MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஒவ்வொரு துறையிலும் முதல் இடம்..! சொல்லி அடிக்கும் முதல்வர் ஸ்டாலின்; EPSக்கு நெத்தியடி பதில்

ஒவ்வொரு துறையிலும் முதல் இடம்..! சொல்லி அடிக்கும் முதல்வர் ஸ்டாலின்; EPSக்கு நெத்தியடி பதில்

தொழில்துறை வேலை வாய்ப்பில் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளதை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Velmurugan s
Published : Aug 28 2025, 01:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தொழில்துறை வேலை வாய்ப்பில் முதல் இடம்
Image Credit : Asianet News

தொழில்துறை வேலை வாய்ப்பில் முதல் இடம்

தொழில்துறையில் வேலை வாய்ப்பு தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “இந்திய அரசின் 2023–24 ஆம் ஆண்டுக்கான தொழில்துறை ஆய்வின்படி, இன்று வெளியிடப்பட்ட தகவலின்படி, தொழில்துறை வேலைவாய்ப்புகளில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது, இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சாலை தொழிலாளர்களில் 15.24% பேர் இதில் உள்ளனர்! இது நாட்டின் ஆறு தொழிற்சாலை தொழிலாளர்களில் ஒருவர், இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 5-6% பேர் மட்டுமே உள்ளனர்!

24
நாங்க சொல்லல, மத்திய அரசே சொல்லிடுச்சி
Image Credit : X/MK Stalin

நாங்க சொல்லல, மத்திய அரசே சொல்லிடுச்சி

40,100 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளைக் கொண்ட தமிழ்நாடு மீண்டும் இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாக உருவெடுத்துள்ளது, இது தேசிய பங்கில் 15.43% ஆகும்.

எதிர்க்கட்சிகளால் பரப்பப்படும் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட பொய்க்கும், அவர்களில் சிலர் எழுப்பும் கேள்விகளுக்கும் இதுவே சிறந்த மறுப்பு... எங்கள் தரவுகளுடன் அல்ல... ஆனால் இந்திய அரசாங்கத்தின் தரவுகளுடன் : )

Related Articles

Related image1
நாட்டிலேயே சென்னை தான் முதலிடம்.. மார் தட்டும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்..!
Related image2
திமுக அரசு தான் டாப்பு.. ஜெட் வேகத்தில் தமிழக பொருளாதாரம்.. மார் தட்டும் டிஆர்பி ராஜா
34
பொருளாதார வளர்ச்சி
Image Credit : Asianet News

பொருளாதார வளர்ச்சி

மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது, மேலும் உற்பத்தி தொடர்ந்து அந்தக் கதையின் மையமாக உள்ளது மற்றும் தொழில்துறை துறையின் முதலீட்டு ஊக்குவிப்பு #JobsForTN இல் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது, இது இணைக்கப்பட்ட அட்டவணையில் இருந்து தெளிவாகக் காணப்படுகிறது! மற்ற மாநிலங்கள் முதலீட்டு எண்களில் கவனம் செலுத்தும் அதே வேளையில், இந்த திராவிட மாதிரி #GoTN வேலைகளில் கவனம் செலுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

44
திமுக அரசை விமர்சிப்பவர்களுக்கு நெத்தியடி பதில்
Image Credit : Google

திமுக அரசை விமர்சிப்பவர்களுக்கு நெத்தியடி பதில்

இந்நிலையில் இந்த பதிவை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்தியாவின் தொழில்துறை பணியாளர்களின் சக்தி மையமாக தமிழ்நாடு உள்ளது!

திராவிடத்தால் வாழ்கிறோம்!

திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும்!

திரு. அமித் ஷா முதல் திரு. பழனிசாமி வரை தி.மு.க. ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசே தந்துள்ள 'நெத்தியடி பதில்' இதோ!

Tamil Nadu is the powerhouse of India’s industrial workforce!

திராவிடத்தால் வாழ்கிறோம்!
திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும்!

திரு. அமித் ஷா முதல் திரு. பழனிசாமி வரை தி.மு.க. ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசே தந்துள்ள 'நெத்தியடி பதில்'… https://t.co/LcDe2nnIH7

— M.K.Stalin (@mkstalin) August 28, 2025

சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம் - போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத் தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது!

#DravidianModel ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும்! அரசியல் காழ்ப்புணர்வில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை என மக்கள் புறந்தள்ளுவார்கள்” என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு
நரேந்திர மோடி
அமித் ஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
அதிமுகவிடம் பாஜககூட ஆட்சியில் பங்கு கேட்கலாம்... திமுகவுக்காக காங்கிரஸ் என்ன செய்தது..? நியாயம் சொல்லும் தராசு ஷ்யாம்..!
Recommended image2
மோடி, அமித்ஷா பருப்பு தமிழ்நாட்டில் வேகாது..! உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
Recommended image3
போட்ரா வெடிய.. இனி 6ம் வகுப்பு முதல் இலவச லேப்டாப்..! முதல்வர் அதிரடி அறிவிப்பு
Related Stories
Recommended image1
நாட்டிலேயே சென்னை தான் முதலிடம்.. மார் தட்டும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்..!
Recommended image2
திமுக அரசு தான் டாப்பு.. ஜெட் வேகத்தில் தமிழக பொருளாதாரம்.. மார் தட்டும் டிஆர்பி ராஜா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved