ஆர்.எஸ்.எஸ்- பாஜகவின் கைக்கூலியாக சிபிஐ இருக்கு..! விஜயை திருப்பி அடிக்கும் பூமராங்..!
அந்த வீடியோவை வெளியிட்டுள்ள திமுக ஐடி விங், ‘‘பா.ஜ.க.விடம் தஞ்சம் அடைந்ததை தன் வாயாலேயே ஒப்புக்கொண்ட விஜய்’’ எனத் தெரிவித்துள்ளது.விஜயை திருப்பி அடிக்கும் பூமராங் ஆக மாறியுள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார கூட்டத்துக்கு வந்தோரில் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த வழக்கை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை நியமித்தது.
சென்னை உயர் நீதிமன்றம், வடக்கு மண்டல ஐ.ஜி.,அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது. அஸ்ரா கர்க்கும் கரூருக்குச் சென்று, உயிர் பலிக்கு காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்காத தவெக தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், விசாரணையை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற வேண்டும். அவர்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்க கூடாது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
இது குறித்து திமுக ஐடி விங், சிபிஐ விசாரணை குறித்து பேசிய பழைய வீடியோக்களை பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில்,
தவெக தலைவர் விஜய் கடந்த ஜூலை 13-ம் தேதி சென்னை, சேப்பாக்கத்தில் திருப்புவனம் அஜித்குமார் உள்ளிட்ட காவல் விசாரணையில் இறந்தவர்களுக்கு நீதி கோரி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், விஜய், முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசை கடுமையாக விமர்சித்தார். அவர், "தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. கடந்த 4 ஆண்டுகளில் 24 போலீஸ் நிலைய மரணங்கள் நடந்துள்ளன. அரசு இதற்கு பொறுப்பேற்கவில்லை.
ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கவின் கைப்பாவையாக சிபிஐ உள்ளது. அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு ஒப்படைத்து நீங்கள் ஏன் அவர்களின் பின்னால் ஒளிந்துகொள்கிறீர்கள்? சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியபோது தமிழக போலீஸுக்கு அவமானம் என்று சொன்னீர்கள். இப்போது அதே செயலைச் செய்கிறீர்கள். அரசியல் குடும்பங்கள் தமிழகத்தை கொள்ளை அடிக்கின்றன. காவல் துறை சுதந்திரமாக விசாரிக்கலாம். ஆனால், அரசு அது செய்ய அனுமதிக்கவில்லை" எனப்பேசி இருந்தார் விஜய்.
இந்நிலையில், அந்த வீடியோவை வெளியிட்டுள்ள திமுக ஐடி விங், ‘‘பா.ஜ.க.விடம் தஞ்சம் அடைந்ததை தன் வாயாலேயே ஒப்புக்கொண்ட விஜய்’’ எனத் தெரிவித்துள்ளது.விஜயை திருப்பி அடிக்கும் பூமராங் ஆக மாறியுள்ளது.
