MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • செங்கோட்டையனின் அடுத்த மூவ்! ஓபிஎஸ் வீடு தேடி சென்று ரகசிய மீட்டிங்!

செங்கோட்டையனின் அடுத்த மூவ்! ஓபிஎஸ் வீடு தேடி சென்று ரகசிய மீட்டிங்!

அதிமுகவில் இருந்து பதவி நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வத்தை ரகசியமாகச் சந்தித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அரசியல் நகர்வுகள் அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 Min read
Author : SG Balan
Published : Sep 25 2025, 08:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
செங்கோட்டையன் அடுத்த மூவ்
Image Credit : google

செங்கோட்டையன் அடுத்த மூவ்

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததால் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டதால், அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ்.ஸின் தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன், ஈ.பி.எஸ்ஸிடம் வலியுறுத்தியதோடு, அதற்குக் காலக்கெடுவும் விதித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது கட்சிப் பொறுப்புகள் அதிரடியாகப் பறிக்கப்பட்டன.

23
ஓ.பி.எஸ் - செங்கோட்டையன் ரகசியச் சந்திப்பு
Image Credit : Google

ஓ.பி.எஸ் - செங்கோட்டையன் ரகசியச் சந்திப்பு

செங்கோட்டையன் தினகரனைச் சந்தித்ததாகக் கூறப்பட்டதை மறுத்த நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை அவர் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு நண்பரின் வீட்டில் இந்தச் சந்திப்பு நடந்ததாகவும், சுமார் இரண்டு மணி நேரம் ஓ.பி.எஸ்ஸும், செங்கோட்டையனும் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இரு தலைவர்களும் அதிமுகவின் ஒருங்கிணைப்பு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்தச் சந்திப்புக் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அதிமுகவில் பொறுப்புகள் பறிக்கப்பட்ட பிறகு செங்கோட்டையன் எடுத்துள்ள இந்த நகர்வு, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Related image1
Now Playing
செங்கோட்டையன் விரும்பினால் நிச்சயம் அவரை சந்தித்துப் பேசுவேன் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
Related image2
டிடிவியை தொடர்ந்து அண்ணாமலைக்கு ஷாக் கொடுத்த ஓபிஎஸ்.. பாஜகவுக்கு ஒரே வார்த்தையில் பதில்!
33
டிடிவி தினகரனைச் சந்தித்தாரா?
Image Credit : Asianet News

டிடிவி தினகரனைச் சந்தித்தாரா?

பதவி பறிக்கப்பட்டதையடுத்து, செங்கோட்டையன் தனது சொந்த ஊரான கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள இல்லத்தில் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும் அமமுகவினர் சிலரும் பங்கேற்றதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், நேற்று (செப். 24) அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை செங்கோட்டையன் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதாகவும், இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால், இந்தத் தகவலைச் செங்கோட்டையன் மறுத்துவிட்டார்.

இன்று கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “சென்னையில் அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை. அதிமுகவின் ஒருங்கிணைப்புக் குறித்து யாரிடமும் நான் பேசவில்லை. அதுபோன்ற செய்திகள் வந்தவுடன் பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு இதுகுறித்து விளக்கமளித்தேன். நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்தார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
செங்கோட்டையன்
ஓ. பன்னீர்செல்வம் - அதிமுக
எடப்பாடி பழனிசாமி
டிடிவி தினகரன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மதுபிரியர்களுக்கு பேரிடி.. தமிழகம் முழுவதும் பிப்ரவரி 18 முதல் டாஸ்மாக் மூடல்.. காரணம் இதுதான்!
Recommended image2
நெருங்கும் தேர்தல்.. டெண்டர்களை அள்ளி வீசும் திமுக..! டிடிவி தினகரன் ஆவேசம்
Recommended image3
கிடைத்தவரை வாரி சுருட்டும் திமுக.. அவசர அவசரமாக 50 குவாரிகள் ஏலம்.. விளாசும் அன்புமணி
Related Stories
Recommended image1
Now Playing
செங்கோட்டையன் விரும்பினால் நிச்சயம் அவரை சந்தித்துப் பேசுவேன் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
Recommended image2
டிடிவியை தொடர்ந்து அண்ணாமலைக்கு ஷாக் கொடுத்த ஓபிஎஸ்.. பாஜகவுக்கு ஒரே வார்த்தையில் பதில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved