உங்க விஜய். நான் வரேன்". நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்'' என்று தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் இல்லாத வகையில் தவெகவுக்கு மட்டும் போலீஸ் நிபந்தனைகளை விதித்துள்ளதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். நாளை முதல் மக்களை சந்திக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு
திமுக
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சக மாணவர்களால் அடித்து கொ**ல்லப்பட்ட +2 மாணவன்.. சமுதாயம் எங்கே போகிறது..? அன்புமணி அதிர்ச்சி
Recommended image2
எல்லாரும் அதிமுககாரன் கிடையாது... கட்சியில் இருப்பேன்டானு சொல்றவன்தான் ரோஷமானவன்..! செங்கோட்டையன் மீது செல்லூர் ராஜூ ஆவேசம்..!
Recommended image3
நாஞ்சில் சம்பத்தை குஷி படுத்திய விஜய்.. முக்கிய பொறுப்பு வழங்கி கௌரவிப்பு..!
Related Stories
Recommended image1
வாரத்தில் 1 நாள் மட்டும் சுற்றுப்பயணம், 6 நாள் ரெஸ்ட்..! 4 மாதத்தில் வெறும் 16 நாள் மட்டும் மக்களை சந்திக்கும் விஜய்
Recommended image2
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! ஆட்டத்தை ஆரம்பிக்கும் திமுக..? பிளான் 2.0 கையிலெடுத்த தவெக!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved