MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆன்மிக சுற்றுலா செல்ல 10ஆயிரம் ரூபாய்.! பணத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு

ஆன்மிக சுற்றுலா செல்ல 10ஆயிரம் ரூபாய்.! பணத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசு, சிறுபான்மையினரின் புனிதப் பயணங்களுக்கு நிதி உதவி அளிக்கிறது. புத்த, சமண, சீக்கிய மதத்தினர் பயன்பெறலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2025.

2 Min read
Author : Ajmal Khan
Published : Jul 23 2025, 09:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழக அரசின் ஆன்மிக சுற்றுலா
Image Credit : our own

தமிழக அரசின் ஆன்மிக சுற்றுலா

தமிழக அரசு ஆன்மீக சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் மூலம் நிதி உதவி வழங்கி வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆன்மீக பயணங்களை ஏற்பாடு செய்கின்றன. இந்து சமய அறநிலையத்துறை மூலம் ராமேஸ்வரம் முதல் காசி வரை இலவச ஆன்மீக சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சிறுபான்மையினர் ஆன்மிக சுற்றுலாவிற்கும் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது.

24
புனித பயணத்திற்கு நிதி உதவி
Image Credit : twitter

புனித பயணத்திற்கு நிதி உதவி

இது தொடர்பாக தமிழக அரசின் சிறுபான்மையினர் நல இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 புத்த மதத்தினர். 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.10000/- வீதம் 120 நபர்களுக்கு ரூபாய் 12 இலட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Related Articles

Related image1
ஆகஸ்டில் கொத்து கொத்தாக வரும் அரசு விடுமுறை.!! துள்ளிக்குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
Related image2
UPI வழியா பணம் அனுப்புறீங்களா? ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கேஷ்பேக்! ரூ.7500 வரை ஈசியா பெறலாம்
34
புனித தலங்களின் விவரம்
Image Credit : our own

புனித தலங்களின் விவரம்

புத்த மதம் 1. பீகாரில் உள்ள புத்த கயா, 2. உத்திரபிரதேசத்தில் உள்ள குசிநகர். 3. வாரணாசியில் உள்ள சாரநாத் கோவில், 4. பீகாரில் உள்ள ராஜ்கிர் வைஷாலி, 5. நேபாளத்தில் உள்ள லும்பினி போன்ற இடங்கள்.

சமண மதம் 1. இராஜஸ்தானில் உள்ள தில்வாரா கோவில், ரணக்பூர் சமண கோவில், ஜெய்சால்மர் சமண கோவில், 2. ஜார்கண்டில் உள்ள சிக்கர்ஜி 3. குஜராத்தில் உள்ள பாலிடனா, 4. பீகாரில் உள்ள பவபுரி சமண கோவில் போன்ற இடங்கள். 5. கர்நாடகாவில் சரவணபெலகோலா.

சீக்கிய மதம் -1. பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ், தக்ட் ஸ்ரீகேசகர் சாகிப், தக்ட் ஸ்ரீடாம்டமாசாகிப் 

2 பீகாரில் உள்ள தக்ட் ஸ்ரீ ஹர்மந்திர் சாகிப் (குரு கோவிந்த் சிங்). தக்ட் ஸ்ரீ ஹசூர் சாகிப் (மஹாராஷ்டிரா) போன்ற இடங்கள், 

3. பாகிஸ்தானிலுள்ள குருத்வாரா ஸ்ரீ நான்காணா சாகிப், குருத்வாரா ஸ்ரீ சச்சா சௌதா. மண்டி சுகர்கானா, குருத்வாரா ஸ்ரீ பஞ்ச சாகிப் ஹசன் அப்தல். குருத்வாரா ஸ்ரீ தெஹ்ரா சாகிப்

 இத்திட்டத்தின் கீழ் 01.07.2025க்கு பிறகு புனித பயணம் மேற்கொள்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

44
விண்ணப்பிக்க கடைசி தேதி
Image Credit : our own

விண்ணப்பிக்க கடைசி தேதி

இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 30.11.2025 எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
கோவில் நிகழ்வுகள்
சுற்றுலாத் தொகுப்பு
சுற்றுலா
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
ஆகஸ்டில் கொத்து கொத்தாக வரும் அரசு விடுமுறை.!! துள்ளிக்குதிக்கும் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
Recommended image2
UPI வழியா பணம் அனுப்புறீங்களா? ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கேஷ்பேக்! ரூ.7500 வரை ஈசியா பெறலாம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved