MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!

அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் TNPSC, SSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. சென்னையில் நடைபெறும் இந்த பயிற்சிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஜனவரி 05 விண்ணப்பிக்கலாம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Dec 18 2025, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழக அரசு
Image Credit : our own

தமிழக அரசு

தமிழகத்தில் இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்கு வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு வேலை கிடைக்காதவர்களுக்கு தனியார் துறையிலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படுகிறது. அதாவது பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அரசு வேலைதான் வேண்டும் என உறுதியாக உள்ள இளைஞர்களுக்கும் மாநில அரசு மட்டுமல்ல மத்திய அரசு பணியிடங்களில் சேர்வதற்கான பயிற்சியை தமிழக அரசு வழங்கி வருகிறது.

25
 இலவச பயிற்சி
Image Credit : our own

இலவச பயிற்சி

இது தொடர்பாக தமிழக அரசின் பயிற்சித் துறைத் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழகத்தில் மட்டும் ஆண்டு தோறும் பள்ளிக்கல்வி, உயர்கல்வி முடித்து பல லட்சம் பேர் வேலை தேடி வெளியூர்களுக்கு செல்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திடும் வகையில் பல்வேறு தனியார் துறை மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகிறது. மேலும் சொந்த தொழில் செய்ய விரும்புபவர்களுக்காக இலவச பயிற்சியும் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அரசு பணியே தங்களது கனவாக கொண்டு தேர்வுக்கு தயாராகுபவர்களுக்காகவும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

Related Articles

Related image1
வெயிட் அண்ட் சீ.. சுட்டெரித்த வெயில்.. மழை குறித்து வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்.!
Related image2
ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் இவ்வளவு இடங்களில் மின்தடையா? எத்தனை மணிநேரம்? வெளியான லிஸ்ட்!
35
 கட்டணமில்லா பயிற்சிகள்
Image Credit : our own

கட்டணமில்லா பயிற்சிகள்

தமிழக மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களான சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி வளாகத்தில் 500 ஆர்வலர்களுக்கும் மற்றும் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 ஆர்வலர்களுக்கும் கட்டணமில்லா பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

45
 உணவும் தங்கும் வசதிகளும் இல்லை
Image Credit : our own

உணவும் தங்கும் வசதிகளும் இல்லை

தற்போது மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்கள் பெற்று, சேர்க்கை நடைபெற உள்ளது பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணிவரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01-01-2026 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை.

55
பயிற்சி வகுப்புகளில் சேர்க்கை
Image Credit : our own

பயிற்சி வகுப்புகளில் சேர்க்கை

பயிற்சியில் சேரவிரும்பும் ஆர்வலர்கள் www.cecc.in என்ற வாயிலாக டிசம்பர் 22 முதல் ஜனவரி 05 வரை விண்ணப்பிக்கலாம். பயிற்சி வகுப்புகளில் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப ஆர்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதைத் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டி.என்.பி.எஸ்.சி.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
வெயிட் அண்ட் சீ.. சுட்டெரித்த வெயில்.. மழை குறித்து வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்.!
Recommended image2
ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் இவ்வளவு இடங்களில் மின்தடையா? எத்தனை மணிநேரம்? வெளியான லிஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved