MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரேஷன் கார்டு மாற்றம் செய்ய சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் தீர்வு! பொதுமக்களுக்கு அசத்தலான அறிவிப்பு

ரேஷன் கார்டு மாற்றம் செய்ய சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் தீர்வு! பொதுமக்களுக்கு அசத்தலான அறிவிப்பு

Ration Card: தமிழகத்தில் செப்டம்பர் 13ம் தேதி ரேஷன் அட்டை திருத்த முகாம் நடைபெறும். முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட சேவைகளைப் பெறவுள்ளது.

2 Min read
Author : Ajmal Khan
Published : Sep 11 2025, 12:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழகத்தில் ரேஷன் கார்டு பயன்கள்
Image Credit : Google

தமிழகத்தில் ரேஷன் கார்டு பயன்கள்

நாடு முழுவதும் ஏழை எழிய மக்களுக்கு உதவிடும் வகையில் நியாய விலைக்கடைகளில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பல கோடி குடும்பங்கள் பயன் அடைந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் 33,222 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

2.2 கோடி குடும்ப அட்டைகள் மூலம் சுமார் 7 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அரிசி, சக்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

24
ரேஷன் கார்டிற்காக காத்திருக்கும் மக்கள்
Image Credit : our own

ரேஷன் கார்டிற்காக காத்திருக்கும் மக்கள்

இது மட்டுமில்லாமல் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இயற்கை பேரிடர் காலங்களில் உதவித்தொகை போன்ற பல சலுகைகள் கிடைக்க ரேஷன் கார்டு முக்கிய தேவையாக உள்ளது. இதே போல தமிழகத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் உதவித்தொகை பெற ரேஷன் அட்டை முக்கிய அடையாள அட்டையாக உள்ளது. 

எனவே ரேஷன் அட்டை பெற பல லட்சம் பேர் விண்ணப்பித்து காத்துள்ளனர். இதனையடுத்து விண்ணப்பத்தின் உண்மை தன்மை ஆராய்ந்து புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

Related Articles

Related image1
விவசாயிகளுக்கு கோடிக்கணக்கில் மானியத்தை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு; பெறுவது எப்படி?
Related image2
இலவசமாக அரசு பேருந்தில் பயணம்.! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை சொன்ன போக்குவரத்து துறை
34
ரேஷன் கார்டு திருத்தம்
Image Credit : our own

ரேஷன் கார்டு திருத்தம்

இந்த சூழலில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய உணவு பொருள் வழங்கல் அலுவலகத்திற்கு தினந்தோறும் அலைய வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாதமும் வாரத்தின் இரண்டாவது சனிக்கிழமை ரேஷன் அட்டை திருத்த முகாமை நடத்தி வருகிறது. அந்த வகையில் வருகிற சனிக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெறவுள்ளது. 

அப்போது ரேஷன் கார்டில் முகவரியை மாற்றம் செய்தல், புதிய உறுப்பினர்களின் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல்,  தொலைபேசி எண் மாற்றுதல், தொலைபேசி எண் பதிவு செய்தல், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல், நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகளை இந்த முகாமில் பெறலாம்.

44
செப்டம்பர் 13ஆம் தேதி - சிறப்பு முகாம்
Image Credit : our own

செப்டம்பர் 13ஆம் தேதி - சிறப்பு முகாம்

இது மட்டுமில்லாமல் ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்படும் முதியோர்கள், உடல் ஊனமுற்றோர் போன்ற நபர்களுக்கு அரசு தரப்பில் சிறப்பு அங்கீகாரச் சான்று வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற சனிக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளது.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை மண்டல உதவி ஆணையர், வட்ட வழங்கல் அலுவலகங்களில் இந்த குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் கார்டுகளில் அப்டேட் செய்யுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
குடும்ப அட்டை
ரேஷன் கடை
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
நெருங்கும் தேர்தல்.. டெண்டர்களை அள்ளி வீசும் திமுக..! டிடிவி தினகரன் ஆவேசம்
Recommended image2
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Recommended image3
வெயிலுக்கு குட்பை.. 10 மாவட்டங்களில் பொளக்கப் போகும் மழை.. வானிலை மையத்தின் 'ஜில்' அப்டேட்!
Related Stories
Recommended image1
விவசாயிகளுக்கு கோடிக்கணக்கில் மானியத்தை அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு; பெறுவது எப்படி?
Recommended image2
இலவசமாக அரசு பேருந்தில் பயணம்.! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை சொன்ன போக்குவரத்து துறை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved