MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • வெயிட் அண்ட் சீ.. சுட்டெரித்த வெயில்.. மழை குறித்து வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்.!

வெயிட் அண்ட் சீ.. சுட்டெரித்த வெயில்.. மழை குறித்து வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்.!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. டிசம்பர் 19 முதல் 22 வரை வறண்ட வானிலை நிலவும் அதன் பிறகு மீண்டும் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Dec 17 2025, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மழைக்கு முக்கிய அப்டேட்
Image Credit : Google

மழைக்கு முக்கிய அப்டேட்

தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் காலை மற்றும் இரவு நேரங்களில் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்குகின்றனர். இந்நிலையில் மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. அதாவது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

25
வறண்ட வானிலை நிலவரம்
Image Credit : our own

வறண்ட வானிலை நிலவரம்

அதேபோல் நாளை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

Related Articles

Related image1
ஈரோட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை...! விஜய் பிரச்சாரத்தால் துள்ளி குதிக்கும் மாணவர்கள்
Related image2
Chennai Metro Train: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.! பூந்தமல்லி–போரூர் பாதையில் 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில்! சீறிப்பாயும் சென்னை மெட்ரோ.!
35
லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
Image Credit : our own

லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

மேலும் டிசம்பர் 19 முதல் 22ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகத்தில் 23ம் தேதி ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

45
வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
Image Credit : ANI

வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

நாளை முதல் 21ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாடு

இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

அதேபோல் டிசம்பர் 19 முதல் 21 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை ஒட்டி இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

55
சென்னை வானிலை நிலவரம்
Image Credit : our own

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
ஈரோட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை...! விஜய் பிரச்சாரத்தால் துள்ளி குதிக்கும் மாணவர்கள்
Recommended image2
Chennai Metro Train: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.! பூந்தமல்லி–போரூர் பாதையில் 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில்! சீறிப்பாயும் சென்னை மெட்ரோ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved