MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் குவிய சூப்பர் வாய்ப்பு.! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் குவிய சூப்பர் வாய்ப்பு.! அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

தமிழக அரசு விவசாயிகளுக்கு ஏற்றுமதி தொடர்பான இலவச பயிற்சி அளிக்கிறது. ஜூலை 9 முதல் 11 வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில், ஏற்றுமதி நடைமுறைகள், ஆவணங்கள், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Jun 27 2025, 02:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழகத்தில் விவசாய உற்பத்தி
Image Credit : Asianet News

தமிழகத்தில் விவசாய உற்பத்தி

விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளது. அந்த வகையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களை வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் விவசாயிகளிடம் இருந்து இடைத்தரகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் பார்த்து வருகிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்காத நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளே தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாக பயிற்சியை தமிழக அரசு வழங்கவுள்ளது. 

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் சார்பில் விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கான ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்த மூன்று நாள் இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. அந்த வகையில், இந்தியாவில் தற்போது உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது.

24
விவசாயிகளுக்கு இலவச பயிற்சி
Image Credit : Gemini AI

விவசாயிகளுக்கு இலவச பயிற்சி

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசின் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில், விவசாயிகள் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், உணவு சார் தொழில்முனைவோர்ளுக்கான "வேளாண் ஏற்றுமதிக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி "இப்பயிற்சியில் ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்த மூன்று நாள் இலவச பயிற்சி வரும் 09.07.2025 முதல் 11.07.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. 

இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, வேளாண் ஏற்றுமதி சுற்றுச்சூழல் அமைப்பு, ஒழுங்குமுறை கட்டமைப்புகள் மற்றும் கட்டாய பதிவு, ஏற்றுமதிக்கான படிப்படியான வழிகாட்டுத்தல் மற்றும் ஆவணப்படுத்தல், தயாரிப்பு தரம் மற்றும் சோதனைத் தேவைகள், ஏற்றுமதிக்கான பேக்கேஜிங் & பிராண்டிங், சுங்க நடைமுறைகள் மற்றும் தளவாடங்கள் மற்றும் சரிவின்றி குளிர்ச்சியில் பொருட்களை கொண்டு செல்லும் முறைகளின் மேலாண்மை,

Related Articles

Related image1
சந்தோஷத்தில் ஆசிரியர்கள்.! நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு- வெளியான தேதி
Related image2
ரொம்ப கம்மி வட்டியில் 15 லட்சம் ரூபாய் வரை குழு கடன்- மகளிர் சுய உதவிக்குழுவிற்கு அடித்த ஜாக்பாட்
34
வேளாண் பொருட்கள் ஏற்றுமதி பயிற்சி
Image Credit : chandlervid85/Freepik

வேளாண் பொருட்கள் ஏற்றுமதி பயிற்சி

சந்தை ஆராய்ச்சி மற்றும் வாங்குபவர் அடையாளம் காணல், செலவு நிர்ணயம், விலை நிர்ணயம் மற்றும் ஏற்றுமதி நிதி, ஏற்றுமதி வணிக திட்டமிடல் மற்றும் அரசு திட்டங்கள், விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதியாளர்களிடமிருந்து அனுபவப் பகிர்வு போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும். 

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள விவசாயிகள் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் (FPOs), உணவு வணிக நிறுவனங்கள் (FBOs) மற்றும் தொழில்முனைவோர், ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 முதல் 65 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

44
பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம்
Image Credit : iSTOCK

பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம்

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் கைபேசி எண்கள். 8668102600 தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600 032. எனவே இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
விவசாயக் கடன்
விவசாயம்
விவசாயக் கடன்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
அதிமுகவிடம் பாஜககூட ஆட்சியில் பங்கு கேட்கலாம்... திமுகவுக்காக காங்கிரஸ் என்ன செய்தது..? நியாயம் சொல்லும் தராசு ஷ்யாம்..!
Recommended image2
மோடி, அமித்ஷா பருப்பு தமிழ்நாட்டில் வேகாது..! உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
Recommended image3
போட்ரா வெடிய.. இனி 6ம் வகுப்பு முதல் இலவச லேப்டாப்..! முதல்வர் அதிரடி அறிவிப்பு
Related Stories
Recommended image1
சந்தோஷத்தில் ஆசிரியர்கள்.! நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு- வெளியான தேதி
Recommended image2
ரொம்ப கம்மி வட்டியில் 15 லட்சம் ரூபாய் வரை குழு கடன்- மகளிர் சுய உதவிக்குழுவிற்கு அடித்த ஜாக்பாட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved