MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தொடர்ச்சியாக வரும் 2 நாள் விடுமுறை.! பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன போக்குவரத்துதுறை

தொடர்ச்சியாக வரும் 2 நாள் விடுமுறை.! பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன போக்குவரத்துதுறை

வரும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

2 Min read
Author : Ajmal Khan
Published : Jul 23 2025, 04:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பொதுமக்களுக்கு வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து
Image Credit : our own

பொதுமக்களுக்கு வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து

வார முழுவதும் வேலை பார்க்கும் மக்களுக்கு வார இறுதி நாட்கள் தான் கொண்டாட்டமாக அமையும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறைக்காக உறவினர்கள் வீட்டிற்கும், சுற்றுலாவிற்கும் பொதுமக்கள் செல்வார்கள். எனவே கடைசி நேர திட்டமிடலால் ரயில்களில் அனைத்து இடங்களும் நிரம்பி வழிந்த நிலையில் அரசு பேருந்து தான் கை கொடுக்கும். அந்த வகையில் வரும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

 இதனை தொடர்ந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 25/07/2025 (வெள்ளிக்கிழமை) 26/07/2025 (சனிக்கிழமை) 27/07/2025 (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

24
சென்னையில் இருந்து சிறப்பு பேருந்து
Image Credit : our own

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்து

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி. ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 25/07/2025 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 26/07/2025 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது .

 பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி,

Related Articles

Related image1
டோட்டலா மாறப்போகுது.! 190 கட்டிடத்திற்கு கீழே சுரங்கம்.! சென்னை மக்களுக்கு குஷி- மெட்ரோ ரயில் சாதனை
Related image2
ரேஷன், ஆதார் கார்டு போதும்.. பெண்களுக்கு ரூ.30 லட்சம் கடனை வாரி வழங்கும் தமிழக அரசு
34
கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையம்
Image Credit : our own

கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையம்

கோயம்புத்தூர். சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 25/07/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 320 பேருந்துகளும், 26/07/2025(சனிக்கிழமை) 330 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 25/07/2025 மற்றும் 26/07/2025 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,179 பயணிகளும் சனிக்கிழமை 2,530 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,124 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

44
முன்பதிவு செய்து பயணியுங்கள்
Image Credit : our own

முன்பதிவு செய்து பயணியுங்கள்

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
தமிழ்நாடு அரசு பேருந்து
அரசு பேருந்து

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
டோட்டலா மாறப்போகுது.! 190 கட்டிடத்திற்கு கீழே சுரங்கம்.! சென்னை மக்களுக்கு குஷி- மெட்ரோ ரயில் சாதனை
Recommended image2
ரேஷன், ஆதார் கார்டு போதும்.. பெண்களுக்கு ரூ.30 லட்சம் கடனை வாரி வழங்கும் தமிழக அரசு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved