MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சென்னை தனி நீதிபதி விசாரணை குறித்து அதிருப்தி..! தவெக வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

சென்னை தனி நீதிபதி விசாரணை குறித்து அதிருப்தி..! தவெக வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

கரூரில் தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதியின் அதிகாரம் வரம்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Oct 13 2025, 12:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தவெக தலைவர் விஜய்
Image Credit : Asianet News

தவெக தலைவர் விஜய்

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சிறுவர்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூர் சம்பவத்திற்கு விஜய் ததான் காரணம் என ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். ஆனால் ஆளுங்கட்சியின் சதி இருப்பாக பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வந்தனர். இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

24
நீதிபதி செந்தில் குமார்
Image Credit : Asianet News

நீதிபதி செந்தில் குமார்

இதனிடையே அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோ'வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் குமார் தவெக தலைவர் விஜய் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதுமட்டுமல்லாமல் இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலை​மை​யில் சிறப்பு விசா​ரணைக் குழு அமைத்​தும் உத்​தர​விட்டிருந்​தார்.

Related Articles

Related image1
தமிழக அரசுக்கு அடி..! கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றம் -உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Related image2
ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் கைக்கூலியாக சிபிஐ இருக்கு..! விஜயை திருப்பி அடிக்கும் பூமராங்..!
34
உச்சநீதிமன்றம்
Image Credit : social media

உச்சநீதிமன்றம்

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட 5 பேர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு விசா​ரணைக் குழு அமைக்கப்பட்டு இருப்பது தவறு; வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

44
உச்ச நீதிமன்றம் கேள்வி
Image Credit : Asianet News

உச்ச நீதிமன்றம் கேள்வி

இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வரம்புக்குள் வரும் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி விசாரணை நடத்தியது குறித்து பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது. அதாவது கட்சிகள் பொதுக் கூட்டங்கள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தவெக எதிர் மனுதாரராக சேர்க்கப்படாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக எப்படி உத்தரவு பிறப்பித்தது? தலைமை நீதிபதியின் அனுமதியின்றி, மதுரை அமர்வில் நடைபெறும் வழக்கை, சென்னையில் உள்ள தனி நீதிபதி அமர்வு விசாரிக்க எந்த தேவையும் இல்லை. ரிட் குற்ற வழக்காக எப்படி பதிவு செய்து விசாரணை மேற்கொண்டீர்கள்? இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
உச்ச நீதிமன்றம்
tvk நெரிசல்
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
போட்ரா வெடிய.. இனி 6ம் வகுப்பு முதல் இலவச லேப்டாப்..! முதல்வர் அதிரடி அறிவிப்பு
Recommended image2
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image3
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Related Stories
Recommended image1
தமிழக அரசுக்கு அடி..! கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றம் -உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Recommended image2
ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் கைக்கூலியாக சிபிஐ இருக்கு..! விஜயை திருப்பி அடிக்கும் பூமராங்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved